Mahindra Scorpio Classic பாஸ் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ஸ்கார்பியோ கிளாசிக் பாஸ் எடிஷன் ஆனது பிளாக் கலர் சீட் செட்டப் மற்றும் டார்க் குரோம் டச் உடன் வருகிறது.
-
வெளிப்புறத்தில் கிரில்லை சுற்றி டார்க் குரோம் கார்னிஷ், ஹெட்லைட்கள், டெயில் லைட்டுகள், ஃபாக் லைட்டுகள் மற்றும் டோர் ஹேண்டில்கள் ஆகியவை உள்ளன.
-
உள்ளே அதே பிளாக் மற்றும் பெய்ஜ் டூயல்-டோன் டேஷ்போர்டு உள்ளது.
-
ஆல்-பிளாக் சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் பிளாக் மற்றும் பெய்ஜ் கலர் கேபின் தீம் இருக்கிறது.
-
9-இன்ச் டச் ஸ்கிரீன், ஆட்டோ ஏசி மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
-
பாதுகாப்புக்காக இது டூயல் முன்பக்க ஏர்பேக்குகள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உடன் வருகிறது.
-
பாஸ் பதிப்பில் பின்புற பார்க்கிங் கேமராவும் உள்ளது.
2024 பண்டிகைக் காலத்திற்கான ஸ்பெஷல் மற்றும்/அல்லது லிமிடெட் எடிஷன் வெளியீடுகளின் வரிசையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் இப்போது இணைகிறது. இப்போது பாஸ் பதிப்பில் கிடைக்கிறது. பிளாக் நிற சீட் அப் ஹோல்ஸ்டரியுடன், வெளிப்புறத்தில் டார்க் குரோம் ஸ்டைலிங் எலமென்ட்கள் உள்ளன. ஸ்கார்பியோ கிளாசிக் -ன் பாஸ் பதிப்பிற்கான விலையை மஹிந்திரா இன்னும் அறிவிக்கவில்லை.
இந்த எடிஷனில் உள்ள மாற்றங்கள்
ஸ்கார்பியோ கிளாசிக் பாஸ் பதிப்பின் வெளிப்புறத்தில் டார்க் குரோம்-ஃபினிஷ் செய்யப்பட்ட கிரில், சில்வர் ஸ்கிட் பிளேட் கொண்ட முன் பம்பர் எக்ஸ்டெண்டர் ஆகியவை உள்ளன. ஃபாக் லைட்ஸ், பானட் ஸ்கூப் மற்றும் டோர் ஹேண்டில்கள், ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்களில் டார்க் குரோம் ஆக்ஸென்ட்களுக்கான டார்க் க்ரோம் கொடுக்கப்பட்டுள்ளது. டோர் வைசர்கள், பிளாக்-அவுட் ரியர் பம்பர் ப்ரொடெக்டர் மற்றும் கார்பன்-ஃபைபர்-ஃபினிஷ் செய்யப்பட்ட ORVM -கள் (எக்ஸ்ட்டீரியர் ரியர் வியூ மிரர்ஸ்) போன்ற கூடுதல் ஆக்ஸசரீஸ்கள் உங்களுக்கு கிடைக்கும். உள்ளே ஸ்கார்பியோ கிளாசிக்கின் இந்த ஸ்பெஷல் எடிஷன் அதே டூயல்-டோன் பிளாக் மற்றும் பீஜ் டேஷ்போர்டு தீம் உள்ளது. ஆனால் இது ஆல் பிளாக் இருக்கை அப்ஹோல்ஸ்டரியுடன் வருகிறது.
காரில் உள்ள வசதிகள்
ஸ்கார்பியோ கிளாசிக்கில் 9-இன்ச் டச் ஸ்கிரீன், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஏசி ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக டூயல் முன் ஏர்பேக்குகள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளன. பாஸ் பதிப்பில் பின்புற பார்க்கிங் கேமராவும் கிடைக்கும்.
பவர்டிரெய்ன் விவரங்கள்
மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை 2.2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வழங்குகிறது. இது ஸ்கார்பியோ N -ன் குறைந்த சக்தி வாய்ந்த டீசல் பதிப்பிலிருந்து பெறப்பட்டது. விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
2.2 லிட்டர் டீசல் |
பவர் |
132 PS |
டார்க் |
300 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT |
ஸ்கார்பியோ N போல இல்லாமல் ஸ்கார்பியோ கிளாசிக் 4-வீல்-டிரைவ் (4WD) டிரைவ் டிரெய்னின் ஆப்ஷனை பெறவில்லை.
விலை போட்டியாளர்கள்
ஸ்கார்பியோ கிளாசிக் பாஸ் எடிஷனின் விலை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எஸ்யூவியின் வழக்கமான வேரியன்ட்களின் விலை ரூ. 13.62 லட்சம் முதல் ரூ.17.42 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது. இது மஹிந்திரா ஸ்கார்பியோ என் மற்றும் மஹிந்திரா XUV700 ஆகியவற்றுக்கு ஒரு மலிவு விலை மாற்றாக இருக்கும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: மஹிந்திரா ஸ்கார்பியோ டீசல்