மஹிந்த்ரா நிறுவனம் ‘குட்னேஸ் ட்ரைவ்’ பயணத்தை ஆரம்பித்து வைத்துள்ளது – நாடு முழுவதும் பயணிக்கும் e2o கார்கள்

published on நவ 19, 2015 05:32 pm by nabeel for மஹிந்திரா இ2ஓ

  • 14 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா நிறுவனம் புதுமையான ‘குட்னேஸ் ட்ரைவ்’ என்கிற மின் வாகன பயணம் ஒன்றை ஆரம்பித்து வைத்துள்ளது. மஹிந்த்ராவின் மூன்று e2o வாகனங்கள் இந்தியா முழுவதும், காஷ்மீரில் இருந்து கன்யாகுமாரி வரை, பலவிதமான நிலங்களைக் கடந்து பயணம் செய்கின்றன. சமீபத்தில், தொடங்கி வைக்கப்பட்ட இந்த பயணம் இனிதே தொடருகிறது. இப்போது வரை மஹிந்த்ராவின் e2o கார்கள் 135 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, சுமார் 33.75 லிட்டர் எரிபொருளை சேமித்துள்ளன. இந்த அற்புதமான பயணத்தை நேரடியாக பார்க்கும் அனுபவத்தை பெறவேண்டும் என்றால், இந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதளமான theelectricexpedition.com –மில் கண்டு மகிழலாம். இந்தியாவின் 52 நகரங்களைக் கடந்து, கிட்டத்தட்ட 5,000 கிலோ மீட்டர் வரை நீளும் இந்த பயணம் ஒரு மாதம் வரை நீடிக்கும். நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களின் நன்மைகளை மக்களுக்கு எடுத்துரைத்து, மக்கள் இந்த வாகனங்களை சகஜமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நீண்ட பயணத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

மஹிந்த்ரா ரேவாவின் தலைமை நிர்வாக அதிகாரியான அரவிந்த் மேத்யூ இந்த பயணத்தைப் பற்றி பேசுகையில், “மஹிந்த்ரா குழுமத்தின் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட பயணத்திற்கு ஒரு சுத்தமான, ஸ்மார்ட்டான மற்றும் சிக்கனமான தீர்வை அளிக்கக் கூடிய முயற்சிதான் மஹிந்த்ரா e2o ஆகும். இடைவிடாது தொடர்ந்து கொண்டிருக்கும் நகரமயமாக்கலை இதன் மூலம் சற்றே மாற்றி வரையறுக்க முடியும். மஹிந்த்ரா e2o மூலம், மின்சார வாகனங்களில் பயணிக்கும் நன்மையை மக்களுக்கு எடுத்துரைத்து, விழிப்புணர்வு உருவாக்குவதற்காக ‘குட்னேஸ் ட்ரைவ்’ பயணத்தைத் தொடங்கி வைப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மின்சார வாகனங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பயண தீர்வுகளை இந்திய மக்களுக்கு வழங்குவதில் எங்கள் நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கிறது. எனவே, அனைவரையும் மின்சார வாகனங்களை உபயோகிக்க வைப்பதன் மூலம், ஒரு சுத்தமான எதிர்காலத்தை உருவாக்க முயற்சி செய்வது எங்களது கடமையாகும். எங்களது e2o கார்கள் ஒரு நீண்ட நெடிய தூர பயணத்தை வெற்றிகரமாக கடந்துவிட்டால், வாடிக்கையாளர்கள் மனதில் உள்ள மின்சார வாகனங்களை உபயோகப்படுத்துவதற்கான தடைகளை எளிதாக உடைத்தெறிய முடியும். மேலும், இந்த கார்கள் கடுமையான பாதைகளைச் சமாளிக்க வல்லது என்பதையும் நிரூபிக்க முடியும்,” என்று கூறினார்.

மஹிந்த்ரா e2o ஆன்-ரோட் விலை

ஃபாஸ்டர் அடாப்ஷன் அண்ட் மேனுபாக்சர் ஆஃப் எலக்ட்ரிக் வேகிக்கில்ஸ்’  (FAME) என்கிற நமது இந்திய அரசாங்கத்தின் திட்டம், ரூ. 1,800 முதல் ரூ. 66 லட்சங்கள் விலைக்குள் உட்பட்ட ஹைபிரிட் மற்றும் மின்சார வாகனங்களுக்கு (அனைத்து விதமான பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள்) பல சலுகைகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் 5 வருடங்களுக்கு ரூ. 2,999 கட்டவேண்டும். இது ஒரு மாதாந்திர e2o கேர் ப்ரொடெக்க்ஷன் திட்டமாகும். 50,000 கிலோ மீட்டர் வரை இந்த திட்டம் செல்லுபடியாகும்.

மேலும் படிக்க

tamil.cardekho.com/car-news/Mahindra S101 Spied testing inChennai-16696
tamil.cardekho.com/car-news/Mahindra to AcquirePininfarina in Coming Weeks-16970

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மஹிந்திரா இ2ஓ

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience