மஹிந்திரா XUV400 vs டாடா நெக்ஸான் EV மேக்ஸ்- நிஜத்தில் எந்த எலக்ட்ரிக் SUV சரியான பயண தூர ரேன்ஜ்-ஐ நமக்கு வழங்குகிறது ?
modified on மார்ச் 17, 2023 11:53 am by tarun for மஹிந்திரா xuv400 ev
- 46 Views
- ஒரு கருத்தை எழுதுக
இரண்டுமே ஒரே மாதிரியான விலையுள்ள நேரடியான போட்டியாளர்கள் மற்றும் சுமார் 450 கிலோமீட்டர்கள் பயண தூர ரேன்ஜ்-ஐ இரண்டுமே வழங்குகின்றன.
டாடா நெக்ஸான் EV இந்தியாவின் மிகப் பிரபலமான எலக்ட்ரிக் கார், சமீபத்தில் அதனுடைய நேரடி போட்டியாளராக மஹிந்திரா XUV400 ஐ பெற்றது. ரூ.15 இலட்சம் முதல் ரூ.19 இலட்சம் வரை இரண்டுக்குமே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டுமே 450 கிலோமீட்டர்களுக்கு அதிகமான பயண தூர ரேன்ஜ்-ஐ வழங்குகின்றன.
இப்போது, அவற்றின் அசல் பயண தூரத்தை ஒத்த சூழ்நிலைகளில் சோதிக்க, வெவ்வேறு நாட்களில் அவற்றின் பேட்டரியை ஒரு சதவீதத்திற்கு நாங்கள் சோதனை செய்து காலி செய்துள்ளோம். XUV400 மற்றும் நெக்ஸான் EV மேக்ஸ் இரண்டும் அவை குறிப்பிட்ட புள்ளி விவரங்களுக்கு அருகில் வர முடியுமா, அதில் எது அதிக பயணதூர ரேன்ஜ்-ஐ கொண்டுள்ளது என்பதைக் காணலாம்.
பயணதூர ரேன்ஜ் சோதனை
மாடல் |
XUV400 |
நெக்ஸான் EV Max |
கிளைம் செய்யப்பட்ட ரேன்ஜ் |
456 கிலோமீட்டர் |
453 கிலோமீட்டர் |
ரியல் வேர்ல்டு ரேன்ஜ் |
289.5 கிலோ மீட்டர் |
293.3 கிலோ மீட்டர் |
நகரத்தின் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் மலைப்பாதைகள் வழியாக EV கார்களை ஓட்டி அசல் பயணதூரம் கணக்கிடப்பட்டுள்ளது.
இரண்டு SUVக்களும் 150கிலோமீட்டர்களுக்கும் குறைவாக தங்களின் புள்ளி விவர பயண தூர ரேன்ஜ்-ஐ காட்டிலும் குறுகிய தூரம் சென்று, கலவையான பயண சூழ்நிலைகளில் 300-கிலோமீட்டர்களுக்கு நெருக்கமாகப் பயணித்துள்ளன. அதிக நிதானமாக வாகனம் ஓட்டுவதன் மூலமாக அல்லது நகரப் பயணத்தின் சாலைகளில் பயணிப்பதன் மூலமாக, உரிமையாளர்கள் முழு சார்ஜில் 300 கிலோமீட்டர்களுக்கு மேல் பயணிக்க முடியும்.
மேலும் படிக்க: மஹிந்திரா XUV400 EV: முதல் பயண விமர்சனம்
டாடா நெக்ஸான் EV மேக்ஸ் மற்றும் மஹிந்திரா XUV400 ஆகிய இரண்டும் ஈகோ முறையில் இயக்கப்பட்டன, இது ஏற்கனவே எலக்ட்ரிக் மோட்டாரின் செயல் திறன்களை விட பயணதூரத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது. அதனால் நீங்கள் சாதாரண ஸ்போர்ட் மோடில் ஓட்டினால், பயணதூரம் மேலும் குறையக்கூடும்.
இந்த புள்ளிவிவரங்களின்படி, உரிமையாளர் மும்பையிலிருந்து பூனாவிற்கு சென்று அங்கிருந்து மறுபடியும் மும்பைக்கே திரும்ப வர முடியும், அல்லது டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு அல்லது டெல்லியிலிருந்து ஆக்ராவிற்கு ஒரு வழிப் பயணமாக செல்ல முடியும்.
சார்ஜ் குறையும்போது என்ன நடக்கும்?
மஹிந்திரா XUV400: சார்ஜ் 10 சதவீதமாகக் குறையும்போது, அதிகபட்ச வேகம் மணிக்கு 50கிமீ ஆக மாறிவிடும். எட்டு சதவீதத்தை அது தொட்டுவிட்டால், அதிகபட்ச வேகம் மேலும் குறைந்து மணிக்கு 40 கிமீ ஆக மாறும் மேலும் மூன்று சதவீத சார்ஜுக்கு மணிக்கு 30 கிமீ ஆக குறையத் தொடங்கும். சார்ஜ் மிக மிக குறைவாக மாறும்போது, உங்களால் மணிக்கு 10 கிமீக்கு மேல் வேகமாக ஓட்டமுடியாது. 10 சதவீத சார்ஜ் மீதம் இருந்தாலும் கூட, அது உரிமையாளரின் முன்னுரிமைகளின்படி கிளைமேட் கன்ட்ரோல் செட்டிங்குகள் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் லெவல் ஆகியவற்றுக்கு ஆற்றலை வழங்கும்.
டாடா நெக்சான் EV மேக்ஸ்: டாடாவின் நிலையைப் பொருத்தவரை, சார்ஜ் ஒருமுறை 20 சதவீதத்திற்கும் குறைவாகும்போது ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கின் தீவிரம் அதிகமாகும். 10 சதவீதக் குறியீட்டை அது அடைந்தவுடனேயே, மீதமிருக்கும் பயணதூரம் காட்டப்படுவது இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டரிலிருந்து மறைந்துவிடும், மேலும் அதிகபட்ச வேகம் மணிக்கு 55 கிலோமீட்டராக மாற்றப்பட்டு விடும். ஸ்போர்ட் மோடு இங்கே செயலிழக்கப்பட்டிருந்தாலும் கூட இதே நிலைதான்.
மேலும் படிக்க: டாடா நெக்சான் EV மேக்ஸ் முதல் கார்பயண விமர்சனம்
விலைகள் மற்றும் மாற்று தேர்வுகள்
மாடல் |
நெக்ஸான் EV பிரைம் |
நெக்ஸான் EV மேக்ஸ் |
XUV400 EV |
விலை வரம்பு: |
ரூ. 14.49 இலட்சம் முதல் ரூ. 17.50 இலட்சம் வரை |
ரூ. 16.49 இலட்சம் முதல் ரூ. 18.99 இலட்சம் வரை |
ரூ. 15.99 இலட்சம் முதல் ரூ. 18.99 இலட்சம் வரை |
நெக்ஸான் EV மேக்ஸ் போன்றே XUV400 EV-இன் டாப்-என்ட் காரின் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்யுவி-யின் பேஸ் கார் நெக்ஸானின் காரைவிட ரூ.50,000 விலை குறைவானதாக கிடைக்கிறது. நீங்கள் பட்ஜெட்டை இன்னமும் குறைவானதாக திட்டிமிட்டிருந்தால், நெக்ஸான் EV பிரைம்-ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம், அது 320 கிலோமீட்டர்கள் பயணதூரத்தை வழங்கும்.
மேலும் படிக்கவும்: XUV400 EV ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful