மாருதி eVX எலக்ட்ரிக் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் தென்பட்டுள்ளது … இந்த முறை சார்ஜ் செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது
published on நவ 23, 2023 05:34 pm by shreyash for மாருதி இவிஎக்ஸ்
- 43 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் மாருதியின் முதல் ஆல் எலக்ட்ரிக் காரான மாருதி eVX, 2025 -ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாருதி eVX சோதனை கார் ஒரு EV சார்ஜிங் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது படம்பிடிக்கப்பட்டுள்ளது.
-
சமீபத்திய ஸ்பை படங்களில் பக்கவாட்டு தோற்றம் மற்றும் பின்புறமும் மட்டுமே தெரிகிறது, ஆனால் கார் மறைக்கப்பட்டிருந்ததால் புதிதாக எதையும் வெளிப்படுத்தவில்லை.
-
முந்தைய ஸ்பை ஷாட்டின் அடிப்படையில், eVX 360 டிகிரி கேமராவையும் கொண்டிருக்கும்.
-
eVX ஆனது 60 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்தும், இது 550 கி.மீ அளவுக்கு ரேஞ்சை கொடுக்கும்.
-
இதன் விலை ரூ.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி eVX ஜனவரி மாதம் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் ஒரு கான்செப்ட்டாக அறிமுகமான இது, உற்பத்திக்குத் தயாராகும் மாடலாக மாறுவதற்கு வலுவான முன்னேற்றத்தில் இருப்பதாக தோன்றுகிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியின் சோதனையை மாருதி இந்தியாவில் தொடங்கியுள்ளது, மாருதி eVX சோதனைக் காரின் மேலும் சில புதிய ஸ்பை படங்கள் எங்களிடம் உள்ளன.
நமக்கு தெரிய வரும் விவரங்கள்
மாருதி eVX -ன் சோதனைக் காரானது, ஒரு சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ் செய்யப்படும் போது, அதன் தோற்றம் மறைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. சோதனைக் காரானது 10-ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் பின்புறத்தில் தற்காலிக டெயில்லைட்களையும் கொண்டிருந்தன. தற்காலிக ஹெட்லைட் அமைப்புடன் அதன் முன்பக்கத்தை பற்றிய சிறிய பார்வையும் எங்களுக்கு கிடைத்தது. முந்தைய படங்கள் eVX 360 டிகிரி கேமராவை கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
இதையும் பாருங்கள்: சோதனையின்போது Tata Curvv மீண்டும் ஒருமுறை படம்பிடிக்கப்பட்டுள்ளது
உள்ளே எப்படி இருக்கும் ?
இந்தியா-ஸ்பெக் மாருதி eVX இன் உட்புறம் நமக்கு தெரிய வரவில்லை, ஆனால் சுஸூகி கான்செப்ட்டில் உருவான பதிப்பின் கேபின் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது. கேபினின் சிறப்பம்சமாக ஒரு இன்டெகிரேட்ட டிஸ்பிளே செட்டப் (இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்காக), செங்குத்தாக கொடுக்கப்பட்டுள்ள ஏசி வென்ட் வடிவமைப்பு, நுகத்தை ஒத்த தனித்துவமான 2-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் டிரைவ்-மோட் செலக்டராக செயல்படும் ரோட்டரி டயல் ஆகியவை அடங்கும்.
பேட்டரி மற்றும் ரேஞ்ச்
eVX எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் செயல்திறன் பற்றிய விவரங்களை மாருதி வெளியிடவில்லை என்றாலும், 550 கிமீ வரை கிளைம்டு ரேஞ்ச் -ஐ கொடுக்கும் வகையில் 60Kw பேட்டரி பேக் பொருத்தப்பட்டிருக்கும் என்று மாருதி உறுதிப்படுத்தியுள்ளது. ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷனுக்காக eVX டூயல்-மோட்டார் செட்டப்பை பெறும் என்பதையும் மாருதி உறுதிப்படுத்தியது.
அறிமுகம் மற்றும் போட்டியாளர்கள்
மாருதி eVX இந்தியாவில் 2025 -ம் ஆண்டளவில் ரூ.25 லட்சத்திற்கும் குறைவான தொடக்க விலையில் (எக்ஸ்-ஷோரூம்) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது MG ZS EV, ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக், மற்றும் வரவிருக்கும் டாடா கர்வ்வ் EV ஆகியவற்றுடன் போட்டியிடும். மேலும் இது டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV ஆகிய கார்களுக்கு ஒரு பிரீமியம் மாற்றாக கருதப்படலாம்.
0 out of 0 found this helpful