MG Windsor EV மற்றும் Wuling Cloud EV: டாப் 5 வித்தியாசங்கள்
published on செப் 27, 2024 07:45 pm by shreyash for எம்ஜி விண்ட்சர் இவி
- 92 Views
- ஒரு கருத்தை எழுதுக
விண்ட்சர் EV மற்றும் கிளவுட் EV இரண்டும் ஒரே மாதிரியான வடிவமைப்பு மற்றும் வசதிகளை பகிர்ந்து கொள்கின்றன. ஆனால் கிளவுட் EV -யில் பெரிய பேட்டரி பேக் மற்றும் ADAS ஆகியவை உள்ளன.
எம்ஜி வின்ட்சர் இவி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய EV -களில் ஒன்றாகும். இது ஒரு எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் மற்றும் அடிப்படையில் க்ளவுட் EV -ன் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாகும். இது 'வூலிங்' என்ற பெயரில் வெளிநாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விண்ட்சர் EV ஆனது 'வூலிங்' காருடன் அதே வடிவமைப்பு மற்றும் வசதிகளை பகிர்ந்து கொண்டாலும் விவரங்கள் மற்றும் உபகரணங்களின் அடிப்படையில் சில வேறுபாடுகள் உள்ளன. விண்ட்சர் EV மற்றும் கிளவுட் EV இரண்டுக்கும் இடையே உள்ள டாப் 5 வித்தியாசங்களை பார்ப்போம்.
அளவுகள்
மாடல் |
எம்ஜி வின்ட்சர் இவி |
வுலிங் கிளவுட் இவி |
வித்தியாசம் |
நீளம் |
4295 மி.மீ |
4295 மி.மீ |
மாற்றம் இல்லை |
அகலம் (கண்ணாடிகள் தவிர்த்து) |
1850 மி.மீ |
1850 மி.மீ |
மாற்றம் இல்லை |
உயரம் |
1677 மி.மீ |
1652 மி.மீ |
+ 25 மி.மீ |
வீல்பேஸ் |
2700 மி.மீ |
2700 மி.மீ |
மாற்றம் இல்லை |
விண்ட்சர் EV மற்றும் கிளவுட் EV இரண்டும் கிட்டத்தட்ட ஒரே அளவுகளை கொண்டுள்ளன. ஆனால் இந்தியா-ஸ்பெக் விண்ட்சர் EV ஆனது கிளவுட் EV -யை விட 25 மிமீ உயரம் அதிகமாக உள்ளது.
கலர் ஆப்ஷன்கள்
MG விண்ட்சர் EV மற்றும் வூலிங் கிளவுட் EV இரண்டும் வொயிட், பிளாக் மற்றும் பெய்ஜ் ஆகிய எக்ஸ்ட்டீரியர் கலர் ஆப்ஷன்கள் உடன் வருகின்றன. ஆனால் அவை ஒவ்வொன்றும் தனித்துவமான ஆப்ஷனை கொண்டுள்ளன. இந்தியா-ஸ்பெக் விண்ட்சர் EV ஒரு டர்கியூஸ் கிரீன் கலரில் கிடைக்கிறது. அதே நேரத்தில் கிளவுட் EV மால்டிஸ் ப்ளூ ஆப்ஷனையும் வழங்குகிறது.
விண்ட்சர் EV டர்கியூஸ் கிரீன்
கிளவுட் EV மால்டேஸ் ப்ளூ
வசதிகள்
விண்ட்சர் EV ஆனது அதன் சர்வதேச பதிப்பான கிளவுட் EV உடன் பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறது. இரண்டு EVகளும் 15.6-இன்ச் டச் ஸ்கிரீன், 8.8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 6-வே பவர்டு ஓட்டுனர் சீட் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் 135 டிகிரி வரை ரிக்ளைனிங் கோணம் கொண்ட பின் இருக்கைகள் போன்ற வசதிகளுடன் நிரம்பியுள்ளன.
இருப்பினும் விண்ட்சர் EV கூடுதலாக ஒரு பனோரமிக் ஃபிக்ஸ்டு கிளாஸ் ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகளைப் பெறுகிறது. மறுபுறம் கிளவுட் EV ஆனது, வின்ட்சர் EV உடன் வழங்கப்படாத 4-வே இயங்கும் கோ-டிரைவர் சீட்டை கொண்டுள்ளது.
பாதுகாப்பு
பாதுகாப்பு முன், இரண்டு EV -களிலும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை அடங்கும். இருப்பினும் வின்ட்சர் EV 6 ஏர்பேக்குகள் உடன் வருகிறது. அதேசமயம் கிளவுட் EV ஆனது 4 ஏர்பேக்குகளுடன் மட்டுமே வருகிறது.
ஆனால் க்ளவுட் EV ஆனது அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் ஆட்டோமெட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற நிலை 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் வருகிறது. இவை எதுவும் வின்ட்சர் EV -யில் கிடைக்காது.
பவர்டிரெய்ன்
MG விண்ட்சர் EV உடன் ஒப்பிடும்போது வூலிங் கிளவுட் EV ஆனது பெரிய பேட்டரி பேக்கை பயன்படுத்துகிறது. விரிவான விவரங்கள் பின்வருமாறு:
விவரங்கள் |
எம்ஜி வின்ட்சர் இவி |
எம்ஜி கிளவுட் இவி |
பேட்டரி பேக் |
38 kWh |
50.6 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை |
1 |
1 |
பவர் |
136 PS |
136 PS |
டார்க் |
200 Nm |
200 Nm |
ரேஞ்ச் |
332 (எம்ஐடிசி) |
460 கிமீ (CLTC) |
MIDC - மாடிஃபைடு இந்தியன் டிரைவ் சைக்கிள்
CLTC - சீனா லைட் டியூட்டி வெஹிகிள் டெஸ்ட் சைக்கிள்
விலை & போட்டியாளர்கள்
இந்தியாவில் MG விண்ட்சர் EV விலை ரூ. 13.50 லட்சம் முதல் ரூ. 15.50 லட்சம் வரை (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) ஆக உள்ளது. MG ஆனது விண்ட்சர் EV -யை பேட்டரி வாடகை உரிமை திட்டத்துடன் வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தை நீங்கள் தேர்வுசெய்தால் விண்ட்சர் EV -யின் விலை ரூ.9.99 லட்சமாக இருக்கும். வின்ட்சர் EV ஆனது டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV ஆகியவற்றுக்கு ஒரு கிராஸ்ஓவர் மாற்றாக கருதப்படலாம். மற்றும் அதன் விலை மற்றும் வசதிகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது டாடா பன்ச் EV -க்கும் இது ஒரு மாற்றாக உள்ளது
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: MG விண்ட்சர் EV ஆட்டோமெட்டிக்