மாருதி பெலினோவின் உபரி பாகங்கள் வெளியிடப்பட்டது
மாருதி பாலினோ 2015-2022 க்கு published on nov 03, 2015 06:09 pm by அபிஜித்
- 8 பார்வைகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
கடந்த சில நாட்களுக்கு முன் பிரிமியம் ஹேட்ச்பேக்கான மாருதி பெலினோ, ரூ.4.99 லட்சம் முதல் ரூ.8.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், புதுடெல்லி) வரையிலான விலை நிர்ணயத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டியிடுவதற்கு ஏற்ற விலை நிர்ணயத்தோடு கூடிய இக்காருக்கு, தற்போது புதிய உபரி பாகங்களின் ஒரு திரள் தேர்வு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த உபரி பாகங்களோடு கூடிய கார், எப்படி இருக்கும் என்பதை அறிய விரும்புவோர், நெக்ஸா இணையதளத்தை சென்று பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.
காரின் வெளிப்புற தோற்றம் கவர்ச்சியாக அமையும் வகையிலான எண்ணற்ற தேர்வுகள் இடம் பெற்றுள்ளன. இதில் கருப்பாக மாற்றப்பட்ட அலாய் வீல்கள், ORVM மீதான கிரோம் கார்னிஷ், முன்பக்க ஸ்பாய்லர், பக்கவாட்டு ஸ்பாய்லர், பின்புற தாழ்ந்த பம்பர் ஸ்பாய்லர் ஆகியவை உபரி பாகங்களில் உட்படுகின்றன. மேற்கூரையின் மீது பொருட்களை வைக்க உதவும் அமைப்பு (ரூஃப் மவுண்டேட் லோடிங் கேரேஜ்), பக்கவாட்டு வீண்டுஸ்கிரீன் வீஸர்கள் ஆகியவற்றுடன் மண் மடல்களும் (மட் பிளாப்ஸ்), உபரி பாகங்களோடு இணைந்து கிடைக்கிறது.
உட்புறத்திற்கு தேவையான அதிகளவிலான துணி கவர்கள் உட்பட எண்ணற்ற சீட் கவர்கள் தேர்வுக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், தரை விரிப்புகள் (ஃபிளோர் மேட்ஸ்), கிளெவ்பாக்ஸ் இலுமினேஷன், சார்ஜர், ஹேர்ட்ஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் ஆம்பிளிஃபர்கள், நேவிகேஷன் சிஸ்டம், ஹேட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் பலவற்றை உள்ளடக்கிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை, மற்ற உட்புற அமைப்பிற்கு தேவையான உபரி பாகங்கள் ஆகும்.
மேலும் படிக்க: ஸ்விஃப்ட், டிசையர் ஆகியவற்றின் மதிப்பை, மாருதி பெலினோ மட்டுப்படுத்திவிட்டதா?
பாதுகாப்பு அம்சங்களில், இரு அளவிலான ஒரு குழந்தை சீட் அளிக்கப்படுகிறது. மேலும் பாதுகாப்பு உபரி பாகமாக, ஒரு கியர் லாக்கை உட்படுத்தியுள்ளது.
பிரிமியம் ஹேட்ச்பேக்கான பெலினோவிற்கு, இதுவரை நுகர்வோரிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் காருக்கான முன்பதிவின் மூலம் தயாரிப்பாளர், நல்ல தொகையை திரட்டியுள்ளார். இதிலிருந்து புதிய தோற்றம், ஒரு புதிய பிளாட்பாம் ஆகியவை, நல்ல பலனை அளித்துள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் இந்த தயாரிப்பாளரின் நெக்ஸா வரிசையில் அமைந்த டீலர்ஷிப்பிற்கு கூடுதல் கால் தடம் பதிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. S-கிராஸ் மூலம் இது கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே மாருதி சுசுகி பெலினோவின் ஃபஸ்ட் டிரைவ்வை காணலாம்
மேலும் படிக்க:
மாருதி சுசுகி பெலினோவிற்காக, 2 நாட்களில் 4600 முன்பதிவுகள்!
ஒப்பீடு: மாருதி சுசுகி பெலினோ vs எலைட் i20 vs ஜாஸ் vs போலோ vs புண்டோ இவோ
- Renew Maruti Baleno 2015-2022 Car Insurance - Save Upto 75%* with Best Insurance Plans - (InsuranceDekho.com)
0 out of 0 found this helpful