Mahindra XUV 3XO மற்றும் Maruti Brezza: விவரங்கள் ஒப்பீடு
published on ஜூன் 05, 2024 06:54 pm by samarth for மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
XUV 3XO மற்றும் Brezza ஆகிய இரண்டு கார்களும் 360-டிகிரி கேமரா மற்றும் வயர்லெஸ் சார்ஜரை வழங்குகின்றன. இருப்பினும் XUV 3XO அதன் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டூயல்-ஜோன் ஏசி ஆகியவற்றுடன் தனித்து நிற்கிறது. பிரெஸ்ஸா இந்த வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை.
புதிய மஹிந்திரா XUV 3XO ஆனது அதன் போட்டியாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க தவறிய பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் போன்ற பல வசதிகளை வழங்கி தனித்துவமாக நிற்கிறது. மேலும் இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது, மஹிந்திராவின் சமீபத்திய மாடல் அதன் வாடிக்கையாளர்களுக்கு பன்முகத்தன்மையை வழங்குகிறது. அதன் போட்டியாளர்களில், மாருதி பிரெஸ்ஸா இந்த பிரிவில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக அதன் பிரபலத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. XUV 3XO-இன் பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் தனித்துவமான வசதிகள் சந்தையில் முன்னணியில் இருக்கும் பிரெஸ்ஸாவை மிஞ்ச முடியுமா? இந்த இரண்டு சப்-காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கு இடையே உள்ள விவரக்குறிப்புகளின் ஒரு விரிவான ஒப்பீட்டைக் காண்க:
அளவுகள்
மாடல் |
மஹிந்திரா XUV 3XO |
மாருதி பிரெஸ்ஸா |
நீளம் |
3990 மி.மீ |
3995 மி.மீ |
அகலம் |
1821 மி.மீ |
1790 மி.மீ |
உயரம் |
1647 மி.மீ |
1685 மி.மீ |
வீல்பேஸ் |
2600 மி.மீ |
2500 மி.மீ |
பூட் ஸ்பேஸ் |
364 லிட்டர் |
328 லிட்டர் |
-
அளவுகளைப் பொறுத்தவரை மாருதி பிரெஸ்ஸா XUV 3XO-ஐ விட 5 மி.மீ நீளமும், 38 மி.மீ உயரமும் கொண்டது.
-
XUV 3XO ஆனது ஒரு பரந்த கட்டமைப்பையும் 100 மி.மீ நீளமான வீல்பேஸையும் கொண்டுள்ளது. இது அதிக கேபின் இடத்தை வழங்குகிறது.
-
மஹிந்திரா எஸ்யூவி விவரங்களின்படி லக்கேஜ் திறன் அடிப்படையில் முன்னணியில் உள்ளது.
பவர்டிரெயின் ஆப்ஷன்கள்
மாடல் |
மஹிந்திரா XUV 3XO |
மாருதி பிரெஸ்ஸா |
||
இன்ஜின் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.2-லிட்டர் (டைரக்ட் இன்ஜெக்ஷன்) டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் |
1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (CNG) |
பவர் |
112 PS |
130 PS |
103 PS |
101 PS |
டார்க் |
200 Nm |
250 Nm வரை |
137 Nm |
136 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-MT, 6-AT |
6-MT, 6-AT |
5-MT, 6-AT |
5-MT |
கிளைம் செய்யப்படும் மைலேஜ் |
MT: 18.89 கிமீ/லி AT: 17.96 கிமீ/லி |
MT: 20.1 கிமீ/லி AT: 18.2 கிமீ/லி |
MT: 19.89 கிமீ/லி AT: 19.80 கிமீ/லி |
25.51 கிமீ/கிலோ |
-
பிரெஸ்ஸா மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட ஒரு பெரிய 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது, அதேசமயம் XUV 3XO இரண்டு டர்போ-பெட்ரோல் இன்ஜின்கள் மற்றும் டீசல் வேரியன்ட்டிற்கு இடையே ஒரு ஆப்ஷனை வழங்குகிறது.
-
XUV 3XO-இன் நிலையான பெட்ரோல் இன்ஜின் கூட பிரெஸ்ஸாவின் பவர்டிரெய்னை விடக் கூடுதலாக 9 PS மற்றும் 63 Nm டார்க்கை வழங்குகிறது.
-
இரண்டு கார்களும் அவற்றின் பெட்ரோல் இன்ஜின்களுடன் இணைக்கப்படும்போது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும்.
-
பிரெஸ்ஸாவிற்கு பிரத்தியேகமானது காருடன் கூடிய CNG கிட் ஆப்ஷன் கிடைக்கிறது.
வசதிகள்
வசதிகள் |
மஹிந்திரா XUV 3XO |
மாருதி பிரெஸ்ஸா |
வெளிப்புறம் |
|
|
உட்புறம் |
|
|
வசதிகள் |
|
|
இன்ஃபோடெயின்மென்ட் |
|
|
பாதுகாப்பு |
|
|
முக்கிய விவரங்கள்
-
XUV 3XO ஆனது கனெக்டட் LED டெயில் லைட்கள் மற்றும் பெரிய 17-இன்ச் அலாய் வீல்களுடன் மிகவும் ஸ்டைலான ஆப்ஷனாக உள்ளது.
-
கார்களின் சௌகரியம் மற்றும் வசதி என்று வரும்போது XUV 3XO அதன் பிரீமியம் வசதிகளான பனோரமிக் சன்ரூஃப், டூயல்-ஜோன் ஏசி, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் கேபினுக்குள் இருக்கும் பெரிய டிஸ்ப்ளேக்கள் போன்றவற்றால் கூடுதல் புள்ளிகளைப் பெறுகிறது. XUV 3XO-ஐ விட பிரெஸ்ஸா வைத்திருக்கும் ஒரே நன்மை அதன் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மட்டுமே ஆகும்.
-
டாப்-ஸ்பெக் வேரியன்ட்களில் XUV 3XO ஆனது லெவல் 2 ADAS, ஃப்ரண்ட் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் போன்ற மேம்பட்ட வசதிகளை வழங்குகிறது, இவை அனைத்தும் பிரெஸ்ஸாவில் இல்லை. கூடுதலாக இது 6 ஏர்பேக்குகளுடன் ஸ்டாண்டர்டாக வருகிறது. அதே சமயம் பிரெஸ்ஸா அதன் டாப் டிரிம்களில் மட்டுமே 6 ஏர்பேக்குகளை வழங்குகிறது.
மேலும் படிக்க: மஹிந்திரா எந்த 6 எஸ்யூவி கார்களை 2030க்குள் அறிமுகப்படுத்தலாம் என்பதை பார்ப்போம்
விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா XUV 3XO |
மாருதி பிரெஸ்ஸா |
ரூ.7.49 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் வரை |
ரூ.8.34 லட்சம் முதல் ரூ.14.14 லட்சம் வரை |
மஹிந்திரா XUV 3XO உடன் ஒப்பிடும்போது மாருதி பிரெஸ்ஸா அதிக ஆரம்ப விலையை கொண்டுள்ளது. இருப்பினும், டாப்-டையர் வேரியன்ட்களில் மஹிந்திரா மாடல் அதன் கூடுதல் வசதிகள் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷனின் காரணமாக விலை பிரெஸ்ஸாவை விட அதிகமாக உள்ளது. இந்த இரண்டு எஸ்யூவி-களும் நிஸான் மேக்னைட், ஹூண்டாய் வென்யூ, ரெனால்ட் கைகர், டாடா நெக்ஸான் மற்றும் கியா சோனெட் போன்ற கார்களுக்கு போட்டியாக இவை போட்டியிடுகின்றன.
மேலும் படிக்க: மஹிந்திரா XUV 3XO AMT
0 out of 0 found this helpful