• English
  • Login / Register

இன்டிகோவுடன் சட்டப் போராட்டம், ​​BE 6e காரின் பெயரை மாற்றிய மஹிந்திரா

published on டிசம்பர் 09, 2024 09:45 pm by rohit for மஹிந்திரா be 6

  • 52 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மஹிந்திரா நிறுவனம் நீதிமன்றத்தில் பிராண்ட் உரிமைகளுக்காக போராடி வருகிறது. மேலும் இப்போது BE 6e என்ற பெயரை BE 6 என மாற்ற முடிவு செய்துள்ளது. BE 6e பெயரை பெற இண்டிகோ -வுடன் தொடர்ந்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளது.

Mahindra BE 6e name changed to BE 6

'BE 6e' எலக்ட்ரிக் எஸ்யூவி -க்கு '6E' என்ற பெயரை பயன்படுத்தியதால் இண்டிகோ நிறுவனம் மஹிந்திரா நிறுவனத்துக்கு எதிராக எப்படி வழக்குப் பதிவு செய்தது என்ற செய்தியை சமீபத்தில் உங்களிடம் கொண்டு வந்தோம். இது தொடர்பாக மஹிந்திரா ஏற்கனவே தனது எண்ணங்களைப் பகிர்ந்துள்ள நிலையில் மஹிந்திரா அதன் EV -க்கு BE 6 என்று பெயரிட முடிவு செய்துள்ளது.

மேலும் மஹிந்திரா BE 6e என்ற பெயரை தக்கவைக்க விமான நிறுவனத்திற்கு எதிராக போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

மஹிந்திரா புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது

மஹிந்திரா அதன் எலக்ட்ரிக் மூல எஸ்யூவி போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியாக "BE 6e" -க்கு 12 கிளாஸ் (வாகனங்கள்) என்பதன் கீழ் வர்த்தக முத்திரை பதிவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. "BE" என்ற பெயர் ஏற்கனவே 12 கிளாஸ் என மஹிந்திரா மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது BE 6e -ன் அடிப்படையிலான "பார்ன் எலக்ட்ரிக்" தளத்தை குறிக்கிறது. இண்டிகோ ஏர்லைன்ஸின் தாய் நிறுவனமான இன்டெர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் சமீபத்தில் BE என்ற பெயருக்குப் பிறகு 6e என்ற பெயரைப் பயன்படுத்தி மஹிந்திராவிடம் அதன் கவலையை தெரிவித்தது. மஹிந்திரா இண்டிகோவின் விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் குறியீடான “ 6E ” அல்ல இது “BE 6e” என தெரிவித்துள்ளது.

“ இது இண்டிகோவின் "6E" என்ற பெயரில் இருந்து வேறுபட்டது என்று நாங்கள் நம்புகிறோம். இது ஒரு விமான நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, இது குழப்பத்தின் அபாயத்தை நீக்குகிறது. தனித்துவமான ஸ்டைலிங் அதன் தனித்துவத்தை மேலும் வலியுறுத்துகிறது. எங்கள் பதிவு விண்ணப்பம் முற்றிலும் வேறுபட்ட தொழில் துறை மற்றும் தயாரிப்புக்கானது எனவே இந்த விஷயத்தில் எந்தவிதமான மோதலும் இதில் இருக்க வேண்டாம் என நினைக்கிறோம். இரண்டு பெரிய இந்திய பன்னாட்டு நிறுவனங்கள், உண்மையில் நாம் ஒருவரையொருவர் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் வெற்றிபெறச் செய்யும் போது, ​​கவனத்தை சிதறடிக்கும் மற்றும் தேவையற்ற மோதலில் ஈடுபடுவதையும் நாங்கள் பார்க்கிறோம்.." என இதுகுறித்து மஹிந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Mahindra BE 6

மேலும் "இரண்டு பெரிய, இந்திய பன்னாட்டு நிறுவனங்கள், உண்மையில் நாம் பரஸ்பர வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றில் வெற்றிபெறும் போது, ​​கவனத்தை சிதறடிக்கும் மற்றும் தேவையற்ற மோதலில் ஈடுபடுவதையும் நாங்கள் பார்க்கிறோம். எனவே எங்கள் தயாரிப்பை "BE 6e" என்று பெயரிட முடிவெடுக்கிறோம். எவ்வாறாயினும் இண்டிகோ -வின் கூற்று ஆதாரமற்றது என்றும் சவால் விட்டால், எங்கள் குறி தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் இருந்தாலும், ஆல்பா-எண் 2-எழுத்து மதிப்பை ஏகபோகமாக்குவதற்கான ஆரோக்கியமற்ற முன்னுதாரணத்தை அமைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது தொழில்கள் மற்றும் துறைகளில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பெரும் தடையாக இருக்கும். எனவே இதை நீதிமன்றத்தில் தொடர்ந்து கடுமையாக எதிர்த்துப் போராடுவோம், மேலும் BE 6e என்ற பிராண்ட் பெயருக்கான எங்கள் உரிமையை கேட்போம்."

மஹிந்திரா இப்போது BE 6e -ஐ BE 6 எனப் பெயர் மாற்றியிருந்தாலும் அது BE 6e வர்த்தக முத்திரையைப் பெறுவதை உறுதிசெய்ய இண்டிகோவுடன் போட்டியிடப் போவதாகக் கூறியுள்ளது. இதைப் பற்றிய கூடுதல் வந்தவுடன் இதை பற்றி அப்டேட் செய்வோம்.

இதையும் பார்க்கவும்: 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் பங்கேற்கவுள்ள கார் நிறுவனங்கள் எவை தெரியுமா ?

மஹிந்திரா BE 6: ஒரு கண்ணோட்டம்

BE 6 என்பது அதன் புதிய EV-குறிப்பிட்ட 'BE' துணை பிராண்டின் கீழ் உருவாக்கப்பட்ட மஹிந்திராவின் முதல் ஆல்-எலக்ட்ரிக் வாகனமாகும். இது நமது சந்தையில் உள்ள பெரும்பாலான எலக்ட்ரிக் கார்களில் இருந்து தனித்து நிற்கும் வகையில் சிறப்பான வசதிகளைக் கொண்ட அதிநவீனமான தோற்றம் கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும்.

Mahindra BE 6 dual digital displays

இது டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள், டூயல் ஜோன் ஏசி மற்றும் டூயல் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்கள் போன்ற பல பிரீமியம் வசதிகளைக் கொண்டுள்ளது. இது ஆக்மென்டட் ரியாலிட்டி அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 7 ஏர்பேக்குகள் மற்றும் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) பெறுகிறது.

 மஹிந்திரா BE 6 காரை ஒரு 59 kWh மற்றும் மற்றொன்று 79 kWh யூனிட் என இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வழங்குகிறது̀. இது இரண்டு வெவ்வேறு கட்டமைப்புகளில் சிங்கிள்-மோட்டார், ரியர்-வீல் டிரைவ் (RWD) செட்டப்பை பெறுகிறது: சிறிய பேட்டரியுடன் 231 PS மோட்டார் மற்றும் பெரிய யூனிட் 286 PS. 59 kWh பேட்டரி பேக் MIDC (பார்ட் I+II) 535 கி.மீ ரேஞ்ச் உடன் வரும், மற்றொன்றுக்கு ரேஞ்ச் 682 கி.மீ ஆகும்.

தொடர்புடையது: Mahindra காரில் முதன் முதலில் அறிமுகமாகும் 10 சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

விலை மற்றும் போட்டியாளர்கள்

Mahindra BE 6

மஹிந்திரா BE 6 காரின் விலை ரூ. 18.90 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) ஆக உள்ளது. இது டாடா கர்வ்வ் EV மற்றும் MG ZS EV மட்டுமின்றி இது வரவிருக்கும் போட்டிகளுடன் போட்டியிடும் ஹூண்டாய் கிரெட்டா EV மற்றும் மாருதி eVX ஆகிய கார்களுக்கும் போட்டியாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: மஹிந்திரா BE 6e ஆட்டோமெட்டிக்

was this article helpful ?

Write your Comment on Mahindra be 6

explore மேலும் on மஹிந்திரா be 6

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
    ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
    Rs.17 - 22.15 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience