• English
    • Login / Register

    MY25 Maruti Grand Vitara இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

    dipan ஆல் ஏப்ரல் 08, 2025 07:45 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    15 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    MY25 கிராண்ட் விட்டாராவின் ஆல்-வீல் டிரைவ் (ஏடபிள்யூடி) வேரியன்ட் இப்போது டொயோட்டா ஹைரைடர் போன்ற ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது.

    • மேம்படுத்தப்பட்ட டிரைவர் சீட், 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் பின்புற ஜன்னல் சன்ஷேடுகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

    • இது ஜெட்டா, ஜெட்டா பிளஸ், ஆல்பா மற்றும் ஆல்பா பிளஸ் வேரியன்ட்களின் அடிப்படையிலான புதிய ஆப்ஷனலான வேரியன்ட்களையும் பெறுகிறது. இது பனோரமிக் சன்ரூஃப் வேரியன்ட்டை மிகவும் விலை குறைவானதாக மாற்றுகிறது.

    • இது ஒரு ஸ்ட்ராங் ஹைபிரிட் இன்ஜினுடன் புதிய டெல்டா பிளஸ் வேரியன்ட்டை பெறுகிறது. இதன் மூலம் பவர்டிரெய்ன் ஆப்ஷனை ரூ. 1.5 லட்சத்திற்கும் அதிகமாக செலுத்தி வாங்க முடியும்.

    • 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்களின் புதிய தொகுப்பை தவிர வெளிப்புற வடிவமைப்பு மாறாமல் உள்ளது.

    • இப்போது விலை ரூ.11.42 லட்சம் முதல் ரூ.20.68 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.

    டொயோட்டா ஹைரைடர், மாருதி கிராண்ட் விட்டாரா அதன் MY25 (மாடல் ஆண்டு 2025) அப்டேட்டை பெற்றுள்ளது. இது இப்போது ஏடபிள்யூடி ஆப்ஷன் உடன் 6-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனை பெறுகிறது. இந்த அப்டேட் ஆனது புதிய டூயல்-டோன் 17-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் பவர்டு ஓட்டுனர் இருக்கை மற்றும் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) உள்ளிட்ட வசதிகளுடன் வருகிறது. இதனுடன் கிராண்ட் விட்டாராவின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் இங்கே:

    புதிய விலை

    Maruti Grand Vitara driving

    வேரியன்ட்

    புதிய விலை

    பழைய விலை

    வித்தியாசம்

    எஃப்டபிள்யூடி செட்டப் உடன் 1.5 லிட்டர் மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின்

    சிக்மா எம்டி

    ரூ.11.42 லட்சம்

    ரூ.11.19 லட்சம்

    + ரூ 23,000

    டெல்டா எம்டி

    ரூ.12.53 லட்சம்

    ரூ.12.30 லட்சம்

    + ரூ 23,000

    டெல்டா ஏடி

    ரூ.13.93 லட்சம்

    ரூ.13.70 லட்சம்

    + ரூ 23,000

    ஜீட்டா எம்டி

    ரூ.14.67 லட்சம்

    ரூ.14.26 லட்சம்

    + ரூ 41,000

    ஜெட்டா ஏடி

    ரூ.16.07 லட்சம்

    ரூ.15.66 லட்சம்

    + ரூ 41,000

    ஜெட்டா(ஓ) எம்டி

    ரூ.15.27 லட்சம்

    புதிய வேரியன்ட்

    ஜெட்டா (ஓ) ஏடி 

    ரூ.16.67 லட்சம்

    புதிய வேரியன்ட்

    ஆல்பா எம்டி

    ரூ.16.14 லட்சம்

    ரூ.15.76 லட்சம்

    + ரூ. 38,000

    ஆல்பா ஏடி

    ரூ.17.54 லட்சம்

    ரூ.17.16 லட்சம்

    + ரூ. 38,000

    ஆல்பா (ஓ) ஏடி

    ரூ.16.74 லட்சம்

    புதிய வேரியன்ட்

    ஆல்பா (ஓ) ஏடி

    ரூ.18.14 லட்சம்

    புதிய வேரியன்ட்

    ஆல் வீல் டிரைவ் செட்டப் உடன் 1.5 லிட்டர் மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின்

    ஆல்பா ஏடபிள்யூடி MT

    ரூ.17.02 லட்சம்

    நிறுத்தப்பட்டது

    ஆல்பா ஏடபிள்யூடி AT

    ரூ.19.04 லட்சம்

    புதிய வேரியன்ட்

    ஆல்பா (O) ஏடபிள்யூடி AT

    ரூ.19.64 லட்சம்

    புதிய வேரியன்ட்

    1.5-லிட்டர் ஸ்ட்ராங்-ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் (எஃப்டபிள்யூடி அமைப்பில் மட்டுமே கிடைக்கும்)

    டெல்டா பிளஸ் இ-சிவிடி

    ரூ.16.99 லட்சம்

    புதிய வேரியன்ட்

    ஜெட்டா பிளஸ் இ-சிவிடி

    ரூ.18.60 லட்சம்

    ரூ.18.58 லட்சம்

    + ரூ 2,000

    ஜெட்டா பிளஸ் (O) இ-சிவிடி

    ரூ.19.20 லட்சம்

    புதிய வேரியன்ட்

    ஆல்பா பிளஸ் இ-சிவிடி

    ரூ.19.92 லட்சம்

    ரூ.19.99 லட்சம்

    (- ரூ 7,000)

    ஆல்பா பிளஸ் (O) e-CVT

    ரூ.20.68 லட்சம்

    புதிய வேரியன்ட்

    அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை

    மாருதி கிராண்ட் விட்டாரா, ஜெட்டா, ஜெட்டா பிளஸ், ஆல்பா மற்றும் ஆல்பா பிளஸ் வேரியன்ட்களுக்கான புதிய ஆப்ஷனலான (O) வேரியன்ட்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இப்போது பனோரமிக் சன்ரூஃப் இன்னும் அணுகக்கூடியதாக உள்ளது. இது ஒரு ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜினுடன் புதிய டெல்டா பிளஸ் வேரியன்ட்டை பெறுகிறது..

    மாருதி கிராண்ட் விட்டாரா சிஎன்ஜி ஆப்ஷன் உடன் வருகிறது. அதன் விலை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. 

    மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா மாருதி ஸ்விஃப்ட் மற்றும் ஃபிரான்க்ஸை பின்னுக்குத் தள்ளி 2025 மார்ச் மாதம் சிறந்த விற்பனையாகும் காராக மாறியது

    மாருதி கிராண்ட் விட்டாரா: பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

    Maruti Grand Vitara engine

    மைல்ட்-ஹைப்ரிட் மற்றும் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிராண்ட் விட்டாரா பெட்ரோல்+சிஎன்ஜி ஆப்ஷனையும் வழங்குகிறது. இந்த பவர்டிரெய்ன் ஆப்ஷன்களின் விரிவான விவரங்கள் பின்வருமாறு:

    இன்ஜின்

    1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின்

    1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின்

    1.5 லிட்டர் பெட்ரோல் + சிஎன்ஜி ஆப்ஷன்

    பவர்

    103 PS

    116 PS (ஒருங்கிணைந்தது)

    88 PS

    டார்க்

    137 Nm

    141 Nm (ஹைபிரிட்)

    121.5 Nm

    டிரான்ஸ்மிஷன்

    5-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT

    e-CVT

    5-ஸ்பீடு MT

    டிரைவ்டிரெய்ன்*

    எஃப்டபிள்யூடி / ஏடபிள்யூடி (AT மட்டும்)

    எஃப்டபிள்யூடி

    எஃப்டபிள்யூடி

    *எஃப்டபிள்யூடி = ஃபிரன்ட் வீல் டிரைவ்; ஏடபிள்யூடி = ஆல்-வீல் டிரைவ்

    MY25 அப்டேட் ஏடபிள்யூடி செட்டப் உடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கிராண்ட் விட்டாராவை வழங்கியுள்ளது. முன்னதாக இந்த டிரைவ்டிரெய்ன் ஆப்ஷன் ஒரு மேனுவல் செட்டப்பில் மட்டுமே கிடைத்தது. அது இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. செயல்திறன் புள்ளிவிவரங்கள் மற்றும் பிற பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுக்கான கியர்பாக்ஸ் தேர்வுகள் உட்பட மற்ற அனைத்தும் மாறாமல் இருக்கும்.

    மாருதி கிராண்ட் விட்டாரா: புதிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம்

    Maruti Grand Vitara cabin

    சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட டொயோட்டா ஹைரைடரை போலவே, 2025 கிராண்ட் விட்டாராவும் 8-வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுநர் இருக்கை, டிஜிட்டல் டிஸ்ப்ளே கொண்ட ஏர் ஃபியூரிபையர், பின்புற ஜன்னல் சன்ஷேடுகள் மற்றும் எல்இடி கேபின் லைட்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது. இது 9 இன்ச் டச் ஸ்கிரீன், டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பின்புற வென்ட்கள் கொண்ட ஆட்டோ ஏசி, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD), வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்குடன் (ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களுடன் மட்டும்) மேம்படுத்தப்பட்டுள்ளது. காம்பாக்ட் எஸ்யூவியில் 360 டிகிரி கேமரா, ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் தொடர்ந்து கிடைக்கும்.

    மாருதி கிராண்ட் விட்டாரா: போட்டியாளர்கள்

    மாருதி கிராண்ட் விட்டாரா ஆனது மற்ற காம்பாக்ட் எஸ்யூவி -களான ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Maruti கிராண்டு விட்டாரா

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience