• English
  • Login / Register

ஜீப், மெரிடியனுக்கான 2 புதிய ஸ்பெஷல் எடிஷன்களை வெளியிடுகிறது, இதன் விலை ரூ.33.41 லட்சத்தில் தொடங்குகிறது.

published on ஏப்ரல் 12, 2023 06:44 pm by ansh for ஜீப் meridian

  • 27 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மெரிடியன் அப்லேன்ட்  மற்றும் மெரிடியன் X  ஆகியவை காஸ்மெட்டிக் மாற்றங்கள் மற்றும் சில புதிய அம்சங்களுடன் வருகின்றன

Jeep Rolls Out 2 New Special Editions For Meridian, Prices Start At Rs 33.41 Lakh

  • அப்லேண்ட் பதிப்பில் ரூஃப் கேரியர் மற்றும் சைடு ஸ்டெப்ஸ் மற்றும் சன் ஷேட்ஸ், கார்கோ மேட்ஸ் மற்றும் டயர் இன்ஃப்ளேட்டர் போன்ற அம்சங்கள் உள்ளன.

  • மெரிடியன் X சாம்பல் ரூஃப், சாம்பல் பாக்கெட்டுகளுடன் கூடிய அலாய் வீல்கள் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் வழங்குகிறது.

  • இந்த ஸ்பெஷல் எடிஷன்கள் இரண்டு புதிய வண்ண விருப்பங்களுடன் வருகின்றன: சில்வரி மூன் மற்றும் கேலக்ஸி ப்ளூ.

  • மெரிடியனின் விலை ரூ.32.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

ஜீப் அதன் மெரிடியன் எஸ்யூவி யின் இரண்டு ஸ்பெஷல் எடிஷன்களை அப்லேன்ட்  மற்றும் “X”-களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன்கள் சில அழகியல் மாற்றங்கள், புதிய வண்ண விருப்பங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் வருகின்றன. இந்த எடிஷன்களுக்கான வேரியன்ட் வாரியான கார்கள் விலைகள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அவற்றுக்கான முன்பதிவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன.

விலைகள்

Jeep Meridian
தேர்ந்தெடுக்கப்பட்ட காரின் வேரியன்டைப் பொறுத்து, இந்த ஸ்பெஷல் எடிஷன்களின் விலை ரூ.33.41 லட்சம் முதல் ரூ.38.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும். இந்த ஸ்பெஷல் எடிஷன்களின் விலைகளும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் துணைக் கருவிகள் அடிப்படையில் மாறுபடலாம்.

புதிதாக என்ன உள்ளது ?

Jeep Meridian X Special Edition
நகர்ப்புற வாழ்க்கை முறையை மையமாகக் கொண்ட மெரிடியன் X ஸ்பெஷல் எடிஷன் புதிய சில்வரி கிரே வண்ண விருப்பத்தில் வருகிறது மற்றும் சாம்பல் ரூஃப், சாம்பல் பாக்கெட்டுகளுடன் கூடிய அலாய் வீல்கள், சைடு மோல்டிங்ஸ் மற்றும் படில் லேம்புகள் ஆகியவற்றைப் பெறுகிறது. 

Jeep Meridian Upland Special Edition

மெரிடியன் அப்லேண்ட், ஆஃப்-ரோடு ஆர்வலர்கள் மீது அதிக கவனம் செலுத்துகிறது மற்றும் கேலக்ஸி நீல நிறத்தில் வருகிறது. இது ரூஃப் கேரியர், ஸ்பிளாஸ் கார்டுகள், பூட் ஆர்கனைசர், சன் ஷேட்கள், கார்கோ மேட்ஸ் மற்றும் டயர் இன்ஃப்ளேட்டர் ஆகியவற்றைப் பெறுகின்றன. அப்லேண்ட் எடிஷன்  முகப்பில்  ஒரு டீக்கலைப் பெறுகிறது. இந்த இரண்டு ஸ்பெஷல் எடிஷன்களும் சைடு ஸ்டெப்ஸ், ஆம்பியன்ட் லைட்டிங்குகள் மற்றும் வித்தியாசமான பாணியிலான தரை விரிப்புகள் ஆகியவற்றைப் பெறுகின்றன.
மேலும் படிக்க: தங்களின் ஆஃப்-ரோடு சாகசங்களில் அதிக தொழில்நுட்பத்தை தேடுபவர்களுக்காக தோற்றத்தில் பொலிவு கூட்டப்பட்ட ஜீப் ரேங்லர்
கார் தயாரிப்பாளர் இந்த ஸ்பெஷல் எடிஷன்களை வாங்குபவர்களுக்கு 11.6 இன்ச் பின்புற டிஸ்பிளேவை பாதி விலையில் வழங்குகிறார்.

ஏற்கனவே இருக்கும் அம்சங்கள்

Jeep Meridian Cabin

ஸ்டான்டர்டு மெரிடியனில் 10.1- இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மல்டி ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், சாய்க்கக்கூடிய இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் ஒன்பது-ஸ்பீக்கர் ஆல்பைன் ஒலி அமைப்பு போன்ற அம்சங்களுடன் வருகிறது.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது.

பவர்டிரெயின்

Jeep Meridian Engine

எஸ்யூவி ஆனது 170PS மற்றும் 350Nm ஆற்றலை வெளிப்படுத்தும் BS6  இரண்டு கட்டத்திற்கு இணக்கமான 2-லிட்டர் டர்போ-டீசல் இன்ஜினைப் பெறுகிறது. இந்த யூனிட் ஆறு வேக மேனுவல் உடனோ அல்லது ஒன்பது வேக ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உடனோ இணைக்கப்பட்டுள்ளது மெரிடியன் 4X2 மற்றும் 4X4 டிரைவ் டிரெய்ன்களைப் பெறுகிறது

விலைகள் & போட்டியாளர்கள்

Jeep Meridian

இந்த ஸ்பெஷல் எடிஷன்களின் விலைகளுக்காக நாங்கள் காத்திருக்கும் போது, அவை ஸ்டான்டர்டு மெரிடியனை விட கூடுதல் பிரீமியத்தைப் பெறும்  என்று எதிர்பார்க்கலாம், இதன் விலைகள் ரூ. 32.95 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஸ்கோடா கோடியாக் மற்றும் எம்ஜி க்ளோஸ்டர் போன்றவற்றுக்கு போட்டியாக ஜீப் மெரிடியன் உள்ளது.

மேலும் படிக்கவும்: ஜீப் மெரிடியன் டீசல்

was this article helpful ?

Write your Comment on Jeep meridian

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience