இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக Maruti Ciaz காரின் விற்பனை நிறுத்தப்பட்டது
dipan ஆல் ஏப்ரல் 08, 2025 07:19 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
விற்பனை நிறுத்தப்பட்டாலும் கூட மாருதி பலேனோவை போல சியாஸ் காரை வேறு சில பாடி டைப்களில் புதுப்பிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக மாருதி சியாஸ் காரின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. காம்பாக்ட் செடான் இந்தியாவில் 2014 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு பிறகு இப்போது மாருதி சியாஸ் காரின் விற்பனையை நிறுத்த முடிவெடுத்துள்ளது. தொடர்பாக மாருதி சுஸூகியிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சியாஸ் மாடல் குறித்து அவர்கள் கூறியது இங்கே:
மாருதி என்ன சொல்கிறது?
இது தொடர்பாக மாருதியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது, "சியாஸ் பிராண்ட் எங்கள் போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியாகவே உள்ளது. இருப்பினும் எந்தவொரு மாடலையும் போல, வாடிக்கையாளர் விருப்பத்தேர்வுகள், மேம்பாடுகள் மற்றும் சந்தைப் போக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் எங்கள் வரிசையை நாங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்கிறோம். மேலும் "ஒரு பிராண்ட் மிகவும் வலுவானதாக இருக்கும் போது, அவ்வப்போது வடிவங்கள் மாறலாம்." என அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கூறிய அறிக்கையானது நிறுத்தப்பட்ட சியாஸ் பெயர்ப்பலகை நாம் பலேனோவுடன் பார்த்ததைப் போன்றே வேறு வடிவத்தில் மீண்டும் வரக்கூடும் என்று கூறுகிறது.
குறிப்பிடத்தக்க வகையில் தற்போது ஹேட்ச்பேக் அவதாரத்தில் வரும் மாருதி பலேனோ, 1996 ஆம் ஆண்டு செடான் பாடி ஸ்டைலில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 2007 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. பின்னர் அதன் ஹேட்ச்பேக் பதிப்பில் 2015 ஆம் ஆண்டில் புத்துயிர் பெற்றது.
கார் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக இந்த விஷயங்களை உறுதிப்படுத்தும் வரை அல்லது மறுக்கும் வரை நாங்கள் மேலும் ஊகங்களைத் தவிர்க்கலாம்.
மேலும் படிக்க: 2025 Toyota Hyryder -ல் AWD செட்டப் உடன் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
மாருதி சியாஸ்: ஒரு பார்வை
மாருதி சியாஸ் 2014 ஆண்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது 2018 ஆண்டில் ஒரு டிசைன் அப்டேட்டை பெற்றது. 2020 ஆண்டு செடானில் உள்ள இன்ஜின் பிஎஸ்6 விதிகளுக்கு இணக்கமாக இருப்பதை உறுதிசெய்த மற்றொரு அப்டேட்டை பெற்றது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்புகளை சப்போர்ட் செய்யும் பெரிய டச் ஸ்கிரீன் உட்பட சில புதிய அம்சங்களுடன் இந்த அப்டேட் சியாஸை வழங்கியுள்ளது.
அதன் வெளிப்புற ஸ்டைலிங்கைப் பொறுத்தவரையில் சியாஸ் புரொஜெக்டர் அடிப்படையிலான எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல் -கள், எல்இடி முன் ஃபாக் லைட்ஸ், எல்இடி டெயில் லைட்ஸ் மற்றும் 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்களுடன் வந்தது.
உள்ளே, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் கூடிய 7-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் கலர்ஃபுல் மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே (எம்ஐடி) கொண்ட அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றைக் கொண்ட எளிய டாஷ்போர்டு வடிவமைப்புடன் டூயல்-டோன் பிளாக் மற்றும் பிரவுன் நிற உட்புறத்தைப் பெற்றுள்ளது. இது 6 ஸ்பீக்கர்கள், பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றுடன் வந்தது.
இதன் பாதுகாப்புக்காக 2 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), சென்சார்கள் கொண்ட பின்புற பார்க்கிங் கேமரா, ரியர்வியூ மிரர் (IRVM) மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
மாருதி சியாஸ்: பவர்டிரெயின் ஆப்ஷன்கள்
நிறுத்தப்பட்ட சியாஸ் பின்வரும் விவரங்களை கொண்ட நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் கிடைத்தது:
இன்ஜின் |
1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
105 PS |
டார்க் |
138 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT / 4-ஸ்பீடு AT* |
மைலேஜ் |
20.65 கிமீ/லி (MT) / 20.04 கிமீ/லி (AT) |
*AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
மாருதி சியாஸ்: விலை மற்றும் போட்டியாளர்கள்
மாருதி சியாஸின் கடைசியாக பதிவு செய்யப்பட்ட விலை ரூ.9.42 லட்சம் முதல் ரூ.12.31 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை இருந்தது. இது ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா உள்ளிட்ட காம்பாக்ட் செடான்களுக்கு போட்டியாக இருந்தது.
பலேனோவை போல சியாஸ் மீண்டும் வர வேண்டும் என்று நினைக்கிறீர்களா? கீழே உள்ள கமென்ட் பாக்ஸில் எங்களிடம் தெரிவியுங்கள்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.