• English
  • Login / Register

தென்னாப்பிரிக்காவில் களமிறங்கிய மேட்-இன்-இந்தியா Mahindra XUV 3XO

published on செப் 20, 2024 07:25 pm by dipan for மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

தென்னாப்பிரிக்கா-ஸ்பெக் XUV 3XO காரில் ஒரு 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (112 PS/200 Nm) கொடுக்கப்பட்டுள்ளது.

  • தென்னாப்பிரிக்க XUV 3XO விலை R2,54,999 முதல் R4,04,999 வரை இருக்கிறது (ரூ. 12.16 லட்சம் மற்றும் ரூ. 19.31 லட்சம் - தென்னாப்பிரிக்க ராண்டில் இருந்து தோராயமாக கன்வெர்ட் செய்யப்பட்டுள்ளது).

  • பிளாக் கலர் கேபின் மற்றும் பிளாக் சீட் என அப்ஹோல்ஸ்டரி, எக்ஸ்ட்டீரியர் மற்றும் இன்ட்டீரியர் டிஸைன் ஒரே மாதிரியாக உள்ளது.

  • இது டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மஹிந்திரா XUV 3XO இப்போது தென்னாப்பிரிக்காவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அப்டேட்ட்டட் எஸ்யூவியை பெறும் முதல் சர்வதேச மார்கெட் தென்ஆப்பிரிக்கா ஆகும். உட்புறம் மற்றும் வெளிப்புற வடிவமைப்புகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், தென்னாப்பிரிக்க மாடல் வேறுபட்ட கேபின் தீம் மற்றும் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷனை கொண்டுள்ளது. XUV 3XO -ன் தென்னாப்பிரிக்க பதிப்பு என்ன வழங்குகிறது என்பதைப் பாருங்கள்:

விலை

தென்னாப்பிரிக்கா-ஸ்பெக் மஹிந்திரா XUV 3XO 

(தென் ஆப்பிரிக்க ராண்டில் இருந்து தோராயமாக கன்வெர்ட் செய்யப்பட்டது)

இந்தியா-ஸ்பெக் மஹிந்திரா XUV 3XO

R2,54,999 முதல் R4,04,999 வரை

(ரூ 12.16 லட்சம் முதல் ரூ 19.31 லட்சம் வரை)

ரூ.7.49 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம்

விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை

தென்னாப்பிரிக்காவின் XUV 33XO -ன் பேஸ் மாடல் இந்திய பதிப்பை விட ரூ.4.5 லட்சம் விலை அதிகம். இருப்பினும் ஃபுல்லி லோடட் வேரியன்ட்களின் விலை வித்தியாசம் ரூ.3.5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.

வெளிப்புறம்

South Africa-spec Mahindra XUV 3XO gets the same design as the Indian-spec model

தென்னாப்பிரிக்க பதிப்பு மஹிந்திரா XUV 33XO ஆனது இந்திய மாடலைப் போலவே உள்ளது. இது ஆட்டோ-எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் C ஷேப்டு LED டேடைம் ரன்னிங் லைட்ஸ் (டிஆர்எல்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கிரில் குரோம் ஸ்லேட்டுகளுடன் பியானோ பிளாக், மற்றும் முன் பம்பரில் கேமரா மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட் உள்ளது.

பக்கவாட்டில், 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் டோர்களில் பாடி கிளாடிங் உள்ளது. எஸ்யூவி ஆனது புதிய 'XUV 3XO' பேட்ஜ், கனெக்டட் LED டெயில் லைட்ஸ் மற்றும் இதேபோன்ற பம்பர் வடிவமைப்புடன் இந்திய மாடலின் ஆக்ரோஷமான தோற்றத்தைக் கொண்டுள்ளது.

இன்ட்டீரியர்

South Africa-spec Mahindra XUV 3XO gets a blacked-out cabin

உள்ளே தென்னாப்பிரிக்க மஹிந்திரா XUV 3XO -ன் வடிவமைப்பு இந்திய பதிப்பைப் போலவே உள்ளது. ஆனால் சில வேறுபாடுகள் உள்ளன. தென்னாப்பிரிக்க மாடலில் ஆல் பிளாக் கேபின் மற்றும் பிளாக் லெதரெட் சீட்கள் உள்ளன. மாறாக இந்திய XUV 3XO வொயிட் லெதரெட் இருக்கைகளுடன் டூயல்-டோன் பிளாக் மற்றும் வொயிட் இன்ட்டீரியர் உள்ளது.

மேலும் படிக்க: ஆகஸ்ட் 2024 மாதம் சப்-4 மீ எஸ்யூவி விற்பனையில் ஆதிக்கம் செலுத்திய டாடா நெக்ஸான் மற்றும் கியா சோனெட்டை ஆகியவற்றை வீழ்த்தி மாருதி பிரெஸ்ஸா முன்னணியில் உள்ளது

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

South Africa-spec Mahindra XUV 3XO gets same dashboard layout as the India-spec model

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய மஹிந்திரா XUV 3XO அதே வசதிகளைப் ஷேர் செய்து கொள்கிறது. இரண்டும் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளே, 7-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பின்புற வென்ட்களுடன் கூடிய டூயல்-ஜோன் ஏசி ஆகியவை உள்ளன. இது பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்களுடன் வருகிறது.

South Africa-spec Mahindra XUV 3XO gets black seat upholstery

பாதுகாப்பிற்காக இரண்டு மாடல்களிலும் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, பிளைண்ட் வியூ மானிட்டர், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஹில் ஹோல்ட் மற்றும் டிசென்ட் கண்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ரோல்ஓவர் மிட்டிகேஷன் ஆகியவை அடங்கும். அனைத்து இருக்கைகளுக்கும் ரிமைண்டர்களுடன் கூடிய 3-பாயின்ட் சீட்பெல்ட்கள், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், அட்டானமஸ் பிரேக்கிங் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவையும் உள்ளன.

மேலும் படிக்க: பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் இந்திய ஹாக்கி நட்சத்திரம் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் ஆகியோர் வீட்டிற்கு புதிய கார்களை வாங்கியுள்ளனர், ஆனால் அவை சொகுசு கார்கள் அல்ல.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

South Africa-spec Mahindra XUV 3XO gets only a 1.2-litre turbo-petrol engine

தென்னாப்பிரிக்க மஹிந்திரா XUV 3XO ஆனது 111 PS மற்றும் 200 Nm உடன் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வருகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும். இந்த இன்ஜின் ஆப்ஷன் இந்திய மாடலிலும் கிடைக்கும்.

இந்திய-ஸ்பெக் XUV 3XO 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் (TGDi) இன்ஜின் (130 PS மற்றும் 250 Nm வரை) மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் (117 PS மற்றும் 300 Nm) ஆகியவற்றிலும் இருக்கலாம். இரண்டு இன்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் வருகின்றன. டர்போ-பெட்ரோல் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக்கை வழங்குகிறது. அதே சமயம் டீசல் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) உடன் இருக்கும்.

இந்தியாவில் இந்த காருக்கான போட்டியாளர்கள்

South African Mahindra XUV 3XO rear

இந்திய-ஸ்பெக் மஹிந்திரா XUV 3XO ஆனது டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மற்றும் கியா சோனெட் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. ஒரே விலை வரம்பில் இருப்பதால் மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சர் போன்ற சப்-4மீ கிராஸ்ஓவர்களுக்கும் போட்டியாக உள்ளது. கூடுதலாக இது வரவிருக்கும் ஸ்கோடா கைலாக் உடனும் போட்டியிடும்

கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: XUV 3XO AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Mahindra எக்ஸ்யூவி 3XO

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • மஹிந்திரா போலிரோ 2024
    மஹிந்திரா போலிரோ 2024
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: நவ,2024
  • போர்டு இண்டோவர்
    போர்டு இண்டோவர்
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • ஸ்கோடா kylaq
    ஸ்கோடா kylaq
    Rs.8.50 - 15 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • க்யா ev9
    க்யா ev9
    Rs.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: அக்ோபர், 2024
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஆகஸ, 2025
×
We need your சிட்டி to customize your experience