• English
  • Login / Register

ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகளுடன் Maruti Brezza மேம்படுத்தப்பட்டுள்ளது

மாருதி brezza க்காக பிப்ரவரி 14, 2025 11:06 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 2 Views
  • ஒரு கருத்தை எழுதுக

முன்னதாக மாருதி பிரெஸ்ஸா -வின் டாப்-ஸ்பெக் ZXI+ வேரியன்ட்டில் மட்டுமே 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டன.

  • காரில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

  • பாதுகாப்புக்காக 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை உள்ளன.

  • இது 9-இன்ச் டச் ஸ்கிரீன், ஆட்டோ ஏசி மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வருகிறது.

  • 103 PS 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

  • ஆப்ஷனலான CNG பவர்டிரெய்னிலும் கிடைக்கிறது. இது 88 PS அவுட்புட்டை கொடுக்கிறது.

  • இதன் விலை ரூ.8.54 லட்சம் முதல் ரூ.14.14 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகவும் பிரபலமான சப் காம்பாக்ட் எஸ்யூவி -களில் ஒன்றான மாருதி பிரெஸ்ஸா -வின் விலை சமீபத்தில் ரூ.20,000 வரை உயர்ந்தது. மேலும் இப்போது அதன் பாதுகாப்பு வசதியில் சிறிய மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போது பிரெஸ்ஸாவில் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக கிடைக்கின்றன. முன்னதாக டாப்-எண்ட் ZXI+ வேரியன்ட்டில் மட்டுமே 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டிருந்தன.

புதிய தலைமுறை டிசையர் சோதனை செய்யப்படுவதற்கு முன்புவரை 2018 ஆம் ஆண்டில் குளோபல் NCAP -ல் இருந்து 4 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டுடன் மாருதியின் பாதுகாப்பான காராக பிரெஸ்ஸா கருதப்பட்டது. இந்த பாதுகாப்பு அப்டேட் மூலம் பிரெஸ்ஸா 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற முடியுமா? அதற்காக காத்திருக்க வேண்டும்.

பிரெஸ்ஸா -வின் பாதுகாப்பு வசதிகள்

மாருதி பிரெஸ்ஸாவில் 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர் டிஃபோகர் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவை உள்ளன..

கம்ஃபோர்ட் மற்றும் வசதி

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே சப்போர்ட் உடன் கூடிய 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், ஆர்க்மேஸ்-டியூன் செய்யப்பட்ட 6-ஸ்பீக்கர் செட்டப் (2 ட்வீட்டர்கள் உட்பட) மற்றும் பேடில் ஷிஃப்டர்கள் (ஏடி வேரியன்ட்கள்) ஆகியவை பிரெஸ்ஸாவில் கிடைக்கும். கூடுதலாக க்ரூஸ் கன்ட்ரோல், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோமெட்டிக் ஏசி, கீலெஸ் என்ட்ரி மற்றும் ஆட்டோ ஹெட்லேம்ப்கள் ஆகியவை அடங்கும். 

பிரெஸ்ஸாவுடன் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

இது இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. அதன் விவரங்கள் இங்கே:

1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல்

1.5 லிட்டர் பெட்ரோல்+CNG

103 PS

88 PS

137 Nm

121.5 Nm

5-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT*

5-ஸ்பீடு MT

*AT: டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

MT: மேனுவல் டிரான்ஸ்மிஷன்

விலை மற்றும் போட்டியாளர்கள்

Maruti Brezza Rear

சமீபத்தில் விலை மாற்றப்பட்ட பிறகு மாருதி பிரெஸ்ஸாவின் விலை ரூ.8.54 லட்சம் முதல் ரூ.14.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை இருக்கும். இது டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட் மற்றும் மஹிந்திரா XUV 3XO போன்ற சப்காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கு போட்டியாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Maruti brezza

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience