Mahindra Thar Roxx மற்றும் Mahindra XUV 3XO இரண்டு கார்களும் பொதுவாக பகிர்ந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படும் 10 விஷயங்கள்
ஒரு பெரிய டச் ஸ்கிரீன் செட்டப் முதல் 360 டிகிரி கேமரா வரை, இந்த காரில் பல கம்ஃபோர்ட், வசதி மற்றும் முக்கியமான பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்படலாம்.
இந்திய மார்க்கெட்டில் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யூவி -களில் ஒன்றாக மஹிந்திரா தார் ரோக்ஸ் (தார் 5-டோர்) உள்ளது. இது 3-டோர் தாரை விட கூடுதல் இட வசதி கொண்டதாக இருக்கும். அது மட்டுமல்ல கூடுதலாக பல வசதிகளையும் கொண்டிருக்கும். மஹிந்திரா XUV 3XO காரில் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகளை மஹிந்திரா தார் ரோக்ஸ் காருக்கும் கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம். மஹிந்திரா XUV 3XO என்ற அதன் ஃபுல்லி-லோடட் சப்-4m எஸ்யூவியில் இருந்து கடன் வாங்கக்கூடிய முதல் 10 வசதிகள் இங்கே:
பனோரமிக் சன்ரூஃப்
மஹிந்திரா XUV 3XO காரை அறிமுகப்படுத்திய போது பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய வசதிகளில் ஒன்று இந்த பிரிவில் முதலாவதாக கொடுக்கப்பட்ட பனோரமிக் சன்ரூஃப் ஆகும். இன்று இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ஒரு வசதியாக இது இருக்கிறது. தார் ரோக்ஸ் காரின் சமீபத்திய ஸ்பை ஷாட்களில் காணப்பட்டதால் இந்த காரில் ஒரு பனோரமிக் சன்ரூஃப் கொடுக்கப்படும் என தெரிகிறது.
முன்பக்க பார்க்கிங் சென்சார்கள்
பார்க்கிங் செய்யும் போது குறிப்பாக குறிப்பாக இறுக்கமான இடங்களில் முன் பார்க்கிங் சென்சார்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். XUV 3XO காரின் டாப்-எண்ட் வேரியன்ட்களில் காணப்படுவது போல வரவிருக்கும் தார் ராக்ஸ்ஸில் முன் பார்க்கிங் சென்சார்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். தார் ரோக்ஸின் சில சோதனை கார்களும் இந்த பாதுகாப்பு வசதியுடன் காணப்பட்டன.
360 டிகிரி கேமரா
மற்றொரு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அம்சம் 360 டிகிரி கேமராவாகும். இது டிரைவருக்கு கார் மற்றும் அதன் சுற்றுப்புறத்தின் அனைத்து சுற்றுப் பார்வையையும் உடனடியாக வழங்குகிறது. இது பிளைண்ட் ஸ்பாட்களை தெரிந்து கொள்ள உதவுகிறது. குறிப்பாக இறுக்கமான இடங்களில் வாகனங்களை நிறுத்தும்போது அல்லது அதிக போக்குவரத்து நெரிசலில் பயணிக்கும் போது இது மிகவும் உதவியாக இருக்கும். இந்த வசதி தார் ரோக்ஸ்ஸின் சோதனைக் காரில் போது பலமுறை படம்பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதி மஹிந்திரா XUV 3XO எஸ்யூவி காரில் ஏற்கனவே உள்ளது.
டூயல் ஜோன் ஏசி
XUV 3XO போர்டில் உள்ள ஒரு பயனுள்ள வசதி டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகும். இது முன் பயணிகள் இருவரும் வெப்பநிலையை தனித்தனியாக அட்ஜஸ்ட் செய்து கொள்ள அனுமதிக்கிறது. தார் ரோக்ஸ் காரில் மஹிந்திரா இதை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பொறுத்தவரை மஹிந்திரா அதன் சப்-காம்பாக்ட் எஸ்யூவியில் இருக்கும் அதே 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை தார் ரோக்ஸ் -க்கும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்யும் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் கொண்ட தார் 3-டோர் மாடலில் இருந்து இது ஒரு பெரிய அப்டேட்டாக இருக்கும்.
ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே
பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் தார் ராக்ஸ் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. XUV 3XO காரில் ஏற்கனவே பார்த்ததைப் போலவே ஸ்கிரீன் அளவு 10.25 இன்ச் ஆக இருக்கலாம்.
அனைத்து டிஸ்க் பிரேக்ஸ்
தார் ரோக்ஸ் காரில் ஆல் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்படலாம் என என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதன் பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது. ஸ்டாண்டர்டு 3-டோர் தார் உடன் ஒப்பிடுகையில் அது முன் சக்கரங்களில் மட்டுமே டிஸ்க் பிரேக்குகளை பெறுகிறது. மஹிந்திராவின் சமீபத்திய மாடலான XUV 3XO காரில் அனைத்து வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே தார் ரோக்ஸ் காரிலும் கொடுக்கப்படலாம்..
ADAS
XUV 3XO காரில் உள்ள அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) என்பது தார் 5-டோர் பதிப்பிற்குச் செல்லக்கூடிய வசதிகளில் ஒன்றாகும். அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் லேன் சேஞ்ட் அசிஸ்ட் ஆகிய சில முக்கியமான ADAS வசதிகள் ரோக்ஸ் காரில் கொடுக்கப்படலாம்.
வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்
பயணிகளின் வசதிக்காக மஹிந்திரா தனது வரவிருக்கும் ஆஃப்-ரோடரில் வயர்லெஸ் ஃபோன் சார்ஜரை கொடுக்கலாம். இது ஏற்கனவே XUV 3XO காரில் உள்ளது.
6 ஏர்பேக்குகள்
தார் 5-டோர் 6 ஏர்பேக்குகளுடன் வர வாய்ப்புள்ளது. இதுவும் XUV 3XO காரிலிருந்து கடன் வாங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாறாக தற்போதைய 3-டோர் தாரில் டூயல் முன்பக்க ஏர்பேக்குகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன.
-
கூடுதல் தகவல்
TPMS
டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) வசதி ஏற்கனவே தார் 3-டோர் மாடல் மற்றும் XUV 3XO ஆகியற்றில் கிடைக்கிறது ஆகவே இது வரவிருக்கும் தார் ரோக்ஸ் காரிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா XUV 3XO உடன் தார் ரோக்ஸ் பகிர்ந்து கொள்ளலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கும் சில முக்கிய வசதிகள் இவை. இரண்டு எஸ்யூவி சலுகைகளுக்கு இடையில் வேறு என்ன பொதுவானதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? கமென்ட் பாக்ஸ் பகுதியில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்.
மேலும் படிக்க: மஹிந்திரா தார் ஆட்டோமெட்டிக்
samarth
- 72 பார்வைகள்