• English
  • Login / Register

மெர்சிடிஸ்-பென்ஸ் EQA கார் ரூ.66 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

published on ஜூலை 08, 2024 08:13 pm by dipan for மெர்சிடீஸ் eqa

  • 36 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இது 70.5 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது WLTP உரிமை கோரப்பட்ட 560 கிமீ ரேஞ்சை கொடுக்கக்கூடியது.

  • EQA என்பது இப்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் மிகவும் குறைவான விலை EV ஆகும். EQB க்கு கீழே இது விற்பனை செய்யப்படுகிறது.

  • இது வெவ்வேறு ஹெட்லைட்கள், டெயில் லைட்ஸ் மற்றும் பம்பர்களை அதன் கம்பஸ்டன்-இன்ஜின் உடன்பிறப்பான GLA -லிருந்து பெற்றுள்ளது.

  • ஏசி வென்ட்களில் காப்பர் நிற இன்செர்ட்கள் மற்றும் டேஷ்போர்டில் ட்ரைஸ்டார் டிரிம் ஆகியவற்றுடன், உட்புறம் கான்ட்ராஸ்ட் டூயல்-டோன் தீமை கொண்டுள்ளது.

  • இது முன் சக்கரத்தில் (190 PS/385 Nm) பொருத்தப்பட்ட ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டாரை கொண்டுள்ளது.

  • இது இந்தியாவில் BMW iX1 மற்றும் வோல்வோ XC40 ரீசார்ஜ் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.

மெர்சிடிஸ்-பென்ஸ் EQA ரூ. 66 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான் இந்தியா). ஃபுல்லி லோடட் 250+ டிரிமில் இது கிடைக்கும். EQA இப்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான சொகுசு EV ஆக இருக்கும். இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் விலை இங்கே:

மாடல்

விலை (அறிமுகம்)

மெர்சிடிஸ்-பென்ஸ் EQA 250+

ரூ.66 லட்சம்

எக்ஸ்-ஷோரூம் விலை, இந்தியா முழுவதும்

இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி -யை பற்றி விரிவாகப் பார்ப்போம்:

வெளிப்புறம்

மெர்சிடிஸ்-பென்ஸ் EQA ஆனது மெர்சிடிஸ் காரின் மற்ற எலக்ட்ரிக் மாடல்களின் வடிவமைப்பு போன்ற டிஸைனை கொண்டுள்ளது. எனவே, இது புதிய ஸ்மோக்டு ஹெட்லைட்கள் மற்றும் கிரில்லின் மேல் எல்இடி லைட் பார் மற்றும் கனெக்டட் டெயில் லைட் யூனிட்களை பெறுகிறது. வழக்கமான மெர்சிடிஸ் EV பாணியில் உள்ள கிரில் குளோஸ் செய்யப்பட்டுள்ளது. மற்றும் பல 3-பாயிண்ட் சில்வர் ஸ்டார்களை கொண்டுள்ளது. இது பேட்டரி பேக்கை குளிர்விக்க ஃபங்ஷனல் எர் வென்ட்கள் மற்றும் 19-இன்ச் ஏரோடைனமிக் அலாய் வீல்களுடன் சற்று புதிய வடிவிலான பம்பரை பெறுகிறது.

EQA -ன் அளவுகளுடன் ஒப்பிடுகையில் GLA எஸ்யூவி -யின் அளவுகள் இங்கே:

அளவுகள்

மெர்சிடிஸ்-பென்ஸ் EQA

மெர்சிடிஸ்-பென்ஸ் GLA

நீளம்

4,465 மி.மீ

4,412 மி.மீ

அகலம்

1,834 மி.மீ

1,834 மி.மீ

உயரம்

1,624 மி.மீ

1,616 மி.மீ

வீல்பேஸ்

2,729 மி.மீ

2,729 மி.மீ

பூட் ஸ்பேஸ்

340 லிட்டர்

427 லிட்டர்

மெர்சிடிஸ் EQA ஐ 6 மோனோடோன் கலர்களில் கிடைக்கும்: போலார் ஒயிட், நைட் பிளாக், காஸ்மோஸ் பிளாக், மவுண்டன் கிரே, ஹைடெக் சில்வர் மற்றும் ஸ்பெக்ட்ரல் ப்ளூ; மற்றும் இரண்டு புரடெக்‌ஷன் பெயிண்ட் ஸ்கீம்கள்: படகோனியா ரெட் மெட்டாலிக் மற்றும் மவுண்டன் கிரே மேக்னோ.

உட்புறம்

மெர்சிடிஸ்-பென்ஸ் EQA அதே டேஷ்போர்டு செட்டப்பை பெறுகிறது. இருப்பினும் டாஷ்போர்டில் ஒளிரும் நட்சத்திரங்கள், காப்பர்-ஃபினிஷ்டு இல்லுமினேட்டட் ஏசி வென்ட்கள் மற்றும் டிரிம்கள் மற்றும் வேறுபட்ட ரோஸ் கோல்டு மற்றும் டைட்டானியம் கிரே பெர்ல் தீமை கொண்ட இன்ட்டீரியர் ஆகியவற்றை கொண்டுள்ளது. போன்ற சில EV -ஸ்பெசிஃபைடு டிசைன்கள் சேர்க்கப்பட்டுள்ள்ளன. இருக்கைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த PET மெட்டீரியலில் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புற இருக்கைகளும் GLA -லிருந்து சற்று வேறுபட்டவை. மேலும் இப்போது நடு இருக்கையில் ஒரு இன்டெகிரேட்டட் ஆர்ம்ரெஸ்ட் உள்ளது. பின் இருக்கை பின்புறம் 40:20:40 ஸ்பிளிட்-ஃபோல்டு வசதி உள்ளது.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

மெர்சிடிஸ்-பென்ஸ் EQA டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் ஒரு கிளாஸ் பேனலில் ஒன்றாக சேர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன (ஒன்று ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் மற்றொன்று வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்யும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்காக). இது டச்-பேஸ்டு கன்ட்ரோல்களுடன் டூயல்-பார் ஸ்டீயரிங் வீலையும் பெறுகிறது. ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், டூயல்-ஜோன் ஆட்டோமேட்டிக் ஏசி, 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ், எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் முன் இருக்கைகள் மற்றும் 12-ஸ்பீக்கர் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இதன் வசதிகள் தொகுப்பில் அடங்கும்.

பாதுகாப்பு க்காக 7 ஏர்பேக்குகள், EBD -யுடன் கூடிய ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், ஹில்-டிசென்ட் கண்ட்ரோல், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், பார்க் அசிஸ்டுடன் கூடிய 360 டிகிரி கேமரா மற்றும் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை உள்ளன. இது பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன், ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளையும் பெறுகிறது. 

பேட்டரி, எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்

EQA 250+ ஆனது 70.5 kWh பேட்டரி பேக்கை பெறுகிறது. இது முன்பக்க ஆக்ஸிலில் பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் மோட்டாரை இயக்குகிறது. விரிவான விவரங்கள் பின்வருமாறு:

விவரங்கள்

மெர்சிடிஸ்-பென்ஸ் EQA 250+

பேட்டரி பேக்

70.5 kWh

எலக்ட்ரிக்  மோட்டார்(கள்) எண்ணிக்கை

1

பவர்

190 PS

டார்க்

385 Nm

ரேஞ்ச்

560 கி.மீ வரை (WLTP)

டிரைவ்டிரெய்ன்

ஃபிரன்ட் வீல் டிரைவ் (FWD)

இந்த EV ஆனது 0-100 கிமீ/மணி வேகத்தை 8.6 வினாடிகளில் எட்டிவிடும். சார்ஜிங்கை பொறுத்தவரை, இது 11 கிலோவாட் ஏசி சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இது 7 மணிநேரம் மற்றும் 15 நிமிடங்களில் பேட்டரியை 0-100 சதவீதத்திலிருந்து சார்ஜ் செய்ய முடியும். அதே நேரத்தில் 100 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் 10-80 சதவீதத்திலிருந்து பேட்டரியை 35 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம்.

போட்டியாளர்கள்

EQA ஆனது இப்போது இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் மெர்சிடிஸ் EV ஆகும். இதன் விலை ரூ. 66 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்). இது வோல்வோ XC40 ரீசார்ஜ், வோல்வோ C40 ரீசார்ஜ், BMW iX1 மற்றும் கியா EV6 போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும். 

ஆட்டோமோட்டிவ் உலகில் நடப்பவை தொடர்பான உடனடி அப்டேட் வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்.

was this article helpful ?

Write your Comment on Mercedes-Benz eqa

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
×
We need your சிட்டி to customize your experience