மஹிந்திரா -வின் புதிய XUV400 EL Pro வேரியன்ட் 15 படங்களில் விளக்கப்பட்டுள்ளது
மஹிந்திரா XUV400 EV -யின் புதிய ப்ரோ வேரியன்ட்டுகளின் விலை முன்பு இருந்த வேரியன்ட்களை விட ரூ. 1.5 லட்சம் வரை குறைவாக உள்ளது.
மஹிந்திரா XUV400 EV, முன்பு இருந்த அதே வேரியன்ட் வரிசை EC மற்றும் EL இல் இன்னும் கிடைக்கிறது, கூடுதலாக இப்போது 'Pro' என்ற பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட டாஷ்போர்டு வடிவமைப்பு, பெரிய டச் ஸ்கிரீன் மற்றும் டிரைவருக்கான ஆல் டிஜிட்டல் டிஸ்பிளே ஆகியவற்றை குறிப்பிடத்தக்க மாற்றங்களாக சொல்லலாம். இந்தக் கட்டுரையில், XUV400 EVயின் டாப்-ஸ்பெக் EL Pro வேரியன்ட்டை 15 படங்களில் விவரித்துள்ளோம்.
XUV400 EV ப்ரோ வேரியன்ட்டில் வெளிப்புறத்தில் மஹிந்திரா பெரிய வடிவமைப்பில் பெரிதான எந்த மாற்றங்களையும் செய்யவில்லை. அதன் முன்பக்க இன்னும் மூடிய கிரில் அமைப்பே உள்ளது மற்றும் ப்ரொஜெக்டர் ஹெட்லைட்களில் LED DRL -களில் காப்பர் இன்செர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பக்கவாட்டில், இந்த புதிய வேரியன்ட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை. பின்புறத்தில், முன்பு போலவே LED டெயில் லேம்ப்கள் உள்ளன. ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் டெயில்கேட்டில் EV பேட்ஜ் மட்டுமே வெளியில் உள்ள மாற்றங்கள் ஆகும்.
இதையும் பார்க்கவும்: Tata Punch EV டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேஸ் மற்றும் புதுப்பிக்கப்பட்ட சென்டர் கன்சோலை பெறுகின்றது
மஹிந்திரா எலக்ட்ரிக் எஸ்யூவியின் உட்புறத்தில்தான் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது. டேஷ்போர்டு வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது, புதிய வடிவிலான சென்டர் ஏசி வென்ட்களுடன் புதிய சென்டர் கன்சோல் மற்றும் லெதரால் கவர் செய்யப்பட்ட பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீலை கொண்டுள்ளது. டாஷ்போர்டின் கோ-டிரைவரின் பக்கத்தில், ஸ்டோரேஜ் பகுதி பியானோ பிளாக் இன்செர்ட் உடன் மாற்றப்பட்டுள்ளது.
XUV400 EV EL Pro வேரியன்ட் இப்போது ஒரு பெரிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் செட்டப்பை கொண்டுள்ளது. கிளைமேட் கன்ட்ரோல் பேனல் அப்டேட் செய்யப்பட்டு, இப்போது டூயல் ஜோன் செயல்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் பார்க்கவும்: மாருதி eVX எலக்ட்ரிக் SUV 2024 ஆம் ஆண்டின் இறுதியில் வரும் என உறுதி செய்யப்பட்டது
கிளைமேட் கன்ட்ரோல் பேனலுக்கு கீழே இரண்டு சார்ஜிங் போர்ட்கள் மற்றும் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் உள்ளது. டிரைவ் மோட் செலக்டர் லீவர் முன்பு போலவே உள்ளது, அதன் பின்னால் இரண்டு கப் ஹோல்டர்களும் வழங்கப்பட்டுள்ளன.
மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றம் மஹிந்திரா XUV700 -லிருந்து கடன் வாங்கப்பட்ட புதிய 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே ஆகும். இந்த டிரைவரின் டிஸ்ப்ளேவை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைத்து, ஆண்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார்ப்ளே வழியாக மேப் வசதியை பயன்படுத்தலாம்.
அப்ஹோல்ஸ்டரி முழுக்க முழுக்க பிளாக் தீமில் இருந்து பிளாக் மற்றும் பெய்ஜ் நிற தீம் கொடுக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சன்ரூஃப் மற்றும் உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை போன்ற வசதிகள் அப்படியே உள்ளன.
தற்போதுள்ள அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்களுடன், பின்புறத்தில் அமர்ந்திருப்பவர்கள் இப்போது ஏசி வென்ட்களையும் பெறுகிறார்கள்.
இரண்டாவது வரிசை பயன்படுத்தப்படுவதால், XUV400 EV ஆனது 378 லிட்டர் பூட் இடத்தை வழங்குகிறது. கூடுதல் இட வசதிக்காக இருக்கைகளை 60:40 என்ற விகிதத்தில் ஸ்பிளிட் செய்து கொள்ளலாம்.
XUV400 EV EL Pro வேரியன்ட் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை வழங்குகிறது: 34.5 kWh மற்றும் 39.4 kWh. இவை 375 கி.மீ மற்றும் 456 கி.மீ ரேஞ்சை கொடுக்கின்றன. இந்த பேட்டரிகள் 150 PS மற்றும் 310 Nm அவுட்புட்டை கொடுக்கும் சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளன.
விலை போட்டியாளர்கள்
மஹிந்திரா XUV400 EV இப்போது ரூ. 15.49 லட்சம் முதல் ரூ. 17.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) விலையில் உள்ளது. டாடா நெக்ஸான் EV -க்கு க்கு போட்டியாக இது தொடர்கிறது. MG ZS EV மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் ஆகிய கார்களுக்கு ஒரு விலை குறைவான மாற்றாகவும் இருக்கும்.
மேலும் படிக்க: மஹிந்திரா XUV400 EV ஆட்டோமெட்டிக்