சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

MG Hector Plus காரில் 2 புதிய வேரியன்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளன

எம்ஜி ஹெக்டர் பிளஸ் க்காக நவ 08, 2024 03:25 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

இந்த புதிய வேரியன்ட்களால் ஹெக்டர் பிளஸில் உள்ள பெட்ரோல்-சிவிடி ஆப்ஷன் இப்போது ரூ. 2.55 லட்சம் விலை குறைந்துள்ளது.

  • புதிய செலக்ட் புரோ பெட்ரோல் CVT மற்றும் ஸ்மார்ட் புரோ டீசல் வேரியன்ட்களின் விலை முறையே ரூ.19.72 லட்சம் மற்றும் ரூ.20.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது.

  • இரண்டு புதிய வேரியன்ட்களும் 7 சீட் செட்டப்பில் கிடைக்கும்.

  • இரண்டு வேரியன்ட்களிலும் LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள், 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் கனெக்டட் LED டெயில் லைட்ஸ் ஆகியவை உள்ளன.

  • 14 இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பவர்டு டிரைவர் இருக்கை ஆகியவற்றைக் கொண்டுள்ளனர்.

  • மற்ற வேரியன்ட்களின் விலை ரூ. 17.50 லட்சம் முதல் 23.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் எம்ஜி ஹெக்டர் பிளஸ் காரில் இரண்டு புதிய வேரியன்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. செலக்ட் ப்ரோ வேரியன்ட் இப்போது 1.5 டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் CVT (கன்ட்டினியூஸ்லி வேரியபிள் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஸ்மார்ட் புரோ வேரியன்ட் இப்போது 7-சீட் அமைப்புடன் கிடைக்கிறது. இந்த புதிய வேரியன்ட்களின் விலையை விரிவாகப் பார்ப்போம்:

வேரியன்ட்

விலை

செலக்ட் புரோ பெட்ரோல் ( 7 சீட்டர் )

ரூ.19.72 லட்சம்

ஸ்மார்ட் ப்ரோ டீசல் (7 இருக்கைகள்)

ரூ.20.65 லட்சம்

விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை

இப்போது இந்த இரண்டு புதிய வேரியன்ட்களில் கிடைக்கும் அனைத்து விஷயங்களையும் பார்ப்போம்:

இந்த வேரியன்ட்களில் என்ன கிடைக்கும் ?

ஹெக்டர் பிளஸ் செலக்ட் ப்ரோ பெட்ரோல் டிரிம் முன்பு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைத்தது. இப்போது CVT (கன்ட்டினியூஸ்லி வேரியபிள் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) ஆப்ஷனையும் கொண்டுள்ளது. இது 7-சீட்டர் செலக்ட் ப்ரோ பெட்ரோல்-மேனுவல் மற்றும் டீசல்-மேனுவல் வேரியன்ட்களுக்கு இடையே உள்ளது. இது ரூ. 2.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மூலம் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் CVT வேரியன்ட் ஆகும்.

இதேபோல் 6 இருக்கைகளுடன் மட்டுமே கிடைத்த புதிய ஸ்மார்ட் ப்ரோ வேரியன்ட், இப்போது 7 இருக்கை ஆப்ஷனை கொடுக்கிறது. இது 7-சீட்டர் செலக்ட் ப்ரோ டீசல் வேரியன்ட் மற்றும் பெட்ரோல்-மேனுவல் இன்ஜினுடன் 6-சீட்டர் ஷார்ப் ப்ரோ இடையே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இரண்டு வேரியன்ட்களிலும் LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் கனெக்டட் LED டெயில் லைட்டுகள் உள்ளன. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 14 இன்ச் டச் ஸ்கிரீன், கனெக்டட் கார் டெக்னாலஜி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பவர்டு டிரைவர் சீட் ஆகியவை உள்ளன. இன்ட்டீரியரில் டூயல்-டோன் தீம், சீட்களில் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: 2024 நவம்பர் மாதம் மஹிந்திரா தார் மற்றும் தார் ராக்ஸ் காத்திருப்பு காலத்தின் விவரங்கள்

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

எம்ஜி ஹெக்டர் பிளஸ் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது, விரிவான விவரங்கள் பின்வருமாறு:

இன்ஜின்

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

2 லிட்டர் டீசல் இன்ஜின்

பவர்

143 PS

170 PS

டார்க்

250 Nm

350 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT, CVT

6-ஸ்பீடு மேனுவல்

மேலே உள்ளதை போல டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஒரு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது. டீசல் இன்ஜின் பிரத்தியேகமாக மேனுவல் கியர் பாக்ஸ் உடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது.

விலை மற்றும் போட்டியாளர்கள்

எம்ஜி ஹெக்டர் பிளஸ் காரின் விலை ரூ. 17.50 லட்சம் முதல் 23.41 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது. இது டாடா சஃபாரி, மஹிந்திரா XUV700 மற்றும் ஹூண்டாய் அல்கஸார் உடன் போட்டியிடுகிறது

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on M g ஹெக்டர் பிளஸ்

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15 - 26.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.20 - 10.51 லட்சம்*
எலக்ட்ரிக்
Rs.48.90 - 54.90 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை