ட்வின்-டர்போ V8 இன்ஜினுடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது Land Rover Defender Octa
ஃபிளாக்ஷிப் மாடலாக இது வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய தேதியில் கிடைக்கும் சக்திவாய்ந்த டிஃபென்டர் இதுவாகும்.
-
லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஆக்டா கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
-
இது ஃபிளாக்ஷிப் மாடல் மற்றும் 4.4 லிட்டர் ட்வின்-டர்போ V8 பெட்ரோல் இன்ஜின் 635 PS அவுட்புட்டை கொடுக்கிறது.
-
வழக்கமான டிஃபென்டர் உடன் ஒப்பிடும் போது வெளிப்புற வடிவமைப்பில் நிறைய மாற்றங்கள் உள்ளன.
-
இதனுடன் ஒரு ஸ்பெஷன் ஆக்டா பதிப்பு ஒன்றையும் வழங்குகிறது. இது ஒரு வருடத்திற்கு மட்டுமே விற்பனையில் இருக்கும்.
-
11.4-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஹாப்டிக் ஃபீட்பேக் சீட்கள் ஆகியவை இதன் ஹைலைட்ஸ் ஆக இருக்கும்.
-
ஆக்டாவின் விலை ரூ.2.59 கோடியாகவும், ஆக்டா எடிஷன் ஒன் விலை ரூ.2.79 கோடியாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
லேண்ட் ரோவர் நிறுவனம் இதுவரை வெளியானதிலேயே மிகவும் சக்தி வாய்ந்த டிஃபென்டர் ஆன டிஃபென்டர் ஆக்டா காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் விலை ரூ. 2.59 கோடியில் இருந்து தொடங்குகிறது. இது 110 (5-டோர்) பாடி ஸ்டைல் உடன் பிரத்தியேகமாக வழங்கப்பட்டாலும், இது பல மாற்றங்களை கொண்டுள்ளது, இது வழக்கமான டிஃபென்ட்டரில் இருந்து பார்க்கும் போது இதற்கு தனிப்பட்ட வேறுபட்ட அடையாளத்தை கொடுக்கிறது.மேலும் விரிவான விவரங்கள் இங்கே.
வடிவமைப்பு
லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஆக்டாவை 110 பாடி ஸ்டைலுடன் வடிவமைத்துள்ளது. ஆனால் அளவுகள் மற்றும் வெளிப்புறத்தில் நிறைய மாற்றங்கள் உள்ளன. ஆக்டாவின் சவாரி உயரமும் 28 மி.மீ மற்றும் இதன் அகலம் 68 மி.மீ அதிகரித்துள்ளது.
ஆக்டா இரு பக்கங்களிலும் புதிய பம்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது வாகனத்தின் அப்ரோச் மற்றும் டிபார்ச்சர் கோணத்தை அதிகரிக்கிறது. மேலும் இதன் ஆஃப்-ரோடு திறன்களை மேம்படுத்துகிறது. ஆக்டா கரடுமுரடான சாலைகள் வழியாக மட்டும் சமாளிக்காது, மற்ற டிஃபென்டர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு மீட்டர் தண்ணீர் வழியாக கூட செல்லும். டிஃபென்டர் காருடன் ஒப்பிடும் போது எஸ்யூவி -க்கான கிரில் பெரியதாக உள்ளது. இது இன்ஜினுக்கான காற்றோட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் காருக்கு ஆக்ரோஷமான தோற்றத்தை கொடுக்க உதவுகிறது.
இதில் 20-இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. மேலும் ஆப்ஷனலாக 22-இன்ச் வீல்களும் கிடைக்கும். ஆக்டா சாரெண்டே கிரே மற்றும் பெட்ரா காப்பர் என இரண்டு கலர் ஆப்ஷன்களை பெறுகிறது. ஆக்டா பதிப்பு ஒன் ஆனது ஃபரோ கிரீன் மற்றும் கார்பாத்தியன் கிரே ஆகியவற்றுடன் வருகிறது. இந்த ஷேடுகள் அனைத்தும் பிளாக் கான்ட்ராஸ்ட் ரூஃப் கலர் உடன் கிடைக்கும்.
டிஃபென்டர் ஆக்டாவின் பின்புறத்தில் எஸ்யூவியின் ஆஃப் ரோடிங் தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் டெயில்கேட்டில் பொருத்தப்பட்ட ஸ்பேர் அலாய் வீல் மற்றும் டோவிங் ஹூக்குகள் ஆகியவை உள்ளன. இது ஒரு குவாட் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தையும் பெறுகிறது. இதன் ஒலி ஆக்டா மோடை பயன்படுத்தும்போது மாறுகிறது.
மேலும் பார்க்க: Volkswagen Tiguan R-Line இன்ஜின் மற்றும் கலர் ஆப்ஷன் விவரங்கள் வெளியீடு
பவர்டிரெய்ன்
இங்குதான் டிஃபென்டர் ஆக்டா மிகப் பெரிய மாற்றத்தைப் பெறுகிறது - உங்களுக்கு தேவைப்படும் போது பவரை உறுதி செய்யும் மிகப்பெரிய பிஎம்டபிள்யூ-சோர்ஸ்டு டூயல் டர்போ V8 இன்ஜின் இதில் உள்ளது. இன்ஜினின் விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
மைல்டு ஹைப்ரிட் உடன் 4.4 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் |
பவர் |
635 PS |
டார்க் |
750 Nm^ |
டிரான்ஸ்மிஷன் |
8-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் |
டிரைவ்டிரெய்ன் |
4WD |
லாஞ்ச் கன்ட்ரோல் உதவியுடன் டார்க்கை 800 Nm வரை அதிகரிக்கலாம்.
ஆக்டா இதுவரை வெளியானதிலேயே மிகவும் சக்திவாய்ந்த டிஃபென்டர் ஆகும். இது 4 வினாடிகளில் மணிக்கு 0-100 கி.மீ வேகத்தை எட்டும். இது 6D சஸ்பென்ஷன் அமைப்பையும் பெறுகிறது. இது வாகனத்தின் பிட்ச் மற்றும் ரோல் மோஷனை குறைப்பதன் மூலம் எஸ்யூவியின் ஆஃப்-ரோடு திறனை மேம்படுத்துகிறது. காலியான சாலையில் எஸ்யூவியை அதிக வேகத்தில் ஓட்டும் போது இது சிறந்த நிலைத்தன்மையையும் உறுதி செய்கிறது.
இன்ட்டீரியர்
ஆக்டாவின் கேபின் மிகவும் சிறியது மற்றும் வழக்கமான டிஃபென்டர் காரை போன்றே உள்ளது. இது 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் ஏராளமான பாடி கன்ட்ரோல்கள் போன்ற நிலையான வடிவமைப்பு எலமென்ட்களை பெற்றாலும் கூட ஸ்போர்ட்டியரான முன் சீட்கள் முக்கியமான மாற்றம் ஆகும்.
வசதிகள்
11.4-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 15-ஸ்பீக்கர் மெரிடியன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், ஹாப்டிக் இருக்கைகள், ரியர் வென்ட்களுடன் 3-ஜோன் ஆட்டோ ஏசி மற்றும் கீலெஸ் என்ட்ரி ஆகியவற்றுடன் வருகிறது.
பாதுகாப்புக்காக 360 டிகிரி கேமரா, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற வசதிகளை இது கொண்டுள்ளது. ஆக்டாவில் கிடைக்கும் ஒரு சிறப்பு அம்சம் வேட் சென்சிங் ஆகும். இது காருக்கு வெளியில் உள்ள நீரின் ஆழத்தைப் பற்றி ஓட்டுநருக்கு இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பின் மூலமாக தெரிவிக்கிறது.
போட்டியாளர்கள்
டிஃபென்டரின் ஹையர்-பெர்ஃபாமன்ஸ் வேரியன்ட் ஆக இது இருப்பதால், ஆக்டா ஆனது லம்போர்கினி உருஸ், மற்றும் ஆஸ்டன் மார்ட்டின் DBX ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
(அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், இந்தியா -வுக்கானவை)
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.