• English
  • Login / Register

MG Comet EV Blackstorm பதிப்பு வெளியிடப்பட்டது

எம்ஜி comet இவி க்காக பிப்ரவரி 26, 2025 02:18 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 29 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த ஆல்-பிளாக் பிளாக்ஸ்டார்ம் பதிப்பு காமெட் EV -ன் டாப்-ஸ்பெக் எக்ஸ்க்ளூஸிவ் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது.

MG Comet EV Blackstorm

  • ரூ.11,000 டோக்கன் தொகைக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.

  • காமெட் EV பிளாக் ஸ்டார்ம் ஸ்டார்ரி பிளாக் எக்ஸ்ட்டீரியர் ஷேடை கொண்டுள்ளது.

  • அலாய் வீல்களில் ரெட் கலர் ஆக்ஸென்ட்கள், முன்பக்க பம்பர் மற்றும் ஹூட்டில் 'மோரிஸ் கேரேஜ்' எழுத்துகள் ஆகியவை உள்ளன.

  • முன்புற ஹெட்ரெஸ்ட்களில் ரெட் ஸ்டிச் மற்றும் ‘பிளாக்ஸ்டார்ம்’ பேட்ஜ்களுடன் ஆல் பிளாக் சீட் அப்ஹோல்ஸ்டரியை கொண்டுள்ளது.

  • அதே 17.3 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்துகிறது. இது 230 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்ச்சை கொடுக்கும்.

  • காமெட் EV பிளாக் ஸ்டார்ம் பதிப்பின் விலை ரூ.7.80 லட்சம் ஆக இருக்கிறது. இது தவிர பேட்டரி வாடகை திட்டத்தில் ஒரு கி.மீ.க்கு ரூ.2.5 செலுத்த வேண்டியிருக்கும்.

எம்ஜி குளோஸ்டர், எம்ஜி ஆஸ்டர் மற்றும் எம்ஜி ஹெக்டருக்கு பிறகு பிளாக்ஸ்டார்ம் பதிப்பு வரிசையில் எம்ஜி காமெட் இவி -யும் நான்காவது காராக இப்போது இணைந்துள்ளது.இந்த சிறிய EV -யின் ஆல்-பிளாக் பதிப்பானது டாப்-ஸ்பெக் எக்ஸ்க்ளூஸிவ் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது. இதன் விலை ரூ. 7.80 லட்சம் மற்றும் ஒரு கி.மீ.க்கு ரூ.2.5 பேட்டரி வாடகையிலும் கிடைக்கும். MG இப்போது இந்த காருக்கான ஆர்டர்களை ரூ. 11,000 டோக்கன் தொகைக்கு ஏற்றுக் கொள்கிறது. உள்ளேயும் வெளியேயும் ரெட் ஹைலைட்ஸ் உடன் ஆல் பிளாக் எக்ஸ்ட்டீரியர் ஷேடை கொண்டுள்ளது. 

ஸ்டாரி பிளாக் எக்ஸ்ட்டீரியர் ஷேடு

இந்த ஸ்பெஷல் எடிஷன் எம்ஜி காமெட் காரில் பம்பரில் ரெட் கலர் ஹைலைட்ஸ், ஸ்கிட் பிளேட், சைடு கிளாடிங் மற்றும் ஹூட்டில் மோரிஸ் கேரேஜஸ் பேட்ஜிங் ஆகியவை உள்ளன. மேலும் இது ஸ்டாரி பிளாக் எக்ஸ்ட்டீரியர் ஷேடை கொண்டுள்ளது. ஸ்டீல் வீல்கள் முழுவதும் கறுப்பு  நிற கவர்களுடன் ரெட் ஸ்டார் போன்ற வடிவத்துடன் காணப்படுகின்றன. இது ஸ்பெஷல் எடிஷன் என்பதை தனித்து காட்டும் வகையில் ஃபெண்டரில் 'பிளாக்ஸ்டார்ம்' பேட்ஜ் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

கறுப்பு நிற சீட்களில் ரெட் ஹைலைட்ஸ்

MG Comet EV Blackstorm Interior

இந்த ஸ்பெஷல் எடிஷன் டாஷ்போர்டு இன்னும் வொயிட் மற்றும் கிரே தீமில் இருக்கிறது. இருப்பினும் இருக்கைகள் இப்போது கறுப்பு நிறத்தில் ரெட் ஸ்டிச் மற்றும் ஹெட்ரெஸ்ட்களில் 'பிளாக்ஸ்டார்ம்' பேட்ஜ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஒட்டுமொத்த கேபின் அமைப்பு வழக்கமான காமெட் காரில் உள்ளதை போலவே உள்ளது.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

MG Comet EV Infotainment System Main Menu

இது ஸ்பெஷல் எடிஷன் என்றாலும் கூட வசதிகளின் பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை. இது 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் வழக்கமான காமெட் -ல் இருந்து மேனுவல் ஏசி போன்ற வசதிகளுடன் வருகிறது. கூடுதலாக காமெட் இவி பிளாக்ஸ்டார்ம் 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டத்துடன் வருகிறது. இரண்டு ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் சென்சார்கள் கொண்ட பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

பேட்டரி பேக் -ல் எந்த மாற்றமும் இல்லை

எம்ஜி காமெட் EV ஆனது 17.3 kWh பேட்டரி பேக் உள்ளது, இது ரியர் வீல் டிரைவ் (RWD) எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. விவரங்கள் இங்கே: 

பேட்டரி பேக்

17.3 kWh

கிளைம்டு ரேஞ்ச்

230 கி.மீ

பவர்

42 PS

டார்க்

110 என்எம்

விலை மற்றும் போட்டியாளர்கள்

எம்ஜி காமெட் EV -யுடன் வழங்கப்படும் பேட்டரி சந்தா திட்டத்தை நீங்கள் தேர்வுசெய்தால் விலை ரூ.5 லட்சம் முதல் ரூ.7.80 லட்சம் வரை இருக்கும். இருப்பினும் இந்த சந்தா திட்டத்தில் பேட்டரி -க்கு ஒரு கி.மீ.க்கு ரூ.2.5 செலுத்த வேண்டும். இது டாடா டியாகோ EV மற்றும் சிட்ரோன் eC3 ஆகியவற்றுக்கு ஒரு விலை குறைவான மாற்றாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on M g comet ev

explore மேலும் on எம்ஜி comet இவி

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
×
We need your சிட்டி to customize your experience