சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

MG Hector Blackstorm எடிஷன் அறிமுகம், விலை ரூ.21.25 லட்சத்தில் தொடங்குகிறது

published on ஏப்ரல் 10, 2024 06:04 pm by ansh for எம்ஜி ஹெக்டர்

க்ளோஸ்டர் மற்றும் ஆஸ்டருக்கு பிறகு இந்த ஸ்பெஷல் எடிஷனை பெறும் மூன்றாவது எம்ஜி மாடலாக ஹெக்டர் உள்ளது.

எம்ஜி ஹெக்டர் பிளாக்ஸ்டோர்ம் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 21.25 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. நடுத்தர அளவிலான எஸ்யூவியின் இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்டாண்டர்டான பதிப்புடன் ஒப்பிடும் போது ஒப்பனையில் சில மாற்றங்களை கொண்டுள்ளது. இதில் ஆல் பிளாக் கலர் ஷேடு , எக்ஸ்ட்டீரியரில் ரெட் இன்செர்ட்கள் மற்றும் ஆல் பிளாக் கேபின் ஆகியவை அடங்கும். கூடுதலாக எம்ஜி ஹெக்டரின் 5-சீட்டர் மற்றும் 3-வரிசை பதிப்புகள் இரண்டிலும் இதை அறிமுகப்படுத்தியுள்ளது. MG ஹெக்டர் பிளாக்ஸ்டார்ம் விலை மற்றும் இதர விவரங்களை இங்கே பாருங்கள்.

விலை

எம்ஜி ஹெக்டர்

வேரியன்ட்

பிளாக்ஸ்டார்ம்

ஸ்டாண்டர்டு

வித்தியாசம்

ஷார்ப் ப்ரோ பெட்ரோல் CVT

ரூ.21.25 லட்சம்

ரூ.21 லட்சம்

+ ரூ.25000

ஷார்ப் ப்ரோ டீசல் MT

ரூ.21.95 லட்சம்

ரூ.21.70 லட்சம்

+ ரூ.25000

எம்ஜி ஹெக்டர் பிளஸ்

ஷார்ப் ப்ரோ பெட்ரோல் CVT 7 சீட்டர்

ரூ.21.98 லட்சம்

ரூ.21.73 லட்சம்

+ ரூ.25000

ஷார்ப் ப்ரோ டீசல் MT 7 சீட்டர்

ரூ.22.55 லட்சம்

ரூ.22.30 லட்சம்

+ ரூ.25000

ஷார்ப் ப்ரோ டீசல் MT 6 சீட்டர்

ரூ.22.76 லட்சம்

ரூ.22.51 லட்சம்

+ ரூ.25000

ஹெக்டர் பிளாக்ஸ்டார்ம் ஹெக்டரின் ஷார்ப் ப்ரோ வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது. ஹெக்டர் பிளஸ் எஸ்யூவி -கள் மற்றும் பெட்ரோல்-ஆட்டோமெட்டிக் மற்றும் டீசல்-மேனுவல் பவர்டிரெய்ன்கள் இரண்டையும் கொண்டு வருகிறது.

வெளிப்புறத்தில் உள்ள மாற்றங்கள்

ஹெக்டர் பிளாக்ஸ்டார்ம் முன்புறத்தில் டார்க் குரோம் கிரில் உடன் ஸ்டாரி பிளாக் எக்ஸ்ட்டீரியர் ஷேடை பெறுகின்றன. இது ஹெட்லேம்ப்கள் மற்றும் ORVM -களில் ரெட் ஆக்ஸன்ட்களை பெறுகிறது. இதற்கிடையில் ஸ்கிட் பிளேட் இன்செர்ட்கள் பாடிசைட் கிளாடிங் மற்றும் ஹெக்டர் பிளாக்ஸ்டார்ம் ரெட் பிரேக் காலிப்பர்களுடன் ஆல்-பிளாக் 18-இன்ச் அலாய் வீல்களையும் பெறுகிறது. MG இந்த வேரியன்ட்டில் டெயில்லேம்ப்களின் நிறங்களையும் மாற்றியமைத்திருக்கின்றது.

கேபினில் உள்ள மாற்றங்கள்

உள்ளே பிளாக்ஸ்டார்ம் பதிப்பு இதே போன்ற ட்ரீட்மென்ட்டை பெறுகிறது. கன்மெட்டல் கிரே ஆக்ஸன்ட்களை பிளாக் டேஷ்போர்டு, பிளாக் அப்ஹோல்ஸ்டரி மற்றும் டோர் ஹேண்டில்கள், ஸ்டீயரிங் வீல், சென்டர் கன்சோல் மற்றும் ஏசி வென்ட்களில் குரோம் ஃபினிஷிங் கொண்ட ஆல் பிளாக் கேபின் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே ஹெட்ரெஸ்ட்களில் பிளாக்ஸ்டார்ம் பேட்ஜிங்கும் கிடைக்கும். பிளாக்ஸ்டார்ம் பதிப்பில் கேபினுக்குள் ரெட் கலர் ஆக்ஸன்ட்கள் எதுவும் கிடைக்காது ஆனால் ரெட் கலர் ஆம்பியன்ட் லைட்களுடன் வருகிறது.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

இது ஹெக்டரின் ஒன்-பிலோவ்-டாப் ஷார்ப் ப்ரோ வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இது 14-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ரியர் ஏசி வென்ட்களுடன் கூடிய ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் பவர்டு டெயில்கேட் ஆகியவற்றைப் பெறுகிறது.

மேலும் படிக்க: 3 முதல் 6 மாதங்களுக்கு ஒரு முறை புதிய காரை அறிமுகப்படுத்த திட்டமிடும் MG மோட்டார்; 2024 ஆம் ஆண்டில் 2 புதிய கார்கள் வெளியாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

பாதுகாப்பைப் பொறுத்தவரை இந்த வேரியன்ட்டில் 6 ஏர்பேக்குகள் EBD உடன் ABS எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ஹில் ஹோல்ட் மற்றும் 360- டிகிரி கேமரா. இருப்பினும் இந்த வேரியன்ட் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் போன்ற நிலை 2 ADAS வசதிகளை பெறவில்லை.

பவர்டிரெய்ன் விவரங்கள்

பிளாக்ஸ்டார்ம் பதிப்பு எம்ஜி ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் ஆகியவற்றின் பெட்ரோல்-CVT மற்றும் டீசல்-MT பவர்டிரெய்ன்களுடன் கிடைக்கிறது. இரண்டு எஸ்யூவிகளும் ஒரே மாதிரியான இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகின்றன: 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (143 PS/250 Nm) பொதுவாக 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது CVT உடன் இணைக்கப்பட்டுள்ளது மேலும் 2-லிட்டர் டீசல் இன்ஜின் (170 PS/350 Nm) ) இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கும்.

போட்டியாளர்கள்

எம்ஜி ஹெக்டர் பிளாக்ஸ்டார்ம் டாடா ஹாரியர் காரின் டார்க் எடிஷனுக்கு போட்டியாக இருக்கின்றது. ஹெக்டர் பிளஸ் பிளாக்ஸ்டார்ம் டாடா சஃபாரி -யின் டார்க் எடிஷனுடன் போட்டியிடுகின்றது.

மேலும் படிக்க: எம்ஜி ஹெக்டர் டீசல்

a
வெளியிட்டவர்

ansh

  • 58 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது எம்ஜி ஹெக்டர்

Read Full News

explore similar கார்கள்

எம்ஜி ஹெக்டர் பிளஸ்

Rs.17 - 22.76 லட்சம்* get சாலை விலை
டீசல்15.58 கேஎம்பிஎல்
பெட்ரோல்13.79 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

எம்ஜி ஹெக்டர்

Rs.13.99 - 21.95 லட்சம்* get சாலை விலை
டீசல்13.79 கேஎம்பிஎல்
பெட்ரோல்13.79 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.7.51 - 13.04 லட்சம்*
Rs.43.81 - 54.65 லட்சம்*
Rs.9.98 - 17.90 லட்சம்*
Rs.13.99 - 21.95 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை