சியாஸ் மாடல் பொலிவேற்றப்பட்டு களம் இறங்குகிறது - மாருதி சுசூகி சியாஸ் RS அறிமுகம்
published on அக்டோபர் 20, 2015 11:14 am by konark for மாருதி சியஸ்
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
கோலாகலமான திருவிழா காலம் களை கட்டியுள்ள இந்த வேளையில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் தனது சியஸ் கார்களின் வரிசையில் சியஸ் RS என்ற புதிய பொலிவான மாடலை அறிமுகப்படுத்துகிறது. மைல்ட் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் வரும் ‘சியஸ் SHVS’என்ற மாருதியின் பிரத்தியேக எரிபொருள் சிக்கனத்திற்கான அமைப்பு, சமீபத்தில் இந்த சேடன் வகையில் கூடுதலாக பொருத்தப்பட்டு புதுபிக்கப்பட்டது. புதிய RS டிரிம், Zxi+மற்றும் Zdi+SHVS ஆகிய மாடல்களில் மட்டும் வரும். டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாக, Zxi மாடல் ரூ. 9,20,000 என்ற விலையிலும், Zdi+SHVS மாடல் ரூ. 10,28,000 என்ற விலையிலும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
சியாஸ் RS முழுவதும் கருமை நிற உட்புற தோற்றத்தை பெற்று, இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்களில் மட்டும் உயர்தர குரோமிய பாலிஷ் செய்யப்பட்டு கண்கவர் டிசைனில் வருகிறது. முன்புறம் உள்ள ஸ்பாய்லர், பக்கவாட்டு பகுதியில் உள்ள ஸ்பாய்லர், டிரங்க் லிட் ஸ்பாய்லர் மற்றும் பின்புறம் கீழ் பகுதியில் உள்ள ஸ்பாய்லர் என பலவிதமான ஸ்பாய்லர்கள் பொருத்தப்பட்டு, முழுமையான ஸ்பாய்லர் பேக்கேஜில் வருகிறது. எனவே, முன்பிருந்த சியாஸ் மாடலை விட, வெளிபுறத் தோற்றத்தில் பெரிய மாறுதல்களுடன் இந்த சேடன் வகை சியாஸ் RS கம்பீரமாக காட்சி தருகிறது.
இதையும் வாசிக்கலாம் : மாருதி சியாஸ் SHVS காரும், அதன் போட்டியாளர்களும் – விரிவான ஆய்வுரை
மாருதி சுசூக்கி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் (மார்கெட்டிங் மற்றும் சேல்ஸ்), திரு. RS கல்சி, “சியாஸ் எங்களின் வலிமையான பிராண்டுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. நடுத்தர பிரிமியம் சேடன் பிரிவில் எங்களது நிலையை மேலும் பலப்படுத்த, சியாஸ் மாடல் உறுதுணையாக உள்ளது. சியாஸ் பிராண்ட் தனது நவீன பாணியாலும், சிறப்பான அம்சங்களாலும், பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளில் அதிக மைலேஜ் கொடுப்பதாலும், அதிகமான வாடிக்கையாளர்களை தன்வசம் கவர்ந்து இழுக்கிறது. மேலும், ஸ்மார்ட் ஹைபிரிட் டீசல் வகை; பாதுகாப்பு வசதிகளான இரட்டை காற்று பைகள் மற்றும் ABS வசதி ஆகியன அடிப்படை வகையில் முதல் முறையாக பொருத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டிருப்பதால் சியாஸ் மாடலின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. சியாஸ் மாடலை அதிகம் நேசிக்கும் வாடிக்கையாளர்கள், மேலும் சிறப்பான ஸ்டைலான மாடலை வாங்க விரும்பினால், நிச்சயமாக சியாஸ் RS மாடல் மட்டும்தான் அவர்களின் அபிமான காராக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்று தெரிவித்தார்.
மாருதியின் வெற்றிகரமான பிராண்டான சியாஸ், 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஒரு வருடத்தில், 56,000 கார்கள் விற்பனையாகி அபார சாதனை படைத்துள்ளது. Zxi+மற்றும் Zdi+ ஆகிய ஸ்டாண்டர்ட் சியாஸ் மாடல்களின் அடிப்படை அம்சங்களான ஸ்மார்ட்பிளே இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம், இரட்டை காற்று பைகள் மற்றும் ABS வசதிகள் அனைத்தும் RS மாடலிலும் இடம்பெற்றுள்ளன. இது தவிர, சியாஸ் லிட்டருக்கு 28.09 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுத்து, நமது நாட்டின் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் மாடல் என்ற பெயரையும், நமது சந்தையின் முதல் ஸ்மார்ட் ஹைபிரிட் டீசல் கார் என்ற பெருமையையும் மாருதியின் சியாஸ் தட்டிச் செல்கிறது.
பரிந்துரைக்கப்பட்டது: