• English
  • Login / Register

லேண்ட் ரோவர் டிஃபன்டர் இந்தியாவில் 2020 ஆம் ஆண்டுக்கான முன்பதிவுகளைத் தொடங்கி இருக்கிறது

லேண்டு ரோவர் டிபென்டர் க்காக மார்ச் 02, 2020 02:37 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 30 Views
  • ஒரு கருத்தை எழுதுக

அடுத்த தலைமுறை டிஃபென்டர் இந்தியாவில் 3-கதவு மற்றும் 5-கதவு உடல் பாணிகளில் வழங்கப்படுகிறது

2020 Land Rover Defender

  • 2019 பிராங்பேர்ட் மோட்டார் கண்காட்சியில் அடுத்த தலைமுறை டிஃபென்டர் அறிமுகமாகியது.

  • இது மொத்தம் ஐந்து வகைகளில் வழங்கப்படுகிறது.

  • 2.0 லிட்டர் பெட்ரோல் இயந்திரத்துடன் (300பி‌எஸ்/400என்‌எம்) 8-வேக இசட்எஃப் தானியங்கி பற்சக்கரப் பெட்டியுடன்  வருகிறது.

  • 2020 டிஃபென்டர் என்பது நீரின் ஆழத்தை கண்டறியும் உணர்விகள் மற்றும் மின்னணு ஏர் சஸ்பென்ஷன் போன்ற கரடுமுரடான சாலையில் செல்லும் தொழில்நுட்பத்துடன் கூடிய சிறப்பம்சங்களை வழங்குகிறது.

  • இதன் விலை ரூபாய் 69.99 லட்சம் முதல் ரூபாய் 86.27 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) இருக்கிறது.

2019 ஆம் ஆண்டு பிராங்பேர்ட் மோட்டார் கண்காட்சியில் அடுத்த தலைமுறை லேண்ட் ரோவர் டிஃபென்டர் அறிமுகமானது. தற்போது, இந்தியாவில் லேண்ட் ரோவர்  எஸ்யூவிக்கு முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளது, இது இரண்டு உடல் பாணிகளில் வழங்கப்படுகிறது: 90 (3 கதவு) மற்றும் 110 (5 கதவு).

2020 Land Rover Defender 90 and 110

இது 90 மற்றும் 110 மாதிரிகள் தலா ஐந்து வகைகளில் கிடைக்கிறது: பேஸ், எஸ், எஸ்இ, ஹெச்எஸ்இ மற்றும் முதல் பதிப்பு ஆகியவை ஆகும். இது இன்னும் அரிமிகப்படுத்தப்படாத  நிலையில், லேண்ட் ரோவர் ஏற்கனவே அதன் விலைகளை வெளிப்படுத்தி இருக்கிறது.

வகை 

லேண்ட் ரோவர் டிஃபென்டர் 90 விலை

லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110 விலை

பேஸ் 

ரூபாய் 69.99 லட்சம் 

Rs 76.57 lakh

எஸ்

ரூபாய் 73.41 லட்சம்

ரூபாய் 79.99 லட்சம்

எஸ்‌இ 

ரூபாய் 76.61 லட்சம்

ரூபாய் 83.28 லட்சம்

எச்‌எஸ்‌இ 

ரூபாய் 80.43 லட்சம்

ரூபாய் 87.1 லட்சம்

முதல் பதிப்பு

ரூபாய் 81.3 லட்சம்

ரூபாய் 86.27 லட்சம்

இது ஒரு டிஃபென்டர் என்பதால், இது லேண்ட் ரோவரின் புகழ்பெற்ற ஏ‌டபில்யு‌டி செலுத்தும் தொகுதியினைக்  கொண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு டிஃபென்டர் 2.0 லிட்டர் பெட்ரோல் இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது, இது 300 பிபிஎஸ் சக்தியையும் 400 என்எம் முறுக்குத் திறனையும் வெளியேற்றும். இது 8-வேக இசட்எஃப் தானியங்கி பற்சக்கரப் பெட்டியுடன்  இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 2020 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்  இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலைகள் ரூபாய்  57.06 லட்சம் முதல் ஆரம்பிக்கிறது  

2020 Land Rover Defender cabin

2020 டிஃபென்டரில் 360 டிகிரி கேமரா, நீரின் ஆழத்தைக் கண்டறியும் உணர்விகள், மின்னணு ஏர் சஸ்பென்ஷன், இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம், ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம் மற்றும் 10-ஒலிபெருக்கி அமைப்பு ஆகியவை இருக்கிறது. மேலும் லேண்ட் ரோவர் எஸ்யூவியில் எல்இடி முகப்பு விளக்குகள், பயணக் கட்டுப்பாடு மற்றும் ஆறு காற்று பைகள் வரை வழங்குகிறது. இது இருக்கை விருப்பங்கள், துணைப் பொதிகள் மற்றும் கூடுதல் அம்சங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தனிப்பயனாக்கலை வழங்குகிறது.

2020 Land Rover Defender

கரடுமுரடான சாலைகளில் பயணிக்கும் திறன் கொண்ட எஸ்யூவி ஒரு முழுமையாக கட்டமைக்கப்பட்ட அலகாக (சிபியு) கொண்டு வரப்படுகிறது, ஆகவே, இதன் விலை ரூபாய் 69.99 லட்சம் முதல் 86.27 லட்சம் வரை (86.27) இருக்கிறது (எக்ஸ்-ஷோரூம் இந்தியா). அடுத்த தலைமுறை டிஃபென்டர் என்பது புதிய பெட்ரோல் இயந்திரம் மட்டுமே கொண்டிருக்கும் ஜீப் ரேங்லருக்கு மாற்றாக இருக்கிறது, இது 63.94 லட்சம் (எக்ஸ்  ஷோரூம் இந்தியா) விலையில் உள்ளது. இது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: லேண்ட் ரோவர் டிஃபென்டர் தானியங்கி

was this article helpful ?

Write your Comment on Land Rover டிபென்டர்

explore மேலும் on லேண்டு ரோவர் டிபென்டர்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்Estimated
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்Estimated
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்Estimated
    ஏப், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்Estimated
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf3
    vinfast vf3
    Rs.10 லட்சம்Estimated
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience