• English
  • Login / Register

மஹிந்த்ரா KUV 100: மஹிந்த்ராவின் அடுத்த வெற்றி படைப்பாக இருக்குமா?

published on டிசம்பர் 28, 2015 02:47 pm by அபிஜித் for மஹிந்திரா கேயூவி 100 என்எக்ஸ்டி

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

Mahindra KUV 100

இறுதியாக வெளியான மஹிந்திராவின் TUV 300 மாடல், காம்பாக்ட் SUV பிரிவில், இந்நிறுவனத்திற்கென ஒரு தனி இடத்தை ஏற்படுத்தி தந்தது. எக்கோ ஸ்போர்ட், டஸ்டர், கிரேட்டா மற்றும் S- க்ராஸ் போன்ற கார் மாடல்களின் மேல் உள்ள மக்களின் ஆர்வத்திற்கு எதிராக போட்டியிட, தனது காரின் மைலேஜை அதிகப்படுத்தி, போட்டியை வெகுவாக குறைத்து தனது சாமர்த்தியத்தை வெளிப்படுத்தியது. மஹிந்த்ரா தனது புதிய மாடலான KUV 100 காரை, ஜனவரி மாதம் 15 -ஆம் தேதி அறிமுகப்படுத்துவது உறுதி செய்யப்பட்டிருப்பதால் இதன் முன்பதிவு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இது ஒரு ஹாட்ச்பேக் அளவிலான கார், ஆனால் கம்பீரமான SUV தோற்றத்தை உடையதாக இருக்கும். இதை பற்றிய அனைத்து விவரங்களையும், நாம் இங்கு விரிவாக அலசலாம்.

Mahindra KUV 100

இந்தியர்களாகிய நாம், நம்முடைய நாட்டில் உள்ள பார்க்கிங் இடத்திற்கு ஏற்ப கச்சிதமாக பொருந்தும் அளவில் நமது கார் இருக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில், நமது கார் அண்டை வீட்டாரின் பொறாமையை தூண்டும் அளவில் பெரியதாகவும் இருக்கவேண்டும் என்றும் விரும்புவோம். புதிய KUV 100 காரின் தோற்றமானது, சிறிதும் ஹாட்ச்பேக் கார்களைப் போல இல்லை என்று நாங்கள்  நிச்சயமாகக் கூறுகிறோம். மனித முகத்தைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள இதன் முன்புறத்தில், கம்பீரமான கண்புருவம் போன்ற இதன் முன்புற விளக்கு நீண்டு, முன்புற கதவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்புற வசீகரமான சிறிய கிரில்லின் இரண்டு ஓரங்களிலும் பொருத்தப்பட்டுள்ள புதுமையான DRL விளக்குடன் இணைந்துள்ள மிரட்டும் ஹெட்லாம்ப்; மற்றும் உயரமாக பொருத்தப்பட்டுள்ள கார்விங் வேலைப்பாடுடன் கூடிய பம்பர் ஆகியன இந்த மினி SUV மாடலை முழுமையடைய செய்துள்ளது என்றால் அது மிகை ஆகாது. இதன் பக்க வாட்டில் சென்று பார்த்தால், இதன் கம்பீரமான மேற்பகுதியில் அழகிய கோடு போன்ற க்ளாடிங் வளைவுகள் கடைசி வரை சென்று, கார் முழுவதும் சுற்றியுள்ளது. முன்புற சக்கரத்தின் மேலே உள்ள ஆர்ச் போலவே, பின்புற சக்கரத்தின் மேற்பகுதியிலும் அழகிய மெட்டல் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டது போல இந்த காரின் பின்புற தோற்றம், ஸிபோர்டி கார்களுக்கு இணையாக உள்ளது. மற்ற கார்களுடன் ஒப்பிடும் போது, இதன் சக்கரங்கள் சிறியதாக இருப்பது மட்டும் ஒரு குறைபாடாக நமக்குத் தெரிகிறது. கம்ப்யூட்டர் உதவியுடன் தயாரான ரெண்டரிங்காக இருப்பதால்,  இது போல தெரிய வாய்ப்புள்ளது. எனினும், இந்த கார் சந்தையில் வெளிவரும் போது, இந்த குழப்பம் தானாகவே தீர்ந்து விடும்.  

உட்புற அலங்காரங்களைப் பற்றிய விவரங்களை, மஹிந்த்ரா தற்போது எதையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், நிச்சயமாக இது மிகவும் வசீகரமாகவும், பல அற்புதமான விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று நாம் யூகிக்கிறோம். சில மாதங்களுக்கு முன் உளவாளிகளால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில், முன்புறத்தில் 3 சீட்களும், கியர் லெவலுக்கு உயர்த்தப்பட்ட டாஷ்போர்டும் நாம் கண்ணில் தென்பட்டது. காருக்கான உட்புற வடிவமைப்பு, இத்தாலியில் புகழ்பெற்ற டிசைன் நிறுவனமான பின்னின்பெரினா வடிவமைத்துள்ளது என்று தெரிகிறது.

புத்தம் புதிய மஹிந்த்ரா KUV 100 விளம்பர படத்தைப் பாருங்கள்

KUV 100 காருக்கான இஞ்ஜின்களைப் பற்றிய விவரங்கள்:

  • mFalcon D75 - 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ டீசல் இஞ்ஜின், 77 bhp சக்தியை 3,750 rpm அளவில் உற்பத்தி செய்கிறது. 190 Nm என்ற அதிகப்படியான டார்க்கை 1,750 - 2,250 rpm அளவில் உற்பத்தி செய்கிறது.

  • mFalcon G80 - 1.2 லிட்டர் 3 சிலிண்டர் நெச்சுரலி ஆஸ்பிரடெட் பெட்ரோல் இஞ்ஜின், 82 bhp சக்தியை 5,500 rpm என்ற அளவிலும், 114 Nm என்ற அதிகபட்ச டார்க் அளவை 3,500 rpm –யிலும் உற்பத்தி செய்கிறது.

  • ட்ரான்ஸ்மிஷன் - KUV 100 அறிமுகப்படுத்தப்படும் வேளையில், 5 ஸ்பீட் MT மட்டுமே இணைக்கப்பட்டு வரும். ஆனால், வெளியான பின், மஹிந்த்ரா நிறுவனம் ஆட்டோமேடிக் அமைப்பை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.

KUV 100 இரண்டு வகையான இஞ்ஜின்களான டீசல் மற்றும் பெட்ரோல் வகைகளில் கிடைக்கும் என்பது ஒரு குறிப்பிடத்தக்க செய்தி ஆகும். டீசல் கார்கள் 20 kmpl அளவிற்கும் அதிகமான மைலேஜும், பெட்ரோல் வகை இஞ்ஜின்கள் சுமார் 18 kmpl என்ற அளவில் சிறந்த மைலேஜ் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your Comment on Mahindra kuv 100 nxt

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience