சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Nissan Magnite ஃபேஸ்லிஃப்ட் சோதனை செய்யப்படும் போது முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது

published on மார்ச் 21, 2024 04:25 pm by rohit for நிசான் மக்னிதே

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மேக்னைட் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  • நிஸான் நிறுவனம் கடந்த 2020 ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் ‘மேக்னைட்’ காரை விற்பனைக்கு கொண்டு வந்தது.

  • ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எஸ்யூவி அப்டேட்டட் அலாய் வீல் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்பதை ஸ்பை ஷாட்கள் காட்டுகின்றன.

  • மேலும் புதிய வடிவிலான பம்பர்கள் மற்றும் புதிய லைட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • கேபின் இன்னும் படம் பிடிக்கப்படவில்லை ஆனால் அது ஒரு புதிய அமைப்புடன் வரலாம்.

  • ஃபேஸ்லிஃப்ட்டில் உள்ள கூடுதல் அம்சங்களில் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் இருக்கலாம்.

  • தற்போதைய மாடலின் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் மற்றும் டர்போ-பெட்ரோல் இன்ஜின்கள் அதே டிரான்ஸ்மிஷன்களுடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிஸான் மேக்னைட் இறுதியாக மிட்லைட் அப்டேட்டை பெற தயாராக உள்ளது. சமீப காலமாக சோதனை செய்யபட்டு வரும் நிஸான் மேக்னைட் காரின் படங்கள் முதல் தொகுப்பு படங்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளன. மேக்னைட் இந்தியாவில் அறிமுகமாகி டிசம்பர் 2024 -க்குள் நான்கு ஆண்டுகளை ஆகின்றது. எனவே இந்த அப்டேட் எஸ்யூவி நடைமுறை டைம்லைனை பின்பற்றுவதை போல தெரிகிறது.

ஸ்பை ஷாட்கள் எதைக் காட்டுகின்றன?

சோதனை காரின் வெளிப்புறம் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்தாலும் கூட எஸ்யூவி -யின் வடிவம் நிஸான் மேக்னைட் என அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எஸ்யூவி -யின் ஸ்பை படங்களின் முதல் தொகுப்பு எஸ்யூவி ஒட்டுமொத்தமாக அதே தோற்றத்தை கொண்டிருப்பதைக் காட்டுகிறது. மேலும் புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்களை நாம் பார்க்கலாம். நிஸான் புதிய வடிவிலான விளக்குகள் மற்றும் புதிய வடிவிலான பம்பர்கள் உட்பட பெரும்பாலும் முன்பக்கத்தின் வடிவமைப்பை புதிதாக கொடுக்கலாம்.

எதிர்பார்க்கப்படும் கேபின் மற்றும் புதிய வசதிகள்

ஸ்பை ஷாட்கள் புதுப்பிக்கப்பட்ட மேக்னைட் காரின் கேபினை காட்டவில்லை என்றாலும் சப்-4m எஸ்யூவி பிரிவில் போட்டியைத் தக்கவைப்பதற்காக சில கூடுதல் வசதிகளுடன் புதிய சீட் அப்ஹோல்ஸ்டரியை கொண்டிருக்கும். இதில் ஒரு சன்ரூஃப் ஒரு ஆட்டோ டிம்மிங் IRVM மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகளும் அடங்கும். இது 8 இன்ச் டச் ஸ்கிரீன், டிரைவருக்கான 7 இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் ஆப்ஷனலான வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் போன்ற வழக்கமான வசதிகளுடன் தொடரலாம்.

ஏற்கனவே 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவற்றுடன் வரும் 2024 மேக்னைட்டின் பாதுகாப்பு வசதிகளில் 6 ஏர்பேக்குகள் புதிதாக சேர்க்கப்படலாம்.

மேலும் படிக்க: இந்தியாவில் குரூஸ் கன்ட்ரோலுடன் கிடைக்கும் விலை குறைவான 10 கார்கள் இவை

இன்ஜின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் இல்லை

மேக்னைட்டின் இன்ஜின்-கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் நிஸான் எந்த மாற்றத்தையும் செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சப்-4m எஸ்யூவி தற்போது பின்வரும் தேர்வுகளுடன் வழங்கப்படுகிறது:

விவரங்கள்

1-லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல்

1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

பவர்

72 PS

100 PS

டார்க்

96 Nm

160 Nm, 152 Nm

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT 5-ஸ்பீடு AMT

5-ஸ்பீடு MT CVT

2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மேக்னைட்டுக்கு 5-ஸ்பீடு AMT ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் கொடுக்கப்பட்டது. அதன் டர்போ-பெட்ரோல் யூனிட் ஆனது எஸ்யூவி 2020 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து CVT ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் கொடுக்கப்பட்டு வருகின்றது.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் விலை

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நிஸான் மேக்னைட் 2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் தற்போதைய மாடலை விட சற்றே கூடுதலாக விலையில் விற்பனைக்கு வரும் என நாங்கள் நம்புகிறோம் இதன் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.11.27 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கலாம். ஹூண்டாய் வென்யூ, ரெனால்ட் கைகர், டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட் மற்றும் மஹிந்திரா XUV300 வரவிருக்கும் ஸ்கோடா சப்-4எம் எஸ்யூவி ஆகியவற்றுடன் போட்டியிடலாம். ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மேக்னைட் மாருதி ஃப்ரான்க்ஸ் சப்-4மீ கிராஸ்ஓவர் காருக்கு மாற்றாக செயல்படும்.

பட ஆதாரம்

மேலும் படிக்க: மேக்னைட் AMT

r
வெளியிட்டவர்

rohit

  • 13 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது நிசான் மக்னிதே

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை