ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி கியா EV6 காரை முழுமையாக சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் ?
- 57 Views
- ஒரு கருத்தை எழுதுக
கியா EV6 பேட்டரி பேக் DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி வெறும் 20 நிமிடங்களில் 0 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடிகிறது.
கியா நிறுவனத்தின் முதல் மின்சார வாகனமான, கியா EV6 ஜூன் 2022 -ல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இங்கே, இது 77.4 கி.வாh பேட்டரி பேக் மற்றும் பின்வரும் பவர்டிரெய்ன் தேர்வுகளைப் பெறுகிறது: சிங்கிள் மோட்டார் ரியர்-வீல் டிரைவ் (229 PS/350 Nm), மற்றும் டூயல் மோட்டார் ஆல்-வீல்-டிரைவ் ( 325 PS/605 Nm) செட்டப்பை கொண்டிருக்கிறது. EV6 ஆனது 708 கிமீ வரை ARAI கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது. சமீபத்தில், எங்களிடம் டாப்-ஸ்பெக் ஆல்-வீல்-டிரைவ் EV6 இருந்தது மற்றும் DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை பார்க்க விரும்பினோம்.
சார்ஜிங் நேரம்
எங்கள் சோதனைக்காக, கியா EV6 காரை 120கி.வா DC ஃபாஸ்ட் சார்ஜரில் கிட்டத்தட்ட 0 சதவீத பேட்டரி இருக்கும்போது இணைத்தோம். இந்த பிரீமியம் EV காரை முழுமையாக ரீசார்ஜ் செய்ய எவ்வளவு நேரம் எடுத்தது என்பதை இங்கே பார்க்கலாம்:
சார்ஜிங் சதவீதம் |
சார்ஜிங் விகிதம் |
நேரம் |
50 சதவீதம் வரை |
118 கி.வா - 119 கி.வா |
20 நிமிடங்கள் |
51 - 55 சதவீதம் |
118 கி.வா - 119 கி.வா |
2 நிமிடங்கள் |
56 - 60 சதவீதம் |
118 கி.வா - 119 கி.வா |
3 நிமிடங்கள் |
61 - 65 சதவீதம் |
118 கி.வா - 119 கி.வா |
3 நிமிடங்கள் |
66 - 70 சதவீதம் |
118 கி.வா - 119 கி.வா |
2 நிமிடங்கள் |
71 - 75 சதவீதம் |
118 கி.வா - 119 கி.வா |
2 நிமிடங்கள் |
76 - 80 சதவீதம் |
118 கி.வா - 119 கி.வா |
2 நிமிடங்கள் |
81 - 85 சதவீதம் |
118 கி.வா |
5 நிமிடம் |
86 - 90 சதவீதம் |
60 கி.வா |
4 நிமிடங்கள் |
91 - 95 சதவீதம் |
35 கி.வா - 40 கி.வா |
7 நிமிடங்கள் |
96 - 98 சதவீதம் |
29 கி.வா - 30 கி.வா |
5 நிமிடம் |
99 - 100 சதவீதம் |
22 கி.வா |
5 நிமிடம் |
முக்கிய விவரங்கள்
-
கியா EV6 காலியாக இருந்து முழுமையாக சார்ஜ் ஆக சரியாக ஒரு மணிநேரம் ஆனது.
-
பேட்டரியின் முதல் பாதி வேகமாக டாப் அப் ஆனது, இரண்டாவது பாதி கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக நேரம் எடுத்தது. ஒட்டுமொத்தமாக, 0-90 சதவீதத்திலிருந்து சார்ஜ் செய்ய 45 நிமிடங்கள் ஆனது, சராசரியாக, 1 சதவீத சார்ஜ் அரை நிமிடம் ஆனது.
-
ஒரு கட்டத்தில் சார்ஜிங் விகிதம் 118 கிலோவாட்டிலிருந்து 7 கி.வா -ஆக குறைந்து, மீண்டும் ஓரிரு நிமிடங்களில் திரும்பியது.
-
பேட்டரி சார்ஜ் 85 சதவீதத்தை அடைந்த பிறகு, சார்ஜிங் வீதம் 60 கி.வா ஆக குறைந்தது, மேலும் ஒவ்வொரு 5 வினாடிகளுக்கும் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது, குறைந்த பதிவு விகிதம் 41 கி.வா ஆக இருந்தது.
-
ஒருமுறை 90 சதவீதத்தில், சார்ஜிங் வேகம் 35 கிலோவாட் முதல் 40 கிலோவாட் வரை குறைந்து, 93 சதவீதத்தில், 29 கிலோவாட் ஆனது.
-
95 முதல் 98 சதவீதம் வரை 22 கி.வா ஆகவும், 99 முதல் 100 சதவீதத்திற்கு 29 கி.வா/30 கி.வா ஆகவும் இருந்ததால், கடைசி 5 சதவீத சார்ஜ் 10 நிமிடங்களில் முடிந்தது.
சார்ஜிங் விகிதம் குறைவதற்கான காரணம்
உங்கள் EV பேட்டரி சார்ஜ் விகிதம் 80 சதவீதத்தை எட்டும்போது, சார்ஜிங் மெதுவாக இருக்கும். நீங்கள் DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தும் போது இது பொதுவாகக் காணப்படுகிறது, மேலும் பேட்டரி சூடாக தொடங்குகிறது, இது பேட்டரியின் ஆயுளை பாதிக்கும். எனவே, சார்ஜ் செய்வதை மெதுவாக்குவது அதிக வெப்பத்தைத் தடுக்க உதவுகிறது மற்றும் உங்கள் பேட்டரியை சிறந்த நிலையில் வைத்திருக்க உதவுகிறது. மேலும், பேட்டரி பேக் என்பது செல்கள் ஒன்றாக நிரம்பியதாக இருக்கும். ஆகவே மெதுவாக சார்ஜ் செய்வது என்பதால் இந்த செல்கள் அனைத்தும் சமமாக சார்ஜ் செய்யப்படுவதை உறுதி செய்யப்படுகிறது.
விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா EV6 விலை ரூ. 60.95 லட்சத்தில் இருந்து ரூ. 65.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது. அதன் ஒரே நேரடி போட்டியாளர் அதை விட குறைவான விலையில் உள்ள ஹூண்டாய் ஐயோனிக் 5 ஆகும்.மேலும் விலையின் அடிப்படையில் BMW i4, வால்வோ XC40 ரீசார்ஜ் மற்றும் வரவிருக்கும் ஸ்கோடா என்யாக் iV ஆகியவற்றுடனும் போட்டியிடுகிறது.
மேலும் படிக்க: கியா EV6 ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful