Mahindra BE 6 பேக் 3 பெரிய பேட்டரி பேக் வேரியன்ட் விலை ரூ.26.9 லட்சம் ஆக நிர்ணயம்
published on ஜனவரி 07, 2025 10:32 pm by rohit for மஹிந்திரா be 6
- 79 Views
- ஒரு கருத்தை எழுதுக
எலக்ட்ரிக் எஸ்யூவி 3 வேரியன்ட்களில் கிடைக்கும்: பேக் 1, பேக் 2 மற்றும் பேக் 3
-
EV -களுக்காக உருவாக்கப்பட்ட மஹிந்திராவின் புதிய 'BE' துணை பிராண்டின் கீழ் BE 6 முதல் மாடலாக விற்பனைக்கு வரவுள்ளது.
-
சி-வடிவ LED DRLகள், ஃப்ளஷ் வேரியன்ட் டோர் ஹேண்டில்கள் மற்றும் 20-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை வெளிப்புறத்தில் உள்ளன.
-
போர் விமானம் போன்ற கேபினில் கிரே கலர் அப்ஹோல்ஸ்டரி, டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் மற்றும் 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் உள்ளது.
-
போர்டில் உள்ள உபகரணங்களில் மல்டி-சோன் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்கள், லைட்டிங் பேட்டர்ன்களுடன் கூடிய பனோரமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.
-
BE 6 ஆனது MIDC (P1+P2) 682 கி.மீ வரையிலான இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
-
இதன் விலை ரூ.18.9 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா).
2024 நவம்பர் மாதம் மஹிந்திரா BE 6 காரின் முதல் தோற்றம் வெளியிடப்பட்ட போது மஹிந்திரா இதன் ஆரம்ப விலையை மட்டுமே வெளியிட்டது. இப்போது மஹிந்திரா எலக்ட்ரிக் எஸ்யூவியின் 79 kWh பேட்டரி பேக்குடன் டாப்-ஸ்பெக் பேக் 3 வேரியன்ட்டுக்கான விலை விவரங்களை வெளியிட்டுள்ளது. BE 6 கார் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது: பேக் 1, பேக் 2 மற்றும் பேக் 3. BE 6 இன் ஆரம்ப விலை ரூ. 18.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வேரியன்ட் வாரியான தொடக்க விலை
வேரியன்ட் |
விலை |
பேக் 1 (59 kWh பேட்டரி பேக் உடன்) |
ரூ.18.9 லட்சம் |
பேக் 2 |
டி.பி.ஏ. |
பேக் 3 (79 kWh பேட்டரி பேக் உடன்) |
ரூ. 26.9 லட்சம் (வீட்டு சார்ஜருக்கான விலையை தவிர்த்து) |
மஹிந்திரா BE 6 வடிவமைப்பு
BE 6 காரில் ஆல் LED லைட்களோடு, கிடைமட்டமாக ஹெட்லைட்கள் மற்றும் C-வடிவ LED DRLகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது 19-இன்ச் ஏரோடைனமிகலாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் உள்ளன, தேவைப்பட்டால் 20-இன்ச் யூனிட்களைக் ஆக்ஸசரீஸ்களாக தேர்வு செய்யலாம். ஃப்ளஷ்-வேரியன்ட் டோர் ஹேண்டில்கள், ஏரோ ஸ்கூப்களுடன் கூடிய ஹை-லெவல் பூட்லிட் மற்றும் பெரிய சி-வடிவ LED டெயில் லைட்கள் ஆகியவையும் இந்த காரில் உள்ளன.
மஹிந்திரா BE 6 கேபின் மற்றும் வசதிகள்
ஒளிரும் ‘BE’ லோகோவுடன் 2-ஸ்போக் ஸ்டீயரிங் பெறுகிறது. மஹிந்திரா ஒரு கிரே கலர் சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் போர் விமானத்தின் த்ரஸ்ட் லீவர் போன்ற ஸ்போர்ட்டியர் தோற்றமுடைய டிரைவ் மோட் ஷிஃப்டர் ஆகியவை உள்ளன.
டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் (டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்டுக்கு ஒரு 10.25-இன்ச் யூனிட்), மல்டி-ஜோன் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்கள், ஆம்பியன்ட் லைட்ஸ் உடன் பனோரமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவையும் உள்ளன.
பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பார்க் அசிஸ்ட் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங், அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -களையும் (ADAS) இது கொண்டுள்ளது.
மேலும் படிக்க: பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் எதிர்பார்க்கப்படும் டாப் கார் வெளியீடுகள் மற்றும் அறிமுகம்
மஹிந்திரா BE 6 பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்
விவரங்கள் |
BE 6 |
பேட்டரி பேக் |
59 kWh/ 79 kWh |
எலக்ட்ரிக் மோட்டார்களின் எண்ணிக்கை |
1 |
கிளைம்டு ரேஞ்ச் (MIDC P1+P2) |
535 கிமீ/ 682 கிமீ |
பவர் |
231 PS/ 286 PS |
டார்க் |
380 Nm |
டிரைவ்டிரெய்ன் |
RWD* |
*RWD - ரியர் வீல் டிரைவ்
BE 6 ஆனது ரியர்-வீல்-டிரைவ் (RWD) செட்டப்பை மட்டுமே பெற்றாலும், INGLO கட்டமைப்பு தளம் (அதன் அடிப்படையிலானது) ஆல்-வீல்-டிரைவ் (AWD) ஆப்ஷனையும் சப்போர்ட் செய்கிறது. 3 டிரைவிங் மோடுகள் உள்ளன: ரேஞ்ச், எவ்ரிடே மற்றும் ரேஸ்.
மஹிந்திரா EV ஆனது 175 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இது 20 நிமிடங்களில் 20 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய உதவும்.
மஹிந்திரா BE 6 போட்டியாளர்கள்
மஹிந்திரா BE 6 ஆனது டாடா கர்வ்வ் EV மற்றும் MG ZS EV ஆகிய கார்களோடு வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் மற்றும் மாருதி இ விட்டாரா ஆகியற்றுக்கும் போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.