• English
  • Login / Register

Mahindra BE 6, XEV 9e டெஸ்ட் டிரைவ், டெலிவரி விவரங்கள் வெளியீடு

published on ஜனவரி 08, 2025 08:03 pm by dipan for மஹிந்திரா be 6

  • 36 Views
  • ஒரு கருத்தை எழுதுக

BE 6 -ன் விலை ரூ 18.90 லட்சம் முதல் ரூ 26.90 லட்சம் வரை உள்ளது. XEV 9e காரின் விலை ரூ 21.90 லட்சம் முதல் ரூ 30.50 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • இரண்டு மஹிந்திரா எஸ்யூவி -களும் பேக் 1, பேக் 2 மற்றும் பேக் 3 என 3 வேரியன்ட்களில் கிடைக்கும்.

  • 59 kWh மற்றும் 79 kWh பேட்டரி பேக் ஆப்ஷன்கள் மற்றும் 500 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்ச் கிடைக்கும்.

  • இப்போதைக்கு ஒரே ஒரு-மோட்டார் ரியர்-வீல்-டிரைவ் (RWD) செட்டப் உடன் மட்டுமே கிடைக்கும்.

  • மல்டி ஸ்கிரீன்கள், செல்ஃபி கேமரா மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகிய வசதிகள் காரில் இருக்கும்.

  • பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவை கொடுக்கப்படும்.

மஹிந்திராவின் லேட்டஸ்ட் EV -களாக 2024 நவம்பர் மாதம் மஹிந்திரா பிஇ 6 மற்றும் XEV 9e ஆகிய கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இரண்டு EV -களின் பெரிய 79 kWh பேட்டரி பேக் கொண்ட டாப்-ஸ்பெக் 'பேக் 3’ வேரியன்ட்களின் விலை விவரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு எலக்ட்ரிக் எஸ்யூவி -களின் முன்பதிவு மற்றும் டெலிவரிகளுக்கான சில முக்கியமான தேதிகளையும் மஹிந்திரா வெளியிட்டுள்ளது.

மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e: டெஸ்ட் டிரைவ் விவரங்கள்

Mahindra XEV 9e

மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e EV -களின் டெஸ்ட் டிரைவ்கள் ஜனவரி 14 முதல் ஒவ்வொரு கட்டமாக தொடங்கவுள்ளன. அதன் விவரங்கள் இங்கே:

கட்டம்

தேதி

நகரங்கள்

பகுதி 1

ஜனவரி 14, 2025

டெல்லி NCR, மும்பை MMR, ஹைதராபாத், பெங்களூர், புனே, சென்னை

பகுதி 2

ஜனவரி 24, 2025

பகுதி 1 -ல் உள்ள நகரங்களோடு சேர்த்து அகமதாபாத், போபால், கொச்சின், கோயம்புத்தூர், கோவா, ஹவுரா, இந்தூர், ஜெய்ப்பூர், ஜலந்தர், லக்னோ, கொல்கத்தா, லூதியானா, சூரத், வதோதரா, சண்டிகர், திரிசிட்டி

பகுதி 3

பிப்ரவரி 7, 2025

பான்-இந்தியா

வரும் ஜனவரி 7 முதல் தேவைப்படும் வேரியன்ட்டை முன்பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க: மஹிந்திரா BE 6 டிரைவ் டெஸ்ட்: நாங்கள் தெரிந்து கொண்ட 6 விஷயங்கள்

மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e: முன்பதிவுகள்

Mahindra BE 6

79 kWh பேட்டரி பேக் ஆப்ஷன் உடன் கூடிய BE 6 மற்றும் XEV 9e ஆகிய இரண்டின் டாப்-ஸ்பெக் 'பேக் 3' வேரியன்ட்க்கான முன்பதிவுகள் வரும் பிப்ரவரி மாதம் 14 -ம் தேதி முதல் தொடங்கவுள்ளன. மேலும் பல வேரியன்ட்களுடன் கூடிய அடுத்த கட்ட முன்பதிவு மார்ச் மாத இறுதியில் தொடங்கும்.

மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e: டெலிவரிகள்

Mahindra XEV 9e

EV -களுக்கான டெலிவரிகள் மார்ச் 2025 தொடக்கத்தில் இருந்து தொடங்கும் என்று கார் மஹிந்திரா உறுதி செய்துள்ளது. டாப்-ஸ்பெக் வேரியன்ட்டின் டெலிவரிகள் முதலில் தொடங்கும். மற்ற வேரியன்ட்களின் டெலிவரிகள் சில மாதங்களுக்குப் பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e: வசதிகள் மற்றும் பாதுகாப்பு

Mahindra XEV 9e Dashboard
Mahindra BE 6 interior

மஹிந்திரா XEV 9e மற்றும் BE 6e ஆகியவற்றில் பிரீமியம் வசதிகளான பனோரமிக் சன்ரூஃப், மல்டி-சோன் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வென்டிலேஷன் மற்றும் பவர்டு முன் இருக்கைகள் மற்றும் 1400-வாட் 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இரண்டு EV -களிலும் ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே உள்ளது. XEV 9e ஆனது மூன்று 12.3-இன்ச் ஸ்கிரீன்களை கொண்டுள்ளது (ஒன்று டிரைவருக்கான டிஸ்பிளே, டச் ஸ்கிரீன் மற்றும் பயணிகளின் டிஸ்பிளே -வுக்கு ஒன்று), BE 6e டூயல் ஸ்கிரீன் செட்டப்பை கொண்டுள்ளது.

Mahindra XEV 9e

பாதுகாப்புக்காக இரண்டு மாடல்களிலும் 7 ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் 360 டிகிரி கேமராவுடன் வருகின்றன. அவை லெவல்-2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், பார்க் அசிஸ்ட் மற்றும்  ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் போன்ற வசதிகளுடன் கிடைக்கும்

மேலும் படிக்க: மஹிந்திரா XEV 9e: அதை ஓட்டிய பிறகு நாம் கற்றுக்கொண்ட 5 விஷயங்கள்

மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e: பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

Mahindra BE 6

மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e இரண்டும் ஒரே பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகின்றன. ஆனால் பல்வேறு கிளைம்டு ரேஞ்ச் உடன் வருகின்றன. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:

பேட்டரி பேக்

59 kWh

79 kWh

எலக்ட்ரிக் மோட்டார் (கள்) எண்ணிக்கை

1

1

பவர்

231 PS

286 PS

டார்க்

380 Nm

380 Nm

ரேஞ்ச் (MIDC பகுதி 1 + பகுதி 2)

535 கி.மீ (BE 6) / 542 கி.மீ (XEV 9e)

682 கி.மீ (BE 6) / 656 கி.மீ (XEV 9e)

டிரைவ்டிரெய்ன்

RWD

RWD

மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e: விலை மற்றும் போட்டியாளர்கள்

Mahindra XEV 9e rear

மஹிந்திரா BE 6 -ன் விலை ரூ. 18.90 லட்சம் முதல் ரூ. 26.90 லட்சம் வரையிலும், XEV 9e ஆனது விலை ரூ. 21.90 லட்சத்திலிருந்து ரூ. 30.50 லட்சம் வரையிலும் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது. இவற்றில் ஹோம் சார்ஜரின் விலை அடங்கவில்லை. வீட்டில் பயன்படுத்தும் சார்ஜருக்கு தனித்தனியாக பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

Mahindra BE 6

மஹிந்திரா BE 6 ஆனது டாடா கர்வ்வ் EV, MG ZS EV மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் மற்றும் மாருதி இ விட்டாரா ஆகிய கார்களுடன் போட்டியிடும். மறுபுறம் மஹிந்திரா XEV 9e க்கு இப்போதைக்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை, ஆனால் BYD அட்டோ 3 மற்றும் வரவிருக்கும் டாடா ஹாரியர் EV மற்றும் டாடா சஃபாரி EV ஆகிய கார்களுக்கும் போட்டியாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Mahindra be 6

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
×
We need your சிட்டி to customize your experience