• English
  • Login / Register

மாருதி பெலினோ: ஹூண்டாய் எலைட் i20, ஹோண்டா ஜாஸ் ஆகிய கார்களுக்கு எதிராக களமிறங்கி மிரட்டுமா?

published on அக்டோபர் 05, 2015 06:11 pm by அபிஜித் for மாருதி பாலினோ 2015-2022

  • 15 Views
  • 6 கருத்துகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

Maruti Baleno vs Hyundai Elite i20 vs Honda Jazz

நீண்டகால காத்திருப்பில் உள்ள பிரிமியம் ஹேட்ச்பேக்கான YRA அல்லது பெலினோவை, பண்டிகை மாதமான அக்டோபரில் மாருதி நிறுவனம் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் அறிமுகம் மூலம், நெக்ஸா குழுவில் மற்றொரு கார் இணைகிறது. தற்போது அக்குழுவில் உள்ள S-கிராஸ், தயாரிப்பாளருக்கு ஒரு ஏற்புடைய எண்ணிக்கையிலான விற்பனையை அளித்தாலும், ஹூண்டாய் க்ரேடா உடன் ஒப்பிட்டால், இது மிகவும் குறைவாகும். மேலும், பிரிமியம் ஹேட்ச்பேக் பிரிவில் மாருதியின் எந்த வாகனங்களும் இல்லாமல், எலைட் i20 மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆகிய கார்களுக்கு பொற்காலமாக இருந்தது. ஏனெனில் இவற்றில் இருந்த இடவசதி மற்றும் அம்சங்களை வைத்து பார்த்தால், ஸ்விஃப்ட் காரால் கூட போட்டியிட முடியவில்லை. இந்த சூழ்நிலையை சமாளிக்கும் வகையில், மாருதியின் படைப்பாக இருக்க போவது பெலினோ ஆகும். எனவே எலைட் i20 மற்றும் ஜாஸ் ஆகிய போட்டியாளர்களை எதிர்கொண்டு மிரட்டும் திறன் பெலினோவிற்கு இருக்கிறதா? என்று காண்போம்.

தோற்றம்

Maruti Baleno, Honda Jazz, Elite i20, exteriors

இந்த பிரிவின் விசேஷத்தன்மை என்னவென்றால், காரின் தோற்றத்தை குறித்து எந்த வகையிலும் கவலைப்பட தேவை இருக்காது. தற்போது உலா வரும் எலைட் i20 மற்றும் ஜாஸ் ஆகிய கார்கள், ஸ்டீரியோடைப்பிக்கல் ஹேட்ச்பேக் பிரிவை சேர்ந்த மற்ற கார்களில் இருந்து தனித்தன்மையோடு காட்சி அளிக்கிறது. தேர்வு செய்யும் போது, ஒருவர் தனக்கு உகந்ததை தேர்ந்தெடுக்கும் ரசனையை பொறுத்து, அது மாறுபடுகிறது. எலைட் i20-யை பொறுத்த வரை விரிந்த தாழ்வான ஸ்லங் பாடி வகையை கொண்டுள்ளது. ஆனால் ஜாஸில் காணப்படும் சிறிய போனட் மூலம் அது பார்வைக்கு நீண்டதாக தெரிந்து, பாடியின் கோணம் மூலம் வலிமைமிக்கதாக உள்ளது. எலைட் i20-யின் விரிந்த பாடியை போல பெலினோவில் காணப்பட்டாலும், i20யை போல அல்லது ஜாஸின் கூர்மையான தோற்றம் ஆகியவை இல்லாமல், இதற்கு ஒரு ஃப்ளோட்டிங் பாடி டிசைனை கொண்டுள்ளது. சுசுகி நிறுவனத்தின் சமீபகால லிக்விட் ஃப்ளோ டிசைன் மூலம் மற்ற இரண்டை காட்டிலும் இது பார்வைக்கு சிறப்பாக காட்சி அளிக்கிறது. அதிக நேர்த்தியான மற்றும் குறைந்த ஒளிரும் தன்மையை கொண்ட கார்களை விரும்புபவர்களை, இது நிச்சயம் கவரும். மேலும் பெலினோவில் காணப்படும், DRL-கள் அடிகோடாக கொண்ட ப்ரோஜக்டர் ஹெட்லெம்ப்கள், மற்ற இரண்டிலும் காண முடிவதில்லை.

தி காக்பிட்

Maruti Baleno, Honda Jazz, Elite i20, interiors

உட்புற அமைப்பை பொறுத்த வரை, ஹோண்டா தயாரிப்பில், ஒன்றுக்கொன்று இணையும் வரிசையாக அமைந்த அடுக்குகளைக் கொண்ட மிக ஸ்டைலான கேபினும், தனித்துவம் கொண்ட 3 பாட் செட்அப் கொண்ட ஒரு ஸ்மார்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர், பல்வேறு மாற்றங்களுக்கு உட்படும் மேஜிக் சீட்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஆனால் அதை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் என்று கூற முடியாத வகையில், அதில் நேரடியாக தொடும் வசதி இல்லை. அதேபோல முற்காலத்து வீடியோ கேம் கிராஃப்ஸின் பரிணாம வளர்ச்சியை போல, ரிசல்யூஷன்-தோற்றத்தில் ஏதோ குறைபாடு காணப்படுகிறது. மறுபுறம், S-கிராஸில் காணப்பட்டு, கவர்ச்சிகரமாக இருந்த ஸ்மார்ட்ப்ளே யூனிட்டை பெலினோவிலும் காணலாம். எலைட் i20 கூட பார்வைக்கு சிறப்பாகவும், துவக்கத்தில் ஏற்றதாக இருந்தாலும், கருப்பு மற்றும் வெளிர்நிறத்திலான தோற்றத்தை மட்டுமே அளிக்கிறது. மேலும் இதன் பூட் ஸ்பேஸ் 300 லிட்டருக்கு குறைவாக உள்ளது.

தி பயர் அண்டு லைட்டிங்

Maruti Baleno, Honda Jazz, Elite i20, underpinings

மைல்டு ஹைபிரிட் டெக்னாலஜியை கொண்டு வந்துள்ள மாருதி நிறுவனம், முழுமையான ஹைபிரிட் வாகனங்கள் தொலைவில் இருந்தாலும், குறைந்த விலை கொண்ட ஹைபிரிட்களில், இது ஏற்புடைய முதல் படி ஆகும். மேலும் இந்த வாகனத்திற்கு, ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான, அரசுகளின் ஃபேம் திட்டத்தின் கீழ் கிடைக்கும் உதவியான சிறப்பு மானியங்களை பெற முடியும். அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்த்தால், இந்த காருக்கு 1.3 லிட்டர் DDiS200 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு, ஏறக்குறைய லிட்டருக்கு 30 கி.மீ. மைலேஜ் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இது மிகவும் வலிந்து ஈர்க்கும் ஒரு துவக்கம் ஆகும். சியஸ் உடன் ஒப்பிடும் போது, பெலினோ எடைக் குறைவாக இருப்பதால் மிகவும் வேகமாக செயல்பட முடியும். போட்டியை பொறுத்த வரை, ஹூண்டாய் மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள், சுசுகியைப் போல ஏதாவது செய்யாத வரை, ஜாஸ் மற்றும் எலைட் i20 ஆகியவற்றில் பெலினோவில் உள்ளது போன்ற ஹைபிரிட் ஸ்டார்டமின் பின்துணை கிடைக்க வாய்ப்பில்லை.

களமிறங்கி மிரட்டுமா?

எலைட் i20 மற்றும் ஜாஸ் ஆகிய கார்களின் விற்பனை எண்ணிக்கை வானத்தை எட்டியுள்ள நிலையில், பெலினோவினால் அதை எதிர்கொள்ள முடியுமா? என்பது கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் ஆகும். கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட i20-க்கு, அந்த நாள் முதல் ஒரு நல்ல பெயர் பின்தொடர்கிறது. ஜாஸை பொறுத்த வரை, அறிமுகம் செய்யப்பட்டது போல இல்லாமல், தற்போது சிறப்பாக விலை நிர்ணயிக்கப்பட்டு பிரிமியம் டேக்கை கொண்டுள்ளது. இதற்கிடையே மாருதி நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட உள்ள பரபரப்பு மிகுந்த இந்த பிரிமியம் காரால் போட்டியிட முடியுமா? சிறிய கார் பிரிவில் உறுதியான இடத்தை பெற்றது போல, மாருதியினால் இந்த பிரிவில் நிலைநிற்க முடியுமா? பெலினோவின் பண்புகளை வைத்து பார்க்கும் போது, அதனால் முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் இந்த சாதனையை சாதிக்க அதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படலாம்.

was this article helpful ?

Write your Comment on Maruti பாலினோ 2015-2022

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா டியாகோ 2025
    டாடா டியாகோ 2025
    Rs.5.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி பாலினோ 2025
    மாருதி பாலினோ 2025
    Rs.6.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி 4 ev
    எம்ஜி 4 ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி வாகன் ஆர்
    மாருதி வாகன் ஆர்
    Rs.8.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf8
    vinfast vf8
    Rs.60 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience