MG ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் கார்களின் விலை 2023 நவம்பர் முதல் உயரவுள்ளது
published on அக்டோபர் 30, 2023 01:05 pm by shreyash for எம்ஜி ஹெக்டர்
- 206 Views
- ஒரு கருத்தை எழுது க
2023 அக்டோபர் மாதத்திற்கு முன்னதாக, MG நிறுவனம் இரண்டு எஸ்யூவி -களின் விலையை 1.37 லட்சம் வரை குறைத்துள்ளது.
-
MG ஹெக்டர் மற்றும் MG ஹெக்டர் பிளஸ் இன் தற்போதைய விலை அக்டோபர் 31ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.
-
பண்டிகை கால சலுகையாக விலை குறைக்கப்பட்டுள்ளது.
-
இந்த இரண்டு SUV -களும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அவற்றின் அசல் விலைக்கு விற்கப்படும்.
-
தற்போது, MG ஹெக்டர் ரூ.14.73 லட்சம் முதல் ரூ.21.73 லட்சம் வரை விலையில் கிடைக்கிறது.
-
MG ஹெக்டர் பிளஸ் ரூ.17.50 லட்சம் முதல் ரூ.22.43 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2023 செப்டம்பர் இறுதியில் MG ஹெக்டர் மற்றும் MG ஹெக்டர் பிளஸ் விலை ரூ.1.37 லட்சம் வரை குறைக்கப்பட்ட பிறகு, கார் தயாரிப்பு நிறுவனம் நவம்பர் 1 ஆம் தேதி முதல் இந்த SUV -களின் விலைகளை உயர்த்த இப்போது திட்டமிட்டுள்ளது. அறிக்கைகளின்படி, நடந்துகொண்டிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பிராண்டின் 100வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விலைக் குறைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
விலை உயர்வு விவரங்கள் நிலுவையில் உள்ளன
MG அதிகாரப்பூர்வமாக இந்த SUV -களின் விலை உயர்வு தொடர்பான விவரங்களை வெளியிடவில்லை, MG ஹெக்டர் மற்றும் MG ஹெக்டர் பிளஸ் இரண்டும் அவற்றின் அசல் விலைக்கு மீண்டும் விற்கப்படலாம் அல்லது மேலே சிறிது உயர்வு இருக்கலாம். இந்த SUV -களின் டீசல் வேரியன்டுகள் மிகவும் கணிசமான விலை குறைப்புகளை பெற்றுள்ளதால், அதற்கேறப்படி விலை உயர்வை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரில் உள்ள பொதுவான அம்சங்கள்
MG ஹெக்டர் (5-சீட்டர் SUV) மற்றும் MG ஹெக்டர் பிளஸ் (3-வரிசை SUV) ஆகிய இரண்டும் 14-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 7-இன்ச் ஃபுல்லி-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பவர்டு டெயில்கேட் ஆகியவற்றை கொண்டுள்ளது.
6 ஏர்பேக்குகள், ABS உடன் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஃபார்வர்டு கொலிசன் வார்னிங் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) மூலம் பயணிகளின் பாதுகாப்பு கவனிக்கப்படுகிறது.
இதையும் பாருங்கள் : MG ஹெக்டரை விட டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் எவ்வாறு நன்றாக செயல்படுகிறது என்பதை இங்கே பார்க்கலாம்
பவர்டிரெயின்கள்
ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதில் 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (143PS/250Nm) மற்றும் 2 லிட்டர் டீசல் யூனிட் (170PS/350Nm) இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் யூனிட்டுகள் இரண்டும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படுகின்றன, ஆனால் முந்தையது ஆப்ஷனல் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வருகிறது.
இதையும் பாருங்கள் : நவம்பர் 29 ஆம் தேதி அன்று புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டரின் உலகளாவிய அறிமுகம்
புதிய விலை & போட்டியாளர்கள்
2023 அக்டோபர் மாதத்திற்கு, MG ஹெக்டரின் விலை ரூ.14.73 லட்சம் முதல் ரூ.21.73 லட்சம் வரையிலும், MG ஹெக்டர் பிளஸ் ரூ.17.50 லட்சம் முதல் ரூ.22.43 லட்சம் வரையிலும் இருக்கும். ஹெக்டர் கார் டாடா ஹாரியர், 5-சீட்டர் வேரியன்டுகளான மஹிந்திரா XUV700, மற்றும் கியா செல்டோஸ் -ன் டாப் வேரியன்டுகள் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும், ஹெக்டர் ப்ளஸ் டாடா சஃபாரி, மஹிந்திரா XUV700 இன் 7-சீட்டர் வேரியன்ட்கள், மற்றும் ஹூண்டாய் அல்காஸர் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை.
மேலும் தெரிந்து கொள்ள: MG ஹெக்டர் ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful