மாருதி பெலினோவிற்கான முன்பதிவு துவக்கம்
published on அக்டோபர் 07, 2015 01:51 pm by அபிஜித் for மாருதி பாலினோ 2015-2022
- 11 Views
- 9 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
மாருதி நிறுவனத்தின் பிரிமியம் ஹேட்ச்பேக்கான பெலினோ கார், இந்த மாதம் 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், தற்போது அந்த காரை குறைந்தபட்ச நிதியான ரூ.11,000-ல் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி துவக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள எல்லா நெக்ஸா டீலர்ஷிப்களிலும் முன்பதிவு நடைபெறுகிறது.
இந்த காருக்கான முன்பதிவை தவிர, கார் அறிமுகத்தின் போது எதிர்பார்க்கப்பட்ட SHVS மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்தை கொண்டு வருவது சந்தேகமே. ஸ்விஃப்ட் காரில் காணப்படும் 1.3-லிட்டர் 75PS டீசல் என்ஜினை, மாருதி நிறுவனம் கொண்டு வருகிறது. இது ஒரு மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் அமைந்தது என்பதால், எரிபொருள் சிக்கனத்திற்கானது அல்ல என்ற முடிவுக்கு வர முடிகிறது. பெட்ரோல் பிரிவிலும், ஸ்விஃப்ட் காரில் காணப்படும் 1.2 லிட்டர் மோட்டாரையே பெற்று, அதன் மூலம் 84PS ஆற்றலை பெற்றுக் கொள்ளும். மேற்கண்ட இரு என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டு செயல்படும். பெட்ரோல் மோட்டாரில் CVT ஆட்டோமேட்டிக் வசதி கொண்ட தேர்வும் கிடைக்கும்.
இவை மட்டுமின்றி, ஏறக்குறைய 175mm கிரவுண்ட் கிளியரன்ஸூம், உயர்தர டிரிம்களில் 16-இன்ச் அலாய் வீல்கள் ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கலாம் என்று சில வதந்திகள் பரவி வருகின்றன. முன்னதாக 354 லிட்டர் பூட் ஸ்பேஸ் காணப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ஏறக்குறைய 339 லிட்டர்கள் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பை பொறுத்த வரை, S-கிராஸில் உள்ளது போல முன்பகுதியில் இரட்டை ஏர்பேக்குகள் மற்றும் ABS ஆகியவற்றை தரமானதாக கொண்டுள்ளது. சுசுகி நிறுவனத்தின் புதிய பிளாட்பாமின் அடிப்படையை கொண்ட இந்த புதிய கார், பழைய பிளாட்பாமை சேர்ந்த ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகியவற்றின் கட்டமைப்பு உடன் ஒப்பிட்டால், 15 சதவீதம் எடை குறைவானது ஆகும். மேலும் இந்த காரை நன்றாக ஓட்டுவதற்கான வசதியை அதிகரிக்கும் வகையில் விறைப்பான அமைப்பை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
உயர்தர வகையான ஆல்ஃபாவில், காரின் உட்புறத்தில் தாராளமான இடவசதியை கொண்டு, லேதர் சீட்கள் மற்றும் டிரிம்கள் காணப்படுகிறது. வெளிபுறத்தில் ப்ரோஜெக்டர் ஹெட்லெம்ப்கள் உடன் கூடிய டேடைம் ரன்னிங் LED-களைக் கொண்டுள்ளது.