ஒற்றை-இரட்டை பதிவெண் விதிமுறை: மாருதி சியஸ் மற்றும் எர்டிகா SHVS-க்கு விலக்கு
published on ஜனவரி 13, 2016 08:28 pm by manish for மாருதி சியஸ்
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
டெல்லியில் வசிக்கும் எல்லோருக்கும் ஒரு நற்செய்தி! டெல்லியில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஒற்றை-இரட்டை வாகன பதிவெண் விதிமுறையில் இருந்து தப்புவதற்கு, நீங்கள் வழி தேடுபவராக இருந்தால், உங்கள் வேண்டுதலுக்கு பதில் கிடைத்துள்ளது. ஏனெனில் மாருதியின் பிரிமியம் சேடனான சியஸ் மற்றும் புதுப்பிக்கப்பட்ட MPV-யான எர்டிகா ஆகிய கார்களுக்கு, இந்த விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு டீசல் என்ஜின் உடன் ஹைபிரிடு யூனிட்டை கொண்டிருக்கும் கார்களுக்கு மட்டுமே இந்த விதிவிலக்கு பெற தகுதியுள்ளது. மேற்கூறிய இரு கார்களுக்கும் FAME (விரைவான ஏற்பு மற்றும் ஹைபிரிடு மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பு – ஃபாஸ்டர் அடாப்ஷன் அண்டு மேனுஃபாக்ச்சரிங் ஆப் ஹைபிரிடு அண்டு எலக்ட்ரிக் வெஹிக்கிள்ஸ்) முயற்சியின் கீழ் அரசிடம் இருந்து ரூ.13000 மானியம் பெற்று வருகிறது.
இந்த சேடனில் உள்ள மாருதியின் SHVS (ஸ்மார்ட் ஹைபிரிடு வெஹிக்கிள் பை சுசுகி) தொழிற்நுட்பத்துடன் ஆயத்தப்படுத்தப்பட்ட ஹைபிரிடு ஆற்றலகத்தின் விளைவாகவே, மேற்கண்ட சலுகையை பெற முடிந்துள்ளது. இந்த சிஸ்டத்தில் ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம், பிரேக் எனர்ஜி ரிகப்பரேஷன் சிஸ்டம் மற்றும் ஒரு ISG (இன்டிகிரேட்டேட் ஸ்டார்டர் ஜெனரேட்டர்) ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. SHVS தொழிற்நுட்பத்தின் மூலம் புதுப்பிக்கப்பட்ட எர்டிகாவின் எரிபொருள் சிக்கனம் 18% அதிகரித்து, இந்த காரின் மொத்த எரிபொருள் சிக்கன அளவாக லிட்டருக்கு 24.2 கி.மீட்டரை அளிக்கிறது. அதேபோல, சியஸ் சேடனிலும் SHVS தொழிற்நுட்பத்தின் விளைவாக, எரிபொருள் சிக்கன அளவு லிட்டருக்கு 26.21 கி.மீட்டரில் இருந்து லிட்டருக்கு 28.09 கி.மீட்டராக அதிகரித்துள்ளது.
இந்த விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட மற்ற கார்களில், CNG வாகனங்கள், எலக்ட்ரிக் கார்கள், ஹைபிரிடு கார்கள், எமர்ஜென்சி வாகனங்கள், விஐபி கார்கள் மற்றும் பெண்களால் ஓட்டப்படும் கார்கள் ஆகியவை உட்படுகின்றன. சியஸ் மற்றும் புதுப்பிக்கப்பட்ட எர்டிகா ஆகியவை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள ஹைபிரிடு கார்களின் பிரிவில் உட்படுகின்றன.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful