சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மஹிந்திரா ஸ்கார்பியோ N காரை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள பிக்அப்பை சோதனை செய்து வரும் மஹிந்திரா நிறுவனம்

published on நவ 16, 2023 04:25 pm by ansh for mahindra global pik up

டெஸ்டிங் நேரத்தில் இந்த ஆண்டில் காட்சிக்கு வைக்கப்பட மஸ்குலர் வடிவத்தை இப்போது பார்க்க முடியவில்லை.

  • மஹிந்திரா ஸ்கார்பியோ N புதிய வாகனம் மறைக்கப்பட்ட நிலையில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது

  • உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிக் அப் அம்ஸத்தின் கரடு முரடான வடிவமைப்பு இதில் காணப்படவில்லை.

  • கேபின் ஸ்கார்பியோ N போலவே இருக்கும், மேலும் இதில் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கொண்டிருக்கலாம்.

  • ஸ்கார்பியோ N -ன் 2.2-லிட்டர் டீசல் இன்ஜினின் அப்டேட்டட் மாடல் பயன்படுத்தப்படும்.

  • ரூ.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக தொடக்க விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா குளோபல் பிக்அப் என்ற பெயரில் எலக்ட்ரிக் தார் உடன் ஸ்கார்பியோ N அடிப்படையிலான பிக்கப் டிரக் -கை மஹிந்திரா இந்த ஆண்டின் தொடக்கத்தில் காட்சிப்படுத்தியது, மேலும் இது பருமனான மற்றும் மஸ்குலர் வடிவமைப்பை கொண்டிருந்தது. சமீபத்தில், ஒரு புதிய மஹிந்திரா பிக்கப் அதன் ஸ்பை குறித்தஒரு வீடியோ ஆன்லைனில் வெளிவந்தது, அதில் காரின் பின்புறம் படமெடுக்கப்பட்டது . இருப்பினும், உருவம் மறைக்கப்பட்ட சோதனை காரின் வடிவமைப்பு மிகவும் வேறுபட்டு இருந்தது, அதை இப்போது பார்க்கலாம்.

முரட்டுதனமான தோற்றம் இல்லை

ஸ்பை வீடியோவில், புதிய மஹிந்திரா பிக்கப் காரின் பின்பகுதியை விரிவாக பார்க்க முடிகிறது, மேலும் குளோபல் பிக் அப் கான்செப்ட்டின் கரடுமுரடான மற்றும் மசில் வடிவமைப்பு இதில் இல்லை. இது நடுவில் ஒரு கைப்பிடியுடன் ஒரு தட்டையான பின்புற வடிவத்தை கொண்டுள்ளது, பெரிய மஹிந்திரா லோகோவை எங்கும் காணவில்லை மற்றும் டெயில் விளக்குகளும் நாம் டிசைனில் பார்த்ததை விட வேறுபட்டு உள்ளது.

மேலும் படிக்க: இந்திய அறிமுகத்தை நெருங்கும் மஹிந்திரா குளோபல் பிக் அப்... வடிவமைப்பு காப்புரிமைக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது

மேலும், புதிய டிசைனில் ஒரு பெரிய பின்புற பம்பர் மற்றும் ஸ்கிட் பிளேட் இருந்தது, ஆனால் அவை டெஸ்டிங் வாகனத்தில் இல்லை. புதிய டிசைனில் உள்ளதை போன்றே டெஸ்டிங் காரிலும் ஸ்கார்பியோ N போன்ற அதே அலாய் வடிவமைப்பை கொண்டுள்ளது, ஆனால் உலகளவில் வெளியிடப்பட்ட மாடலில், ஆஃப்-ரோடு டயர்கள் வேறு வடிவத்தில் இருந்தன.

இந்த கார் ஸ்கார்பியோ N போன்ற வடிவமைப்பை கொண்டிருந்தாலும்இரண்டுக்கும் இடையே தெளிவான வேறுபாட்டை ஏற்படுத்திய வடிவமைப்பு மாற்றங்கள் - பக்கவாட்டு படி, ரூஃப் ரேக் மற்றும் பெரிய வீல் ஆர்ச் போன்றவை – டெஸ்டிங் காரில் காணப்படவில்லை.

இந்த அதிகப்படியான எளிமைப்படுத்தப்பட்ட வடிவமைப்பு விவரங்கள், மஹிந்திரா பிக்கப்பிற்காக உருவாக்கப்பட்ட உண்மையான வடிவமைப்பை மறைப்பதற்கான ஒரு பகுதியாகவும் இருக்கலாம், இது எந்த நேரத்திலும் இந்திய சந்தையில் நுழையும் என்ற எதிர்பார்ப்பு தற்போது இல்லை.

கேபின் மற்றும் அம்சங்கள்

சோதனை காரின் கேபினின் ஒரு பார்வை மட்டுமே வீடியோவில் தென்பட்டது. இருப்பினும், குளோபல் பிக் அப் -ன் உட்புறங்கள் வெளியிடப்பட்ட நேரத்தில் வெளிப்படுத்தப்பட்டதால், கேபின் ஸ்கார்பியோ N போன்றே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனவே, கருப்பு மற்றும் பழுப்பு நிற கேபின் தீம், மல்டி லெவல் டாஷ்போர்டு மற்றும் குரோம் எலமெண்ட்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும் படிக்க: அக்டோபர் 2023 காம்பாக்ட் எஸ்யூவி விற்பனையில் ஹூண்டாய் கிரெட்டாவை முந்திய மஹிந்திரா ஸ்கார்பியோ N மற்றும் கிளாசிக்.

புதிய மஹிந்திரா பிக்கப்பில் 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டட் கார் டெக்னாலஜி, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், மல்டிபிள் ஏர்பேக்ஸ் மற்றும் டிரைவர் தூக்கத்தைக் கண்டறியும் அமைப்பு உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அம்சங்களுடன் வரும்.

பவர்டிரைன் ஆப்ஷன்ஸ்

மஹிந்திரா குளோபல் பிக் அப் ஆனது ஸ்கார்பியோ N இன் 2.2 லிட்டர் டீசல் இன்ஜினின் (175 PS மற்றும் 400 Nm வரை) புதுப்பிக்கப்பட்ட மாடலுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வரும். பிக்கப் டிரக் மல்டிபிள் டிரைவ் மோட்களுடன் 4-வீல் டிரைவ் செட்டப்பையும் கொண்டிருக்கும்.

அறிமுகம், விலை மற்றும் போட்டியாளர்கள்

குளோபல் பிக்கப்பிற்கான வெளியீட்டு தேதி எதையும் மஹிந்திரா வெளியிடவில்லை, ஆனால் இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு பரிசீலிக்கப்படும், மேலும் இது 2026 ஆம் ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இதன் ஆரம்ப விலை ரூ. 25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும். இது டொயோட்டா ஹைலக்ஸ் -க்கு மாற்றாக இருக்கும் அதே வேளையில், இசுஸூ V-கிராஸ் -க்கு போட்டியாக இருக்கும்

Image Source

மேலும் படிக்க: மஹிந்திரா ஸ்கார்பியோ N ஆட்டோமேட்டிக்

a
வெளியிட்டவர்

ansh

  • 17 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது மஹிந்திரா Global Pik அப்

Read Full News

trendingபிக்அப் டிரக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை