சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Mahindra BE6 மற்றும் XEV 9e பகுதி 2 -க்கான டெஸ்ட் டிரைவ்கள் இப்போது நடந்து வருகின்றன

மஹிந்திரா பிஇ 6 க்காக ஜனவரி 24, 2025 06:27 pm அன்று kartik ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

டெஸ்ட் டிரைவ்கள் இரண்டாம் கட்டம் தொடங்கியிருப்பதால் இந்தூர், கொல்கத்தா மற்றும் லக்னோவில் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது மஹிந்திரா EV -கள் இரண்டையும் ஓட்டி பார்க்கலாம்.

  • டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் புனே போன்ற நகரங்களில் 1 ஆம் கட்ட சோதனை ஓட்டம் ஏற்கனவே நடந்து வருகிறது.

  • பகுதி 2 -யில் அகமதாபாத், போபால் மற்றும் இந்தூர் போன்ற நகரங்களை உள்ளன.

  • 3 ஆம் கட்டத்தில் டெஸ்ட் டிரைவ்கள் பிப்ரவரி 7, 2025 முதல் இந்தியா முழுவதும் கிடைக்கும்.

  • இரண்டு EV -களும் 3 வேரியன்ட்களில் வருகின்றன: பேக் 1, பேக் 2 மற்றும் பேக் 3.

  • மல்டி-சோன் ஆட்டோ ஏசி, 16-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோ பார்க்கிங் ஆகியவை EV -களில் உள்ள அம்சங்களாகும். பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை அடங்கும்.

  • EV -கள் இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வருகின்றன: ஒரு ஸ்டாண்டர்டான 59 kWh மற்றும் ஒரு பெரிய 79 kWh ஒரு மோட்டார் செட்டப் மற்றும் XEV 9e -க்கு 656 கி.மீ வரை ரேஞ்ச் மற்றும் BE 6 -க்கு 683 கி.மீ வரை கொடுக்கக்கூடியது.

  • BE 6 விலை ரேஞ்ச் ரூ.18.9 லட்சம் முதல் ரூ.26.9 லட்சம் வரையிலும், ஃபிளாக்ஷிப் XEV 9e விலை ரூ.21.9 லட்சம் முதல் ரூ.30.5 லட்சம் வரையிலும் உள்ளது.

மஹிந்திரா -வின் INGLO தளத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் இரண்டு EV -களான மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e ஆகியவை ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் கட்டம் 1 -க்கான சோதனை ஓட்டங்கள் ஏற்கனவே டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் நடந்து வருகின்றன. போபால், கொச்சின், கோயம்புத்தூர், கோவா, ஹவுரா, இந்தூர், ஜெய்ப்பூர் மற்றும் ஜலந்தர் போன்ற நகரங்களில் இன்று முதல் 2 கட்டம் டெஸ்ட் டிரைவ்களை மஹிந்திரா திறந்துள்ளது. கட்டம் 1 மற்றும் 2 டெஸ்ட் டிரைவ்களில் பட்டியலிடப்படாத நகரங்களைச் சேர்ந்தவர்கள், இந்தியா முழுவதும் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கும் பிப்ரவரி 7 ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும். நீங்கள் அனைத்து எலக்ட்ரிக் எஸ்யூவி -களில் ஆர்வமாக இருந்தால், மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e மூலம் நீங்கள் என்ன பெறுவீர்கள் என்பது பற்றிய விரைவான பார்வை இங்கே உள்ளது.

மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e வசதிகள் மற்றும் பாதுகாப்பு

மஹிந்திரா, BE 6 -க்கான 12.3-இன்ச் டூயல் ஸ்கிரீன் செட்டப் மற்றும் XEV 9e -க்கான 3-ஸ்கிரீன் செட்டப் மற்றும் 1400 W 16-ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளுடன் EV -களை கொடுத்துள்ளது. வசதியை மேலும் அதிகரிக்க EV -கள் மல்டி-சோன் ஆட்டோ ஏசி, பவர்டு மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்-அப் டிஸ்ப்ளே ஆகியவற்றுடன் வருகின்றன.

பயணிகளின் பாதுகாப்புகாக BE 6 மற்றும் XEV 9e ஆகியவை 6 ஏர்பேக்ஸ் (ஸ்டாண்டர்டாக), ஒரு பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றைப் கொண்டுள்ளன.

மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e பவர்டிரெய்ன்

இரண்டு EV களும் 59 kWh மற்றும் 79 kWh பேட்டரி பேக் மற்றும் பின் சக்கரங்களை இயக்கும் ஒரே ஒரு மோட்டார் உடன் வருகின்றன. அதன் தொழில்நுட்ப விவரங்கள் இங்கே:

மஹிந்திரா BE 6

பேட்டரி பேக்

59 kWh

79 kWh

கிளைம்டு ரேஞ்ச் (MIDC பகுதி 1+2)

535 கி.மீ

683 கி.மீ

பவர்

231 PS

286 PS

டார்க்

380 Nm

380 Nm

டிரைவ் வேரியன்ட்

ஒற்றை மோட்டார், ரியர் வீல் டிரைவ்

ஒற்றை மோட்டார், ரியர் வீல் டிரைவ்

மேலும் பார்க்க: ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்ட சிறந்த 10 செடான் கார்கள்

மஹிந்திரா XEV 9e

பேட்டரி பேக்

59 kWh

79 kWh

கிளைம்டு ரேஞ்ச் (MIDC பகுதி 1+2)

542 கி.மீ

656 கி.மீ

பவர்

231 PS

286 PS

டார்க்

380 Nm

380 Nm

டிரைவ் வேரியன்ட்

ஒற்றை மோட்டார், ரியர் வீல் டிரைவ்

ஒற்றை மோட்டார், ரியர் வீல் டிரைவ்

BE 6 மற்றும் XEV 9e ஆகிய இரண்டின் டாப்-ஸ்பெக் பேக் த்ரீ வேரியண்ட் 180 kW DC ஃபாஸ்ட் சார்ஜருடன் 20 நிமிடங்களில் 20-80 சதவிகிதம் சார்ஜ் இருந்து பேட்டரியை எடுக்கும் திறன் கொண்டது.

விலை மற்றும் போட்டியாளர்கள்

மஹிந்திரா பிஇ 6 விலை ரூ.18.9 லட்சம் முதல் ரூ.26.9 லட்சம் வரை. அனைத்து எலக்ட்ரிக் SUV போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும் மாருதி சுசுகி மற்றும் விட்டாரா, MG ZS EV, ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக் மற்றும் டாடா கர்வ்வ் EV.

XEV 9e -ன் விலை ரூ. 21.9 லட்சம் முதல் ரூ. 30.5 லட்சம் வரை இருக்கும். டாடா சஃபாரி EV மற்றும் டாடா ஹாரியர் EV ஆகியவற்றுக்கு இது மாற்றாக இருக்கும்.

மஹிந்திரா தற்போது பேக் 1 மற்றும் பேக் 3 வேரியன்ட்களுக்கான விலையை மட்டுமே வெளியிட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

(அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி -க்கானவை)

மேலும் பார்க்க: ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் வேரியன்ட் வாரியான வசதிகள் விளக்கப்பட்டுள்ளன

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Mahindra பிஇ 6

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை