1 லட்சம் முன்பதிவுகள் என்ற மைல்கல்லை எட்டியது Kia Seltos ஃபேஸ்லிஃப்ட் … 80,000 பேர் சன்ரூஃப் வேரியன்ட்களை தேர்ந்தெடுத்துள்ளனர்
published on பிப்ரவரி 07, 2024 12:55 pm by shreyash for க்யா Seltos
- 25 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜூலை 2023 தொடங்கி ஒவ்வொரு மாதமும் கியா நிறுவனம் செல்டோஸ் காருக்கு சராசரியாக 13,500 முன்பதிவுகளை பெற்றுள்ளது.
-
புதிய செல்டோஸிற்கான முன்பதிவு தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்களை கியா நிறுவனம் பகிர்ந்துள்ளது.
-
செல்டோஸ் வாடிக்கையாளர்களில் 80 சதவீதம் பேர் ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களை (HTK+ முதல்) தேர்ந்தெடுக்கின்றனர்.
-
மொத்த முன்பதிவுகளில் 58 சதவிகிதம் கியா செல்டோஸின் பெட்ரோல் டிரிம்களுக்காகவும், கிட்டத்தட்ட 50 சதவிகிதம் பேர் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களையும் தேர்வு செய்துள்ளனர்
.
-
பாதுகாப்பை பொறுத்தவரை, 40 சதவீத வாடிக்கையாளர்கள் கியா செல்டோஸின் ADAS-பொருத்தப்பட்ட வேரியன்ட்களையே தேர்வு செய்கிறார்கள்.
கியா செல்டோஸ் ஜூலை 2023 -ல் ஒரு பெரிய ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் கிடைத்தது, இதன் மூலம் புதிய வடிவமைப்பை பெற்றது. மேலும் புதிய வசதிகள், கூடுதலான பாதுகாப்பு மற்றும் புதிய 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் கிடைத்தது. இப்போது கியா செல்டோஸிற்கான மொத்த முன்பதிவுகள் ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டன என்று கியா தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் சராசரியாக, ஃபேஸ்லிஃப்ட் செல்டோஸ் ஒவ்வொரு மாதமும் 13,500 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது.
80 சதவீத வாடிக்கையாளர்கள் ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களை விரும்புகிறார்கள்
கியாவின் அறிவிக்கையின்படி, செல்டோஸ் வாடிக்கைகளில் 80 சதவீதம் பேர் சிறந்த ஹையர் ஸ்பெக் வேரியன்ட்களை (HTK+ முதல்) விரும்புகிறார்கள், மேலும் பனோரமிக் சன்ரூஃப் கொண்ட வேரியன்ட்களையும் தேர்வு செய்கிறார்கள். ஃபேஸ்லிஃப்ட்டுடன் சேர்க்கப்பட்ட புதிய வசதிகளில் ஒன்று அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகும், மேலும் 40 சதவீதத்திற்கும் அதிகமான புதிய செல்டோஸ் வாடிக்கையாளர்கள் இந்த பாதுகாப்பு வசதியை விரும்புகிறார்கள் என்று கியா தெரிவித்துள்ளது.
இதையும் பார்க்கவும்: ஒரே மாதத்தில் 51,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்ற Hyundai Creta ஃபேஸ்லிஃப்ட்
ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களுக்கு அதிக தேவை உள்ளது
கியா செல்டோஸ் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது: 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் (NA) பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல். மூன்றுமே ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனின் ஆப்ஷனை பெறுகின்றன, மேலும் கியாவின் அறிவிக்கையின்படி, புதிய செல்டோஸிற்கான அனைத்து முன்பதிவுகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுக்கானது. இதுவரை நடந்த மொத்த முன்பதிவில் 42 சதவீதத்தை பெற்றுள்ள டீசல் மூலம் இயங்கும் வேரியன்ட்டுக்கு இன்னும் தேவை அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட்), டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற பிரீமியம் அம்சங்களுடன் கியா செல்டோஸை கொடுக்கின்றது. இது ஏர் ஃபியூரிபையர், ஆம்பியன்ட் லைட்ஸ், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகளையும் பெறுகிறது.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, செல்டோஸ் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), 360 டிகிரி கேமரா மற்றும் லேன் கீப் அசிஸ்ட், ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் வருகிறது.
பவர்டிரெய்ன் விவரங்கள்
இன்ஜின் வாரியான விவரங்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
இன்ஜின் |
1.5 லிட்டர் NA பெட்ரோல் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
115 PS |
160 PS |
116 PS |
டார்க் |
144 Nm |
253 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT / CVT |
6-ஸ்பீடு iMT / 7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு iMT / 6-ஸ்பீடு AT |
ஜனவரி 2024 -ல், கியா செல்டோஸின் டீசல் இன்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் அறிமுகப்படுத்தியது. iMT செட்டப் (கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவல்) ஆப்ஷனை வழங்கும் அதன் பிரிவில் உள்ள ஒரே எஸ்யூவி இதுவாகும்.
விலை & போட்டியாளர்கள்
கியா செல்டோஸ் ரூ.10.90 லட்சம் முதல் ரூ.20.30 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்
மேலும் படிக்க: கியா செல்டோஸ் டீசல்
0 out of 0 found this helpful