MY2025 அப்டேட் மூலமாக Kia Seltos -ல் மூன்று புதிய வேரியன்ட்கள் கிடைக்கும்
இந்த அப்டேட் மூலமாக கியா செல்டோஸின் விலை இப்போது ரூ 11.13 லட்சம் முதல் ரூ 20.51 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.
கியா செல்டோஸ் காரின் விலை ரூ.28,000 வரையில் உயர்த்தப்பட்டது. மேலும் கிராவிட்டி எடிஷனும் நிறுத்தப்பட்டதோடு HTE (O), HTK (O) மற்றும் HTK பிளஸ் (O) என மூன்று புதிய லோவர்-ஸ்பெக் வேரியன்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய வேரியன்ட்கள் இப்போது ஹையர் வேரியன்ட்களில் கிடைத்த சில வசதிகளை இன்னும் எளிமையாக அணுகக்கூடியதாக ஆக்குகின்றன.
விலை விவரங்கள்:
வேரியன்ட் |
விலை |
HTE (O) 1.5 N/A பெட்ரோல் MT |
ரூ.11.13 லட்சம் |
HTK (O) 1.5 N/A பெட்ரோல் MT |
ரூ.13 லட்சம் |
HTK பிளஸ் (O) 1.5 N/A பெட்ரோல் MT |
ரூ.14.40 லட்சம் |
HTK பிளஸ் (O) 1.5 N/A பெட்ரோல் CVT |
ரூ.15.76 லட்சம் |
HTE (O) 1.5 டீசல் MT |
ரூ.12.71 லட்சம் |
HTK (O) 1.5 டீசல் MT |
ரூ.14.56 லட்சம் |
HTK பிளஸ் (O) 1.5 டீசல் MT |
ரூ.15.96 லட்சம் |
HTK பிளஸ் (O) 1.5 டீசல் AT |
ரூ.17.22 லட்சம் |
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை
புதிய வேரியன்ட்கள் பெறும் அனைத்தையும் இங்கே பார்ப்போம்.
புதிய வேரியன்ட்கள் என்ன கிடைக்கும் ?
புதிய HTE (O) வேரியன்ட் இப்போது கியா செல்டோஸ் -க்கான என்ட்ரி லெவல் வேரியன்ட் ஆகும். மேலும் இது நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அல்லது டீசல் இன்ஜினுடன் கிடைக்கும். இது ஹாலோஜன் புரொஜெக்டர் ஹெட்லைட்கள், கவர்களுடன் கூடிய 16-இன்ச் ஸ்டீல் வீல்கள், கனெக்டட் LED டெயில் லைட்ஸ் மற்றும் LED DRL -களை கொண்டுள்ளது. உள்ளே இது ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்டரி, சில்வர் டோர் ஹேண்டில்கள், நான்கு பவர் ஜன்னல்கள் மற்றும் அனலாக் டயல்களுடன் கூடிய 4.2 இன்ச் கலர்டு TFT ஸ்கிரீன் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது 8 இன்ச் டச் ஸ்கிரீன், 6-ஸ்பீக்கர் சவுண்ட் செட்டப் மற்றும் பின்புற வென்ட்களுடன் கூடிய மேனுவல் ஏசி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: புதிய ஜெனரேஷன் Kia Seltos சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது
HTK (O) வேரியன்ட் இது வரிசையின் மூன்றாவது வேரியன்ட் ஆகும். இது நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. மற்றும் HTK மற்றும் HTK பிளஸ் வேரியன்ட்களுக்கு இடையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. HTK டிரிம் உடன் ஒப்பிடும் போது இது பனோரமிக் சன்ரூஃப், 16-இன்ச் அலாய் வீல்கள், கீலெஸ் என்ட்ரி, வாஷர் மற்றும் டிஃபோகர் கொண்ட பின்புற வைப்பர் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. பனோரமிக் சன்ரூஃப் வேண்டுமானால் செல்டோஸில் உள்ள என்ட்ரி டிரிம் இதுதான்.
HTK பிளஸ் (O) வேரியன்ட் HTK (O) மற்றும் HTX வேரியன்ட்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் N/A பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் பிரத்தியேகமாக கிடைக்கிறது. முந்தைய HTK (O) வேரியன்ட்டை விட இது LED ஹெட்லைட்கள், சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்கள், LED ஃபாக் லேம்ப்கள் மற்றும் 17-இன்ச் அலாய் வீல்களுடன் வருகிறது. இந்த வேரியன்ட்டில் ஆட்டோ-ஃபோல்டிங் அவுட்டோர் ரியர்வியூ மிரர்ஸ் (ORVMs), ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் (CVT ஆப்ஷன் உடன் மட்டுமே கிடைக்கும்) போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
கியா செல்டோஸ் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. அதன் விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
1.5 லிட்டர் டீசல் இன்ஜின் |
பவர் |
115 PS |
160 PS |
116 பி.எஸ் |
டார்க் |
144 Nm |
253 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன்* |
6-ஸ்பீடு MT, 7-படி CVT |
6-ஸ்பீடு iMT, 7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
*CVT = கன்டினியூஸ்லி வேரியபிள் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்; iMT = கிளட்ச்லெஸ் மேனுவல் கியர்பாக்ஸ்; AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா செல்டோஸ் இப்போது ரூ. 11.13 லட்சம் முதல் ரூ. 20.51 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட், டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கு போட்டியாக இது இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.