• English
  • Login / Register

மாருதி அறிமுகப்படுத்தும் சிஎன்ஜி-இன் ப்ரெஸ்ஸா, இந்தியாவின் முதல் சப் காம்பாக்ட் சிஎன்ஜி எஸ்யூவி

published on ஜனவரி 12, 2023 05:56 pm by tarun for மாருதி brezza

  • 40 Views
  • ஒரு கருத்தை எழுதுக

தூய்மையான எரிபொருள் மாற்றைப் பெறும் முதல் சப்காம்பாக்ட் எஸ்யுவி ப்ரெஸ்ஸா மட்டுமே.

Maruti Brezza CNG

  • 88பிஎஸ்/121.5என்எம் 1.5 லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி எஞ்சின்  உள்ள மாருதி ப்ரெஸ்ஸா சிஎன்ஜி 

  • கிராண்ட் விட்டாரா சிஎன்ஜிக்கு நிகராக 27 கிமீ/கிலோ வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  • எஸ்யுவியின் மிட்-ஸ்பெக் விஎக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ வகைகளுடன் எதிர்பார்க்கப்படும் சிஎன்ஜி. 

  • பெட்ரோல் தொடர்புடைய அதன் மற்ற கார்தயாரிப்புகளை விட ஒரு இலட்சத்திற்கும் அதிகமாகத் தேவை ஏற்படலாம். 

மாருது சுசுகி  ப்ரெஸ்ஸா சிஎன்ஜியை ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் அறிமுகப்படுத்தியது. இது கிராண்ட் விட்டாரா க்குப் பிறகு கார் தயாரிப்பாளரின் இரண்டாவது சிஎன்ஜி எஸ்யுவி, மேலும் அதன் துறையில் இந்த விருப்பத்தைப் பெறுவதில் இதுவே முதன்மையானது. இதன் விலை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Maruti Suzuki Brezza CNG

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கிராண்ட் விட்டாராவில் உள்ள அதே 1.5-லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி எஞ்சினே ப்ரெஸ்ஸாவிலும் உள்ளது. சிஎன்ஜியில் இயங்கும் போது எஞ்சின் 88பிஎஸ் மற்றும் 121.5என்எம் ஆற்றலை வெளிப்படுத்துகிறது மற்றும் ஐந்து-வேக கைமுறை செலுத்தலையும் (மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன்) கொண்டுள்ளது. எரிபொருள் சிக்கனம் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் இது கிராண்ட் விட்டாரா சிஎன்ஜிக்கு நிகராக 27 கிமீ/கிலோ வழங்கும் என எதிர்பார்க்கிறோம். 

 

மின்சார சூரியஒளிக்கூரை (சன்ரூஃப்), சீர்வேகக் கட்டுப்பாடு, இன்ஜின் தள்ளுகுமிழ் ஸ்டார்ட்/ஸ்டாப், தானியங்கி ஏசி, 7 இன்ச் தொடுதிரை அமைப்பு (டச்ஸ்கிரீன் சிஸ்டம்), வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, பின்புற பார்க்கிங் கேமரா, ஈஎஸ்பி, சிஎன்ஜி விருப்பத்தைப் பெற மலைச்சரிவு இறங்கல்( ஹில் ஹோல்டு) உதவி போன்ற அம்சங்களுடன் வரும் ப்ரெஸ்ஸாவின் விஎக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ தயாரிப்புகளை  நாங்கள் எதிர்பார்க்கிறோம் 

 

 

மாருதி ப்ரெஸ்ஸா சிஎன்ஜி, அதைப் போன்ற திறனுடைய பிற பெட்ரோல் மாறிகளைவிட சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாகும்  என எதிர்பார்க்கிறோம். குறிப்புக்கு, காம்பாக்ட் எஸ்யுவி ரூ. 7.99 இலட்சம் முதல் ரூ. 13.96 இலட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும். முன்பு கூறியதைப்போல, தற்போது சிஎன்ஜி விருப்பம் உள்ள இது போன்ற சப்காம்பாக்ட் எஸ்யுவிகள் வேறு எதுவும் இல்லை. இதனுடன் சேர்த்து, ஆல்டோ 800, ஆல்டோ கே10, எஸ்-பிரஸ்ஸோ, ஈகோ, வேகன் ஆர், செலிரியோ, ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, கிராண்ட் விட்டாரா, எக்ஸ்எல்6 மற்றும் எர்டிகா உள்ளிட்ட 13 சிஎன்ஜி கார்கள் மாருதியில் விற்பனைக்கு வந்துள்ளன.

மேலும் படிக்கவும்: ப்ரெஸ்ஸா ஆன் ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Maruti brezza

1 கருத்தை
1
R
ravi
Feb 7, 2023, 9:29:00 PM

Launching date brezza cng

Read More...
    பதில்
    Write a Reply

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    trending எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    • டாடா சீர்ரா
      டாடா சீர்ரா
      Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • பிஒய்டி sealion 7
      பிஒய்டி sealion 7
      Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • எம்ஜி majestor
      எம்ஜி majestor
      Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • நிசான் பாட்ரோல்
      நிசான் பாட்ரோல்
      Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
      அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • டாடா harrier ev
      டாடா harrier ev
      Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    ×
    We need your சிட்டி to customize your experience