இந்தியாவில் 50,000 -க்கும் மேற்பட்ட Honda Elevate கார்கள் விற்பனையாகியுள்ளன
எலிவேட் எஸ்யூவி -களின் 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் உலகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 53,326 யூனிட்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. மீதமுள்ள 47,653 யூனிட்கள் ஜப்பான் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
2023 செப்டம்பரில் ஹோண்டா எலிவேட் இந்தியாவில் அறிமுகமானது. மற்றும் கடும் போட்டி வாய்ந்த காம்பாக்ட் எஸ்யூவி சந்தையில் அதற்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. எலிவேட் -ன் விற்பனை இப்போது உலகளவில் மொத்தம் 1 லட்சத்தை கடந்துள்ளது. இதில் இந்தியாவிலிருந்து செய்யப்பட்டுள்ள ஏற்றுமதியும் அடங்கும். ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் 50,000 யூனிட்களுக்கு மேல் எலிவேட் கார்களை விற்பனை செய்துள்ளது. மீதமுள்ள யூனிட்கள் ஜப்பான், தென்னாப்பிரிக்கா, நேபாளம் மற்றும் பூட்டான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
எலிவேட் காரை வாங்குபவர்கள் எதை விரும்புகிறார்கள்
மொத்த 53,326 யூனிட்களில் 53 சதவீதம் பேர் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) கொண்ட டாப்-ஸ்பெக் ZX வேரியன்ட்டையே தேர்வு செய்துள்ளனர். மேலும் 79 சதவீத வாடிக்கையாளர்கள் V, VX மற்றும் ZX டிரிம்களுடன் கிடைக்கும் CVT ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களை தேர்வு செய்துள்ளனர். எலிவேட் வாங்குபவர்களில் 22 சதவீதம் பேர் முதல் முறை கார் உரிமையாளர்கள் என்றும், 43 சதவீதத்துக்கும் அதிகமான வாங்குபவர்கள் எலிவேட்டை தங்கள் வீட்டில் கூடுதல் காராக வாங்குகிறார்கள் என்றும் ஹோண்டா தெரிவித்துள்ளது.
நிறத்தின் அடிப்படையில் பார்க்கப்போனால் பிளாட்டினம் வொயிட் பேர்ல் மிகவும் பிரபலமான தேர்வாக இருந்தது (35.1 சதவீதம்), அதைத் தொடர்ந்து கோல்டன் பிரவுன் மெட்டாலிக் (19.9 சதவீதம்) இருந்தது.
மேலும் படிக்க: பெரும்பாலான கியா சிரோஸ் வாடிக்கையாளர்கள் டீசலை விட டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களையே விரும்புகிறார்கள்
எலிவேட் காரில் என்ன கிடைக்கும் ?
ஹோண்டா எலிவேட் சிங்கிள்-சன்ரூஃப், 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் 7-இன்ச் செமி-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே போன்ற வசதிகளுடன் வருகிறது. பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் சீட்கள் போன்ற சில போட்டியாளர்களிடம் காணப்படும் சில பிரீமியம் வசதிகள் இல்லை என்றாலும், அதன் அம்சத் தொகுப்பு அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), ஒரு லேன்வாட்ச் கேமரா (இடது ORVM -ன் கீழ் அமைந்துள்ளது), ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் (ADAS) ஆகியவை உள்ளன.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
ஹோண்டா சிட்டி -யில் இருக்கும் 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 121 PS மற்றும் 145 Nm டார்க் அவுட்புட்டை கொடுக்கிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வருகிறது. ஹைப்ரிட் பவர்டிரெய்ன் இதுவரை அறிமுகமாகாத நிலையில் 2026 ஆம் ஆண்டுக்குள் எலிவேட்டின் EV வெர்ஷனை அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹோண்டா எலிவேட் விலை ரூ. 11.69 லட்சம் முதல் ரூ. 16.73 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை உள்ளது. இது மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மற்றும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.