சியஸ் SHVS ஹைபிரிட்டை மாருதி சுசுகி இன்று அறிமுகம் செய்கிறது
published on செப் 01, 2015 02:02 pm by akshit for மாருதி சியஸ்
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: மாருதி சுசுகி நிறுவனத்தின் மைல்டு ஹைபிரிட் பதிப்பான சியஸ் மிட்-சைஸ் சேடனை இன்று அறிமுகம் செய்கிறது. இதில் ஸ்மார்ட் ஹைபிரிட் வெஹிக்கிள் பை சுசுகி எனக் குறிப்பதை சுருக்கி SHVS என்று பெயரிடப்பட்டுள்ளது. சியஸின் இந்த புதிய அவதாரத்தின் மூலம் லிட்டருக்கு XX கி.மீ என்ற மலைக்க வைக்கும் எரிபொருள் சிக்கனத்தை அளிப்பதாக இப்போது உறுதி அளிக்கிறது.
டொயோட்டா பிரியஸ் மற்றும் காம்ரி ஆகியவை போல புதிய சியஸ் SHVS, அதிக விலை கொண்ட ஒரு முழுமையான ஹைபிரிட் அல்ல. ஆனால் நாம் ஏற்கனவே மஹிந்திரா ஸ்கார்பியோவில் பார்த்த மைக்ரோ ஹைபிரிட் டெக்னாலஜியின் சில அடிப்படை அம்சங்களை இது கொண்டுள்ளது. மாருதி சுசுகி அமைத்துள்ள ஸ்டார்ட்-ஸ்டாப் மெக்கானிசம் மூலம் நிறுத்தி வைக்கப்படும் போது என்ஜினை ஆப் செய்யவும், கிளெச்சை அழுத்தி என்ஜினை இயக்கவும் செய்து சியஸில் எரிபொருள் செலவீனத்தை குறைக்க முடியும்.
ஸ்டார்ட்-ஸ்டாப் உடன் டிசிலிரேஷன் எனர்ஜி ரிஜெனரேட்டிங் ஃபங்க்ஷன் என்ற தொழில்நுட்பத்தையும் இந்த சேடனில் காண முடிகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம், காரில் எதிர்முடுக்கம் (டிசிலிரேஷன்) ஏற்படும் போது வீணாகும் சக்தியை, எலக்ட்ரிக்கல் சிஸ்டத்தில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த சக்தியின் மூலம் மின்மாற்றி (ஆல்டர்நேட்டர்) பணிகளில் ஈடுபடுவதால், என்ஜினின் வழக்கமான பணிகளை குறைத்து கொண்டு, அதன் ஒட்டுமொத்த மெக்கானிக்கல் திறன் அதிகரிக்க உதவுகிறது. ஆனால், இது எதிர்முடுக்கம் ஏற்பட்டால் மட்டுமே நிகழும் என்றாலும், ஏற்கனவே இந்த கார் மணிக்கு 30 கி.மீட்டருக்கு மேலாக செல்கிறது.
சியஸ் SHVS-ல் ஃபியட்டிடம் இருந்து பெற்ற 1.3-லிட்டர் MJD யூனிட்டையே நான்-ஹைபிரிட்டின் ஒத்த பகுதிக்கும் ஆற்றலை அளிக்க பயன்படுகிறது. அதன்மூலம் 4,000 rpm-ல் அதிகபட்சமாக 89 bhp சக்தியையும், 1750rpm-ல் அதிகபட்ச முடுக்கமாக 200Nm-யும் அளிக்கிறது.
0 out of 0 found this helpful