Mahindra XEV 9e ஆல் ஈர்க்கப்பட்ட XEV 7e (XUV700 EV) இன் ப்ரொடக்ஷன்-ஸ்பெக் படங்கள் இணையத்தில் கசிந்து அதிக எதிர்பார்ப்புக்களை உருவாக்க ியுள்ளது
modified on டிசம்பர் 04, 2024 05:53 pm by shreyash for மஹிந்திரா xev இ8
- 58 Views
- ஒரு கருத்தை எழுதுக
XEV 7e என்பது மஹிந்திரா XUV700 இன் அனைத்து-எலக்ட்ரிக் பதிப்பாகும் மற்றும் XEV 9e SUV-கூபேக்கு SUV இணையாக உள்ளது.
-
வெளிப்புற வடிவமைப்பு சிறப்பம்சங்களில் தலைகீழ் எல்-வடிவ இணைக்கப்பட்ட LED DRL-கள் மற்றும் ஸ்பிலிட் ஹெட்லைட் செட்அப் ஆகியவை அடங்கும்.
-
XEV 7e -இன் கேபின் XEV 9e-இலிருந்து உத்வேகம் பெறுகிறது, இதில் டிரிபிள்-ஸ்கிரீன் செட்அப் மற்றும் 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை ஒளிரும் 'இன்ஃபினிட்டி' மஹிந்திரா லோகோவுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
-
முக்கிய அம்சங்களில் மல்டி-ஜோன் ஏசி, மெமரி செயல்பாட்டுடன் இயங்கும் மற்றும் காற்றோட்டமான முன் சீட்கள் மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.
-
பேட்டரி ஆப்ஷன்களில் 59 கிலோவாட் மற்றும் 79 கிலோவாட் பேக்குகள் இருக்கலாம், இது தோராயமாக 650 கி.மீ. ரேஞ்ஜை வழங்குகிறது
-
எதிர்பார்க்கப்படும் ஆரம்ப விலை சுமார் ரூ. 20.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கக்கூடும்
மஹிந்திரா சமீபத்தில் 'XEV' உட்பட தனித்துவமான பிராண்ட் பெயர்களில் இரண்டு புதிய எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தியது. மஹிந்திரா நிறுவனம் முன்னதாக XUV700 எஸ்யூவி-யை எலக்ட்ரிக் காரக அறிமுகம் செய்யும் திட்டங்களை அறிவித்தது, இது அதன் XEV வரிசையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா இப்போது ஆல்-எலக்ட்ரிக் XUV700-க்கான வர்த்தக முத்திரையை தாக்கல் செய்துள்ளது, இது XEV 7e என பெயரிடப்படலாம் என்று பரிந்துரைக்கிறது. சமீபத்தில், ப்ரொடக்ஷன்-ஸ்பெக் XEV 7e-இன் படங்கள் வெளியாகின. ஆன்லைனில் வெளியான படங்கள் அதன் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன் அமைப்புகளைக் காட்டுகின்றன.
வெளிப்புறம்
முதல் பார்வையில், XUV700-இன் ஆல்-எலக்ட்ரிக் வெர்ஷன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா XEV 9e உடன் அதன் டிசைன் ஒற்றுமையை பகிர்ந்து கொள்கின்றன. குறிப்பாக, முன்புற டிசைன் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தெரிகிறது, இதில் தலைகீழ் எல்-வடிவ இணைக்கப்பட்ட LED DRL-கள் மற்றும் ஸ்ப்ளிட் ஹெட்லைட் செட்அப் உள்ளது.
XEV 7e ஆனது XUV700 போன்ற அதே டிசைன் ப்ரொபைலை தக்கவைத்துக்கொள்கிறது, இது ஒரு எஸ்யூவி என வேறுபடுத்துகிறது, அதேசமயம், XEV 9e ஆனது எஸ்யூவி-கூபேவாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. XEV 7e -இன் பின்புற அமைப்பு பற்றிய முழுப் பார்வை இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், ரேப்பரவுண்ட் LED டெயில் லைட்கள் XUV700 உடன் நெருக்கமாக ஒத்திருப்பதை பூட்டின் படம் காட்டுகிறது.
XEV 9e போன்ற கேபின் அமைப்பு
XEV 7e-இன் கேபின், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா XEV 9e-ஐ ஒத்திருக்கிறது. இது அதே டூயல் டோன் கருப்பு மற்றும் வெள்ளை உட்புற தீம்மைக் கொண்டுள்ளது, சென்ட்ரல் கன்சோலில் பியானோ கருப்பு செருகல்களால் நிரப்பப்படுகிறது. டிரைவரின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் பயணிகள் டிஸ்ப்ளே ஆகியவற்றிற்கான மூன்று 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்களை உள்ளடக்கிய டிரிபிள்-ஸ்கிரீன் செட்அப் டேஷ்போர்டின் தனித்துவமான அம்சமாகும். கூடுதலாக, இது ஒரு ஒளிரும் 'இன்ஃபினிட்டி' லோகோவுடன் 2-ஸ்போக் ஸ்டீயரிங்கைக் கொண்டுள்ளது.
இணையத்தில் கசிந்த படங்களின்படி, XEV 7e ஆனது மல்டி-ஜோன் ஏசி, பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், மெமரி செயல்பாட்டுடன் இயங்கும் மற்றும் காற்றோட்டமான முன் சீட்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களை வழங்கும். பாதுகாப்பிற்காக, இதில் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), மற்றும் XEV 9e போன்று 7 ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க: Mahindra காரில் முதன் முதலில் அறிமுகமாகும் 10 சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
பவர்டிரெயின் ஆப்ஷன்கள்
XEV 7e-க்கான பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் விவரக்குறிப்புகளை மஹிந்திரா இன்னும் வெளியிடவில்லை என்றாலும், XEV 9e போன்ற அதே ஆப்ஷன்களைப் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விரிவான விவரக்குறிப்புகள் பின்வருமாறு:
பேட்டரி பேக் ஆப்ஷன் |
59 கிலோவாட் |
79 கிலோவாட் |
கிளைம் செய்யப்படும் ரேஞ்ச் (MIDC கட்டம் I+II) |
542 கி.மீ |
656 கி.மீ |
எலக்ட்ரிக் மோட்டார் (கள்) எண்ணிக்கை |
1 |
1 |
பவர் |
231 PS |
286 PS |
டார்க் |
380 Nm |
380 Nm |
டிரைவர்ட்ரைன் |
RWD |
RWD |
XEV 7e-க்கு கிளைம் செய்யப்படும் ரேஞ்ச் புள்ளிவிவரங்கள் வேறுபடலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கூடுதலாக, மஹிந்திரா ஆல்-எலக்ட்ரிக் XUV700-க்கான ஆல்-வீல்-டிரைவ் (AWD) ஆப்ஷனை அறிமுகப்படுத்தலாம், ஏனெனில் இந்த அம்சம் ஏற்கனவே அதன் இன்டர்னல் கம்பஸ்டியன் இன்ஜின் (ICE) வேரியன்ட்டில் உள்ளது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா XEV 7e ரூ.20.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா சஃபாரிக்ஸ் EV உடன் நேரடியாக போட்டியிடும், அதே நேரத்தில் XEV 9e-க்கு ஒரு எஸ்யூவி மாற்றாக செயல்படும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளைப் பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: மஹிந்திரா XUV700 டீசல்