மலைப்பாங்கான நிலப்பரப்பில் சோதனையின் போது படம் பிடிக்கப்பட்ட ுள்ள புதிய தலைமுறை Kia Carnival கார்
published on ஜூன் 17, 2024 05:47 pm by dipan for க்யா கார்னிவல்
- 27 Views
- ஒரு கருத்தை எழுதுக
முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் படம்பிடிக்கப்பட்டுள்ள ஃபேஸ்லிஃப்ட் கார்னிவல் கியா EV9 போன்ற புதிய ஹெட்லைட் வடிவமைப்பைப் பெறுகிறது.
-
கியா கார்னிவல் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறை மலைப்பகுதிகளில் சோதனை செய்யப்பட்டது.
-
இது 2024 ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெரிய கிரில்லுடன் முன் முனையில் புதிய ஸ்டைலிங் உட்பட வெளிப்புற வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
-
முன்பை விட அதிக தொழில்நுட்பத்துடன், குளோபல் மாடலை போலவே உட்புறமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வரவிருக்கும் புதிய தலைமுறை கார்னிவல் விலை ரூ. 30 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கியா கார்னிவல் விற்பனை 2023 -ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இப்போது புதிய அவதாரத்தில் மீண்டும் விற்பனைக்கு திரும்ப உள்ளது. அதன் அறிமுகத்திற்கு முன்னதாக பிரீமியம் MPV சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த முறை ஹிமாச்சல பிரதேசத்தின் உயரமான பகுதிகளில் சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது. புதிய ஜென் இந்தியா-ஸ்பெக் கியா கார்னிவலின் அறிமுகத்திற்காக காத்திருக்கும் போது, இந்த சோதனை காரில் நாம் பார்த்த விஷயங்கள் இங்கே.
புதிதாக என்ன உள்ளது
சமீபத்திய ஸ்பை ஷாட்களில் காரின் உருவம் மறைக்கப்பட்டிருந்தாலும் கூட வரவிருக்கும் MPV -யின் முன்-இறுதி வடிவமைப்பைப் பற்றிய விரிவான விவரத்தை வழங்குகிறது. கியா EV9 போன்றே L-வடிவ LED டேடைம் ரன்னிங் லைட்களுடன் (DRLs) இது ஒரு புதிய LED ஹெட்லைட் செட்டப்பை கொண்டுள்ளது தெரிய வருகிறது. விற்பனையில் இருந்த பழைய கார்னிவலை காட்டிலும் முன்பக்கமானது பெரிதாகவும், நிமிர்ந்த வகையிலும் அகலமான கிரில்லுடனும் உள்ளது.
MPV -யின் பக்கவாட்டு மற்றும் பின்புற விவரங்கள் மறைக்கப்பட்டிருந்தாலும், முந்தைய சோதனை காரில் சில விவரங்கள் தெரிய வந்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், முன்பக்கத்தில் பிரஷ் செய்யப்பட்ட அலுமினிய ஸ்கிட் பிளேட் இருப்பதை பார்க்க முடிந்தது, அது இந்த சோதனைக் காரில் மறைக்கப்பட்டிருக்கவோ அல்லது அடியில் மறைந்தோ போயிருக்கலாம். அதை பற்றி இங்கே படியுங்கள்.
எதிர்பார்க்கப்படும் உட்புறங்கள் மற்றும் வசதிகள்
வரவிருக்கும் இந்தியா-ஸ்பெக் கியா கார்னிவலின் உட்புறங்களை நாங்கள் பார்க்கவில்லை என்றாலும் கூட தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு உலகளாவிய மாடலை போலவே இருக்கவே வாய்ப்புள்ளது. எனவே, இது இரண்டு 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்களை ஒருங்கிணைக்கும் ஒரு கர்வ்டு கிளாஸ் பேனலை இந்த கார் கொண்டிருக்க வேண்டும். கூடுதலாக இது ஒரு பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வென்டிலேட்டட் மற்றும் பவர்டு சீட்கள், புதிய வடிவிலான ஏசி வென்ட்கள் கொண்ட 3-ஜோன் ஆட்டோ ஏசி சிஸ்டம் மற்றும் இரண்டாவது வரிசை பயணிகளுக்கு இரண்டு ஸ்கிரீன்கள் கொண்ட பின் இருக்கை இன்ஃபோடெயின்மென்ட் பேக்கேஜ் ஆகியவை கொடுக்கப்படலாம்.
இன்ஜின் மற்றும் செயல்திறன்
இந்தியாவிற்கான புதிய தலைமுறை கார்னிவலின் பவர்டிரெய்ன் விவரங்கள் தொடர்பாக கியாவிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும். இது ஒரு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷனுடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். உலகளவில் இது 3.5-லிட்டர் V6 பெட்ரோல் (287 PS/353 Nm) மற்றும் 1.6-லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் (242 PS/367 Nm) ஆகியவற்றைப் பெறுகிறது. பழைய கார்னிவல் 2.2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் (200 PS/ 440 Nm) 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைத்தது.
விலை மற்றும் போட்டியாளர்கள்
2024 கியா கார்னிவல் காரின் விலை ரூ. 30 லட்சத்துக்கு மேல் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம். இது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் -க்கு ஒரு பிரீமியம் மாற்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டொயோட்டா வெல்ஃபயர் மற்றும் லெக்ஸஸ் LM போன்ற சொகுசு MPVகளை விட குறைவான விலை கொண்ட மாற்றாக இருக்கும்.
0 out of 0 found this helpful