நிலுவையில் உள்ள மாருதி நிறுவனத்தின் ஆர்டர்களில் பாதிக்கு மேல் உள்ளவை CNG கார்கள் ஆகும்
published on மே 07, 2024 03:33 pm by rohit for மாருதி எர்டிகா
- 166 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாருதியின் நிலுவையில் உள்ள CNG ஆர்டர்களில் எர்டிகா CNG -க்கான ஆர்டர்கள் மட்டும் சுமார் 30 சதவிகிதம் ஆகும்.
சமீபத்தில் நடைபெற்ற மாருதி சுஸூகி முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டு இறுதிக்குள் 1.11 லட்சம் சிஎன்ஜி கார்கள் டெலிவரி செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மாருதி இன்னும் 2 லட்சம் ஆர்டர்களை நிலுவையில் வைத்துள்ளது.
தற்சமயம் நிலுவையில் உள்ள ஆர்டர்கள்
இந்த கூட்டத்தின் போது நிலுவையில் உள்ள மொத்த சிஎன்ஜி ஆர்டர்களில் சுமார் 30 சதவீதம் மாருதி எர்டிகா எம்பிவி ஆர்டர்களுக்கானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “ சிஎன்ஜி சந்தையில் எர்டிகா கார் மக்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு முக்கிய கார் ஆகும். எனவே மானேசர் தொழிற்சாலையின் 100,000 கார் உற்பத்தி திறன் பெரும்பாலும் எர்டிகா விநியோக தடையை சரி செய்ய பயன்படுத்தப்படுகின்றது” என மாருதி சுஸூகியின் சீப் இன்வெஸ்டர் ரிலேஷன்ஸ் அதிகாரி ராகுல் பார்தி தெரிவித்துள்ளார்.
நவம்பர் 2023 மாதத்தில் மாருதி சுஸூகியின் மூத்த நிர்வாக அதிகாரி (விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்) ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா சிஎன்ஜி விற்பனையில் 50 சதவிகிதம் எர்டிகாவில் இருந்து வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
சமீபத்தில் டொயோட்டாவும் எர்டிகா அடிப்படையிலான ரூமியான் எம்பிவி -யின் CNG வேரியன்ட்களுக்கான முன்பதிவுகளை மீண்டும் திறந்தது
CNG விற்பனை விவரங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள்
கடந்த நிதியாண்டில் மாருதி சுமார் 4.5 லட்சம் சிஎன்ஜி மாடல்களை தொழிற்சாலையில் இருந்து வெளியே அனுப்பியது. தற்போது நடப்பு நிதியாண்டில் 6 லட்சம் யூனிட்களை விற்பனை செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது. மேலும் வளர்ந்து வரும் தேவையை நிவர்த்தி செய்ய CNG மாடல்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மாருதி உறுதிப்படுத்தியுள்ளது. சில சப்ளை-செயின் சிக்கல்கள் இருப்பதை மாருதி நிறுவனம் ஒப்புக்கொண்டாலும் சூழ்நிலை இப்போது மேம்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: மாருதி சுஸூகி, ஹூண்டாய் மற்றும் டாடா ஆகியவை 2024 ஏப்ரல் மாதத்தில் அதிகம் விற்பனையான கார் பிராண்டுகளாகும்
மேலும் படிக்க: மாருதி எர்டிகா ஆன் ரோடு விலை