• English
    • Login / Register

    Jeep Compass -ன் சாண்ட் ஸ்டார்ம் எடிஷன் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

    kartik ஆல் மார்ச் 17, 2025 07:41 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    38 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    சாண்ட்ஸ்டார்ம் பதிப்பு அடிப்படையில் ரூ. 49,999 மதிப்புள்ள எஸ்யூவி -க்கான ஆக்ஸசரி பேக்கேஜ் ஆகும். இதில் சில காஸ்மெட்டிக் மாற்றங்களும் புதிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இது குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்கப்படும்.

    Jeep Compass Sandstorm Edition

    • சாண்ட்ஸ்டார்ம் பதிப்பானது லோயர் டிரிம்ஸ், ஸ்போர்ட், லாங்கிட்யூட் மற்றும் லாங்கிட்யூட் (O) ஆகியவற்றில் கிடைக்கிறது.

    • ஹூட் மற்றும் பக்கவாட்டில் புதிய டீக்கால்கள் மற்றும் 'ஜீப் சாண்ட்ஸ்டார்ம்' பேட்ஜ் ஆகியவை வடிவமைப்பில் உள்ள மாற்றங்கள் ஆகும்.

    • லிமிடெட் பதிப்பில் கஸ்டமைஸபிள் ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் முன் மற்றும் பின்புற டாஷ் கேமராக்கள் போன்ற புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

    ஜீப் காம்பஸ் காரின் புதிய லிமிடெட் எடிஷன் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சாண்ட் ஸ்டார்ம் எடிஷன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஸ்போர்ட், லாங்கிட்யூட் மற்றும் லாங்கிட்யூட் (O) என 3 லோயர்-ஸ்பெக் டிரிம்களில் கிடைக்கிறது. இதில் புதிய டீகால்கள் மற்றும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. சாண்ட்ஸ்டார்ம் பதிப்பு வழக்கமான வேரியன்ட்களுடன் ஒப்பிடுகையில் ரூ. 49,999 வரை விலை கூடுதலாக வருகிறது. கூடுதல் விவரங்களை கீழே காணலாம்: 

    வேரியன்ட் 

    வழக்கமான ஜீப் காம்பஸ் 

    ஜீப் காம்பஸ் சாண்ட் ஸ்டார்ம் பதிப்பு 

    விலை வித்தியாசம் 

    ஸ்போர்ட்

    ரூ.19 லட்சம் 

    ரூ.19.49 லட்சம் 

    ரூ.49,999

    லாங்கிடியூட் (MT)

    ரூ.22.33 லட்சம் 

    ரூ.22.82 லட்சம் 

    ரூ.49,999 

    லாங்கிடியூட் (AT) 

    ரூ.24.33 லட்சம் 

    ரூ.24.82 லட்சம் 

    ரூ.49,999

    லாங்கிடியூட் (O) (MT)

    ரூ.24.83 லட்சம் 

    ரூ.25.32 லட்சம் 

    ரூ.49,999

    லாங்கிடியூட் (O) (AT) 

    ரூ.26.83 லட்சம் 

    ரூ.27.32 லட்சம் 

    ரூ.49,999

    புதிதாக என்ன உள்ளது ? 

    சாண்ட்ஸ்டார்ம் பதிப்பில் ஹூட் பகுதியிலும், ஜீப் எஸ்யூவியின் பக்கவாட்டில் டூன் டீக்கால்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

    ஒரு புதிய 'ஜீப் சாண்ட்ஸ்டார்ம்' மோனிகரும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் ORVM -க்கு கீழே வைக்கப்பட்டுள்ளது. சாண்ட்ஸ்டார்ம் பதிப்பு ஒரு ஆக்ஸசரி பேக் என்பதால் அதை தவிர ஜீப் காம்பஸின் ஒட்டுமொத்த வடிவமைப்பும் எந்த வித மாற்றமும் இல்லாமல் உள்ளது.

    சாண்ட்ஸ்டார்ம் பதிப்பின் கேபினில் புதிய இருக்கை கவர்கள், கார்பெட் மற்றும் கார்கோ மேட்ஸ் போன்ற சில சேர்க்கைகள் உள்ளன. ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் முன் மற்றும் பின்புற டாஷ் கேமராக்கள் போன்ற விஷயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

    வசதிகள் மற்றும் பாதுகாப்பு 

    வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் 10.1-இன்ச் டச் ஸ்கிரீன், 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், பவர்டு ORVM -கள், க்ரூஸ் கண்ட்ரோல், டூயல்-ஜோன் ஆட்டோ ஏசி, பின்புற வென்ட்கள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் உடன் வரும் சாண்ட் ஸ்டார்ம் பதிப்பு லோவர் டிரிம்களை அடிப்படையாகக் கொண்டது. 

    டூயல் ஏர்பேக்குகள் (ஹையர் வேரியன்ட்களில் 6 வரை), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (டிபிஎம்எஸ்) மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகியவற்றின் உதவியுடன் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. 

    மேலும் பார்க்க: வெளியானது Mahindra XUV700 -யின் எபோனி எடிஷன்

    பவர்டிரெய்ன் 

    ஜீப் காம்பஸில் 2-லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளது. அதன் விவரங்கள் இங்கே: 

    இன்ஜின் 

    2 லிட்டர் டீசல் 

    பவர்

    172 PS 

    டார்க் 

    350 Nm 

    டிரான்ஸ்மிஷன்

    6-ஸ்பீடு MT*, 9-ஸ்பீடு AT^

    *MT= மேனுவல் டிரான்ஸ்மிஷன் 

    ^AT= டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் 

    போட்டியாளர்கள் 

    ஜீப் காம்பஸ் ஆனது டாடா ஹாரியர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், சிட்ரோன் சி5 ஏர்கிராஸ், மற்றும் ஹூண்டாய் டுஸான் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது.

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Jeep காம்பஸ்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience