• English
    • Login / Register

    அறிமுகமானது Mahindra Bolero Neo Plus, விலை ரூ.11.39 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

    rohit ஆல் ஏப்ரல் 17, 2024 09:34 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    25 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    இந்த 9-சீட்டர் பதிப்பில் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் TUV300 பிளஸ் காரில் உள்ள அதே 2.2-லிட்டர் டீசல் பவர்டிரெய்ன் உடன் வருகிறது.

    Mahindra Bolero Neo Plus launched

    • பொலிரோ நியோ ப்ளஸ் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃபேஸ்லிஃப்டட் TUV300 பிளஸ் ஆகும்.

    • ரூ.11.39 லட்சம் மற்றும் ரூ.12.49 லட்சத்தில்(எக்ஸ்-ஷோரூம்)விலையில் இரண்டு வேரியன்ட்களில் (P4 மற்றும் P10) இது கிடைக்கிறது.

    • புதிய கிரில், மாற்றியமைக்கப்பட்ட பம்ப்பர்கள் மற்றும் மஹிந்திராவின் புதிய லோகோ ஆகியவை புதிதாக உள்ளன.

    • கேபினில் இப்போது பொலிரோ நியோ போன்ற இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஸ்டீயரிங் வீல் உடன் கிடைக்கிறது.

    • 9-இன்ச் டச் ஸ்கிரீன், மேனுவல் ஏசி மற்றும் டூயல் முன் ஏர்பேக்குகள் ஆகிய வசதிகள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளன.

    • 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் ஒரு 2.2-லிட்டர் டீசல் யூனிட்டை பெறுகிறது.

    2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆம்புலன்ஸாக அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மஹிந்திரா பொலிரோ நியோ பிளஸ் இப்போது பயணிகள் வாகனமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் TUV300 மற்றும் TUV300 பிளஸ் ஆகிய மாடல்களை தங்கள் ஃபேஸ்லிஃப்ட்டின் ஒரு பகுதியாக பெயரிட்டுள்ளது, மேலும் அவை இப்போது பொலிரோ நியோ மற்றும் பொலேரோ நியோ பிளஸ் என அழைக்கப்படுகின்றன.

    வேரியன்ட் வாரியான விலை

    வேரியன்ட்

    விலை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா)

    P4

    ரூ.11.39 லட்சம்

    P10

    ரூ.12.49 லட்சம்

    Mahindra Bolero Neo Plus 9-seater layout

    வழக்கமான பொலிரோ நியோ போலல்லாமல் பொலேரோ நியோ மூன்று டிரிம்களில் கிடைக்கும். பொலிரோ நியோ பிளஸ் இரண்டு வேரியன்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த நீட்டிக்கப்பட்ட பதிப்பு 9 இருக்கை அமைப்பில் வருகிறது, பொலிரோ நியோ 7 இருக்கை அமைப்பில் விற்பனைக்கு வந்துள்ளது

    வடிவமைப்பு விவரங்கள்

    Mahindra Bolero Neo Plus grille
    Mahindra Bolero Neo Plus side

    பொலிரோ நியோ பிளஸ் ஒட்டுமொத்த வடிவமைப்பின் அடிப்படையில் பொலிரோ நியோவை போலவே தோற்றமளிக்கின்றது. குரோம் ஸ்லேட்டுகள் மற்றும் மஹிந்திராவின் புதிய ‘ட்வின் பீக்ஸ்’ லோகோவுடன் கூடிய புதிய கிரில்லை பெறுகிறது. ஃபாக் லைட்களை கொண்ட ஏர் டேம் கண்ணி போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கும் ட்வீக் செய்யப்பட்ட பம்பரையும் நீங்கள் கவனிக்கலாம். பக்கவாட்டில் புதிய 5-ஸ்போக் அலாய் வீல்களுடன், பொலிரோ நியோவின் கூடுதல் நீளமான பொலிரோ நியோவை பார்க்க முடிகின்றது.

    பொலிரோ நியோவுடன் ஒப்பிடும்போது உருண்டையான தோற்றத்தையும், பின்புற பம்பர் சற்று வித்தியாசமான வடிவமைப்பில் பின்புறத்தில் உள்ள வித்தியாசத்தைக் காணலாம். இது பொலிரோ நியோவைப் போலவே டெயில்கேட்டில் பொருத்தப்பட்ட ஸ்பேர் வீலை பெறுகிறது.

    மேலும் படிக்க: இந்தியாவில் FY23-24 காலகட்டத்தில் Tata Nexon மற்றும் Punch ஆகியவை அதிகம் விற்பனையான எஸ்யூவிகளாக இருப்பிடத்தை தக்க வைத்துக்கொண்டன

    கேபினுக்கு சில அப்டேட்கள்

    Mahindra Bolero Neo Plus cabin

    மஹிந்திரா எஸ்யூவியின் உட்புறத்தில் சில மாற்றங்களை கொடுத்துள்ளது. இது இப்போது மஹிந்திரா தாரின் ஸ்டீயரிங் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் சாஃப்ட் ட்வின்-பாட் டிஸ்ப்ளேகளுடன் வருகிறது. மஹிந்திரா இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மற்றும் க்ளைமேட் கன்ட்ரோல் டயல்களையும் அப்டேட் செய்துள்ளது, மேலும் இப்போது புதிய ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரியுடன் எஸ்யூவியை வழங்குகிறது.

    பொலிரோ நியோ+ காரில் புளூடூத், ஆக்ஸ் மற்றும் USB கனெக்டிவிட்டி உடன் 9-இன்ச் டச்ஸ்கிரீன் யூனிட்டைக் கொண்டுள்ளது, ஆனால் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயை கொடுக்கப்படவில்லை. 6-ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம், நான்கு பவர் விண்டோஸ், மேனுவல் ஏசி மற்றும் உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய வகையிலான டிரைவர் சீட் ஆகியவையும் உள்ளன.

    Mahindra Bolero Neo Plus dual front airbags

    பாதுகாப்புக்காக டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், EBD உடன் ABS, முன்பக்க ஃபாக் லேம்ப்ஸ் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

    டீசல்-ஒன்லி மட்டுமே

    மஹிந்திரா பொலிரோ நியோ+ ஆனது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட ஒரே 2.2-லிட்டர் டீசல் இன்ஜினை (120 PS/280 Nm) பெறுகிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை. இது ஒரு ரியர் வீல் டிரைவ் எஸ்யூவி ஆகும்.

    இது எதனுடன் போட்டியிடுகிறது?

    இதற்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை என்றாலும்  மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ N ஆகியவற்றுக்கு இது ஒரு மாற்றாக கருதப்படலாம்

    மேலும் படிக்க: மஹிந்திரா பொலிரோ நியோ பிளஸ் டீசல்

    was this article helpful ?

    Write your Comment on Mahindra போலிரோ Neo Plus

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience