‘BE 6e’ பிராண்டிங்கில் ‘6E’ என்ற குறியீட்டை பயன்படுத்தியது தொடர்பாக இண்டிகோவின் வழக்கிற்கு Mahindra பதிலளித்துள்ளது
மஹிந்திரா தனது 'BE 6e' பிராண்டிங் இண்டிகோவின் '6E' இலிருந்து அடிப்படையில் வேறுபட்டது என்று உறுதியளிக்கிறது, இது குழப்பத்தின் சாத்தியமான அபாயத்தை நீக்குகிறது. முன்னதாக பெயருக்கான வர்த்தக முத்திரை பதிவைப் பெற்றதாகவும் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது
மஹிந்திரா தனது 'BE' மற்றும் 'XEV' துணை பிராண்டுகளின் கீழ் இரண்டு புதிய எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தி ஒரு வாரமே ஆகியுள்ள நிலையில், தற்போது இந்திய வாகன உற்பத்தியாளர் இண்டிகோவின் தாய் நிறுவனமான இண்டர் குளோப் ஏவியேஷன் லிமிடெட் உடன் சட்ட சிக்கலை எதிர்கொள்கிறார். மஹிந்திரா BE 6e-க்கான '6E' பிராண்டிங் தொடர்பாக மஹிந்திராவுக்கு எதிராக இண்டிகோ வர்த்தக முத்திரை மீறல் வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. '6E' என்பது இண்டிகோ விமானங்களுக்கான ஏர்லைன் குறியீடு என்பதால், இது இரண்டு பிராண்டுகளுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று இண்டிகோ கவலை தெரிவித்துள்ளது.
மஹிந்திராவின் பதில்
தற்போது நிலவி வரும் சட்ட மோதலுக்கு பதிலளிக்கும் வகையில், மஹிந்திரா அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. இண்டிகோவின் '6E' விமானக் குறியீடான '6E'-இல் இருந்து அடிப்படையில் 'BE 6e' வேறுபட்டது என்பதை நிறுவனம் எடுத்துக்காட்டுகிறது.
இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த மஹிந்திரா, “மஹிந்திரா தனது எலக்ட்ரிக் எஸ்யூவி-களான BE 6e மற்றும் XEV 9e ஆகியவற்றை நவம்பர் 26, 2024 அன்று அறிமுகப்படுத்தியது. நிறுவனம் அதன் எலக்ட்ரிக் தோற்றம் கொண்ட எஸ்யூவி போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியாக 'BE 6e' -க்கான கிளாஸ் 12 -இன் (வாகனங்கள்) கீழ் வர்த்தக முத்திரை பதிவுக்கு விண்ணப்பித்துள்ளது.
எனவே, மஹிந்திராவின் பெயர் "BE 6e" என்பதாலும், "6E" தனித்து நிற்கவில்லை என்பதாலும், நாங்கள் முரண்பாட்டைக் காணவில்லை. இது இண்டிகோவின் "6E" இலிருந்து அடிப்படையில் வேறுபட்டது, இது ஒரு விமான நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, இதனால் குழப்பம் ஏற்படும் அபாயத்தை தவிர்க்கிறது. தனித்துவமான ஸ்டைலிங் அவர்களின் தனித்துவத்தை மேலும் பிரதிபலிக்கிறது.
இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் அவர்களின் நல்லெண்ணத்தை மீறுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கவலைகளை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டோம், இது எங்கள் நோக்கம் அல்ல. நாங்கள் தற்போது அவர்களுடன் சுமுக தீர்வை எட்டுவதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்." எனத் தெரிவித்தார்
மேலும் பார்க்க: Mahindra XEV 9e ஆல் ஈர்க்கப்பட்ட XEV 7e (XUV700 EV)-இன் ப்ரொடக்ஷன்-ஸ்பெக் படங்கள் இணையத்தில் கசிந்து அதிக எதிர்பார்ப்புக்களை உருவாக்கியுள்ளது
மஹிந்திரா BE 6e இன் சிறப்பம்சங்கள் என்ன?
மஹிந்திரா BE 6e என்பது 5 சீட்டர் ஆல்-எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும், இது வாகன உற்பத்தியாளரின் புதிய EV-குறிப்பிட்ட INGLO இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் எதிர்கால டிசைன் மற்றும் ஒரு விரிவான அம்சம் பட்டியல், BE 6e சந்தையில் உள்ள மற்ற எலக்ட்ரிக் எஸ்யூவி-களில் இருந்து தனித்து நிற்கிறது.
மஹிந்திரா BE 6e ஆனது டூயல் டிஜிட்டல் ஸ்கிரீன்கள் (ஒன்று டச்ஸ்கிரீன் மற்றும் மற்றொன்று டிரைவரின் டிஸ்ப்ளே), மல்டி-ஜோன் ஏர் கண்டிஷனிங், டூயல் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்கள் மற்றும் 1,400 W 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. எஸ்யூவி ஆனது ஃபிக்ஸ்ட் கிளாஸ் ரூஃப் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
BE 6e-இல் உள்ள பாதுகாப்பு அம்சங்களில் 7 ஏர்பேக்குகள் (தரநிலையாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை அடங்கும். லேன்-கீப் அசிஸ்ட், ஃபார்வர்ட்-கோலிஷன் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற லெவல் 2 அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டங்களுடன் (ADAS) இது வருகிறது.
BE 6e இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் மற்றும் பின்வரும் விவரக்குறிப்புகளுடன் கிடைக்கிறது:
பேட்டரி பேக் ஆப்ஷன் |
59 கிலோவாட் |
79 கிலோவாட் |
கிளைம் செய்யப்படும் ரேஞ்ச் (MIDC பகுதி I+ பகுதி II) |
535 கி.மீ. |
682 கி.மீ. |
பவர் |
231 PS |
286 PS |
டார்க் |
380 Nm |
380 Nm |
டிரைவர்ட்ரைன் |
RWD |
RWD |
RWD - Rear-wheel-drive
RWD - ரியர்-வீல்-டிரைவ்
விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா BE 6e-யின் விலை ரூ. 18.90 லட்சத்தில் தொடங்குகிறது (அறிமுக, எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா). இது டாடா கர்வ் EV மற்றும் MG ZS EV உடன் போட்டியிடுகிறது, மேலும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV மற்றும் மாருதி eVX ஆகியவற்றிற்கும் ஒரு சிறந்த போட்டியை எதிர்கொள்ளும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளைப் பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: மஹிந்திரா BE 6e ஆட்டோமேட்டிக்