சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மாருதி சுசுகி சியஸ் ஹைப்ரிட் கார்கள் இன்று அறிமுகம்

published on செப் 01, 2015 11:59 am by konark for மாருதி சியஸ்

ஜெய்பூர்: மாருதி சுசுகி புதிய ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய சியஸ் கார்களை இன்று அறிமுகம் செய்கிறது. இந்த சியஸ் ஸ்மார்ட் ஹைப்ரிட் (SHVS) கார்கள் இன்டக்ரேடட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் (ISG) என்ற தொழில்நுட்பத்தின் அடிப்டையில் இயங்கி என்ஜின் உடைய இயக்கம்/ நிறுத்தம் ஆகிய இரண்டு செயல்களை செய்கிறது. இந்த புதிய டெக்னாலஜி வாகனம் ஓடாத போது என்ஜின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது. இதன் மூலம் கூடுதல் மைலேஜ் கிடைக்கிறது. இதைத் தவிர ப்ரேக் எனர்ஜி ரெகவரி மைப்பு என்ற ஒரு சிறப்பு தொழில் நுட்ப அம்சமும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில் நுட்பம் மூலம் வேகமாக ஓடும் வாகனம் ப்ரேக் போட்டு நிறுத்தப்படும் போது வெளியாகும் சக்தியை பயன்படுத்தி இந்த அமைப்பு பேட்டரிகளை சார்ஜ் செய்து விடுகிறது.

இந்த புதிய சியஸ் ஹைப்ரிட் கார்கள் லிட்டருக்கு 28 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கிறது. ஹைப்ரிட் தொழில்நுட்பம் இல்லாத முந்தைய சியஸ் கார்கள் லிட்டருக்கு 26.21 கிலோமீட்டர் மைலேஜ் தான் தருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இரண்டு கார்களிலுமே 90 PS அளவுக்கு சக்தியை வெளியிடும் 1.3 லிட்டர் DDiS டீசல் எஞ்சின்கள் தான் பொருத்தப்பட்டுள்ளன என்பது மற்றுமொரு கூடுதல் செய்தியாகும். இதன் மூலம் நாட்டிலேயே அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை இந்த சியஸ் SHVS கார்கள் பெறுகின்றன. இந்த ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை தவிர EBDயுடன் கூடிய ABS, ஓட்டுனர் பக்க காற்று பைகள் (ஏயர் பேக்ஸ்) எல்லா மாடல்களிலும் சேர்கப்பட்டுள்ளது.

தற்போதய நிலவரப்படி c - பிரிவில் ஹோண்டா சிட்டி கார்களுக்கு அடுத்தப்படியாக மாருதி சுசுகியின் சியஸ் கார்கள் தான் அதிகமாக விற்பனை ஆகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட புதிய சியஸ் கார்கள் மூலம் இந்த நிலைமையை மாற்றி முதல் இடத்துக்கு முன்னேற மாருதி நிறுவனம் திட்டமிடுகிறது.இந்த புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய சியஸ் கார்கள் சமீபத்தில் GIIAS ( இந்தோனேசியா மோட்டார் ஷோ) நிகழ்வில் சில தினங்களுக்கு முன் காட்சிக்கு வைக்கப்பட்டது. விரைவில் இந்த ஹைப்ரிட் தொழில்நுட்பம்(SHVS) மற்ற மாருதி நிறுவன வாகனங்களான எர்திகா மற்றும் விறுவிறுப்பாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் ஸ்விப்ட் கார்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

k
வெளியிட்டவர்

konark

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது மாருதி சியஸ்

Read Full News

trendingசேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்
Rs.2.03 - 2.50 சிஆர்*
எலக்ட்ரிக்
Rs.41 - 53 லட்சம்*
Rs.11.53 - 19.13 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை