சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மேம்படுத்தப்பட்ட எர்டிகா வகைகள் மற்றும் சிறப்பம்ஸ விவரங்கள் வெளியானது

published on அக்டோபர் 01, 2015 09:09 am by manish for மாருதி எர்டிகா 2015-2022

இந்தியாவின் மிகப் பெரிய நான்கு சக்கர உற்பாதியாளரான மாருதி நிறுவனம், தனது மேம்படுத்தப்பட்ட மாருதி சுசூக்கி எர்டிகா 2015 மாடலை, வரும் அக்டோபர் மாதம் 10 -ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த புதிய மாடல், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜைகிண்டோ இந்தோனேஷியா சர்வதேச வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அங்கு காட்சிப்படுத்தப்பட்டது போலவே, இந்திய மாடல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2012 -ஆம் ஆண்டில் முதன்முதலாக எர்டிகா MPV அறிமுகப்படுத்தப்பட்டபோது, இரண்டு மாதங்களுக்குள் எதிர்பார்த்ததை விட அதிகமான கார்கள் பதிவு செய்யப்பட்டன. இன்று, புதுப்பிக்கப்பட்ட எர்டிகா கார் வகைகளின் படங்களும், சிறப்பு அம்ஸங்களும் இணையதளங்களில் வெளியானது. ஆதலால், வரவுள்ள எர்டிகா MPV 2015 மாடலின் சிறப்பம்ஸங்களை வரிசைப்படுத்தி தொகுத்து கீழே வழங்கியுள்ளோம்.

எரிடிகா L : விசை திசைத்திருப்பி (பவர் ஸ்டியரிங்), டில்ட் திசைத்திருப்பி (ஸ்டியரிங்), ஆளியக்க குளிர் சாதன வசதி, ஓட்டுனர் பகுதியில் உள்ள பாதுகாப்பு காற்று பை மற்றும் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் எச்சரிக்கும் ஒலிப்பான் (ரிமைண்டர் பஸ்ஸர்)

  • எரிடிகா L (O ) : L வகை கார்களின் சிறப்புகள் + ப்ரீடென்ஷனர், அழுத்த கட்டுபடுத்தி (போர்ஸ் லிமிடெர்), முன் இருக்கை பயணிக்கான பாதுகாப்பு காற்று பை, ABS மற்றும் EBD
  • எரிடிகா V : L (O ) வகை கார்களின் சிறப்புகள் + புளூடூத் வசதியுடன் கூடிய ஒலி அமைப்பு சாதனம், USB, AUX –in ,CD , ORVM உடன் இணைந்த திருப்ப எச்சரிக்கை விளக்கு, குரோமிய கம்பி வலை, மின் ஆற்றலால் சரிசெய்ய மற்றும் மடக்க கூடிய ORVM கண்ணாடிகள், சாவி இல்லாமல் உட்புறம் செல்லும் வசதி, பின்புற குளிர் சாதன வசதி, பின்னோக்கி சென்று நிறுத்த உதவும் உணரி (சென்சார்), முன் மற்றும் பின்புறத்தில் உள்ள மின் விசை மூலம் இயங்கும் சன்னல்கள், 50:50 பாதிபாதியாக பிரிக்க கூடிய மூன்றாவது வரிசை மற்றும் இரண்டாவது வரிசையில் உள்ள மின்நூட்ட சாக்கெட்.
  • எரிடிகா Z : V வகை கார்களின் சிறப்புகள் + அலாய் சக்கரங்கள், உயரத்தை சரிசெய்ய கூடிய ஓட்டுனர் இருக்கை, ஓட்டு சக்கரத்தில் பொருத்தப்பட்ட ஒலி அமைப்பு கட்டுபாடுகள், பின்புற துடைப்பான் (ரியர் வைப்பர்) மற்றும் பனிவிலக்கி (டி-ஃபாகர்)
  • எரிடிகா Z+ : Z வகை கார்களின் சிறப்புகள் + பின்புறம் சென்று நிறுத்த உதவும் காமிரா, ஸ்மார்ட் பிளே தொடு திரை பொழுதுப்போக்கு சாதனம், மற்றும் இஞ்ஜினை இயக்க உதவும் ஸ்மார்ட் கீ பட்டன்

பெட்ரோல் வகை V மாடல், 4 வேக தானியங்கி ட்ரான்ஸ்மிஷன் 5 வேக ஆளியக்க வசதியுடன் கிடைக்கின்றது. இதன் டீசல் ரக மாடலில் மாருதியின் பிரத்தியேக கலப்பின கார்களுக்கான SHVS (ஸ்மார்ட் ஹைபிரிட் வெகிக்கில் பை சுசுகி) தொழில்நுட்பத்தை, சியாஸ் செடான் காரில் முதன் முறையாக பொருத்தப்பட்டதைப் போலவே, இதிலும் மாருதி நிறுவனம் பொருத்தும் என்று தெரிகிறது.

m
வெளியிட்டவர்

manish

  • 11 பார்வைகள்
  • 1 கருத்துகள்

Write your Comment மீது மாருதி எர்டிகா 2015-2022

Read Full News

trendingஎம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை