• English
  • Login / Register

பாரத் NCAP -ல் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது Hyundai Tucson

ஹூண்டாய் டுக்ஸன் க்காக நவ 28, 2024 11:32 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 134 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் கார் ஹூண்டாய் டுஸான் பாரத் என்சிஏபியால் சோதனை செய்யப்பட்டுள்ளது.

  • பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்காக 5 ஸ்டார் மதிப்பீட்டை பெற்றது அதாவது இது 30.84/32 மதிப்பெண்களை பெற்றது.

  • குழந்தைகளுக்கான பாதுகாப்பில் இது 41/49 மதிப்பெண்களுடன் 5 ஸ்டார் மதிப்பீட்டை பெற்றது. 

  • இது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் ஒரு ADAS தொகுப்புடன் வருகிறது.

  • டுஸான் காரின் விலை ரூ.29.02 லட்சத்தில் இருந்து ரூ.35.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி) ஆக உள்ளது.

பாரத் NCAP அமைப்பில் ஹூண்டாய் டுஸான் கிராஷ்-டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அங்கு அது 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு (AOP) சோதனைகளில் 30.84/32 மதிப்பெண்களையும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனைகளில் (COP) 41/49 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. இந்த ஸ்கோர் டுஸான் இரண்டு விஷயங்களிலும் 5-ஸ்டார் மதிப்பீட்டைப் பெற வழிவகுத்தது. ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு கார் உள்நாட்டு NCAP ஏஜென்சியால் கிராஷ்-டெஸ்ட் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. கிராஷ் டெஸ்ட் முடிவுகளை விரிவாகப் பார்ப்போம்:

பெரியவர்களுக்கான பாதுகாப்பு (AOP)

Hyundai Tucson Bharat NCAP crash test

ஃபிரன்டல் ஆஃப்செட் டிஃபார்மபிள் பேரியர் டெஸ்ட்: 14.84/16 புள்ளிகள்

சைடு டிஃபார்மபிள் பேரியர் டெஸ்ட்: 16/16 புள்ளிகள்

முன்பக்க தாக்கத்திலிருந்து பெரியவர்களுக்கான பாதுகாப்பின் அடிப்படையில் கோ டிரைவருக்கான அனைத்து பகுதிகளும் 'நல்ல' மதிப்பீட்டைப் பெற்றன. ஓட்டுநரின் தலை, கழுத்து, இடுப்பு, தொடைகள் மற்றும் கால் முன்னெலும்பு ஆகியவற்றுக்கு 'நல்ல' பாதுகாப்பைப் கிடைத்தது. அதே நேரத்தில் மார்பு மற்றும் கால்களுக்கான பாதுகாப்பு 'போதுமானதாக' மதிப்பீடு கிடைத்தது.

சைடு டிஃபார்மபிள் பேரியர் மற்றும் சைடு போல் இம்பாக்ட் சோதனைகளில் டிரைவரின் அனைத்து பாகங்களும் 'நல்ல' பாதுகாப்பு மதிபீட்டை பெற்றன. 

குழந்தைகளுக்கான பாதுகாப்பு (COP)

Hyundai Tucson Bharat NCAP crash test

டைனமிக் மதிப்பெண்: 24/24 புள்ளிகள்

சைல்டு ரீஸ்ட்ரெயின் சிஸ்டம் (CRS) இன்ஸ்டாலேஷன் மதிப்பெண்: 12/12 புள்ளிகள்

வெஹிகிள் அசெஸ்மென்ட் மதிப்பெண்: 5/13 புள்ளிகள்

குழந்தைகளுக்கான பாதுகாப்பை பொறுத்தவரையில் டுஸான் சைல்டு ரீஸ்ட்ரெயின் கன்ட்ரோல் சிஸ்டம்களை பயன்படுத்தி டைனமிக் சோதனையில் முழுப் புள்ளிகளைப் (24க்கு 24) பெற்றது. 18 மாத மற்றும் 3 வயதுடைய டம்மியின் முன் மற்றும் பக்க பாதுகாப்பு இரண்டுக்கும் டைனமிக் மதிப்பெண் முறையே 8 -க்கு 8 மற்றும் 4 -க்கு 4 ஆக கிடைத்தது

மேலும் படிக்க: மஹிந்திரா BE 6e மற்றும் XEV 9e க்கு இடையேயான வடிவமைப்பு வேறுபாடுகள்

ஹூண்டாய் டுஸான்: பாதுகாப்பு வசதிகள்

ஹூண்டாய் டுஸானின் பாதுகாப்புத் தொகுப்பு மிகச் சிறப்பானதாக உள்ளது. இதில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), 360-டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற வசதிகளை உள்ளடுஸாகியுள்ளது. ADAS தொழில்நுட்பத்தில் பிளைண்ட்-ஸ்பாட் டிடெக்‌ஷன் மற்றும் கொலிஷன் அவாய்டன்ஸ், அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஹை-பீம் அசிஸ்ட் மற்றும் லேன்-கீப் அசிஸ்ட் ஆகியவை உள்ளன. இது முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்களையும் பெறுகிறது.

ஹூண்டாய் டுஸான்: பவர்டிரெயின் ஆப்ஷன்கள்

Hyundai Tucson

டுஸான் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது, அதன் விரிவான விவரங்கள் இங்கே:

இன்ஜின்

2 லிட்டர் டீசல்

2-லிட்டர் டர்போ-பெட்ரோல்

பவர்

186 PS

156 PS

டார்க்

416 Nm

192 Nm

டிரான்ஸ்மிஷன்*

8-ஸ்பீடு ஏடி

6-ஸ்பீடு ஏடி

டிரைவ்டிரெய்ன்^

FWD/AWD

FWD

*AT = டார்க் கன்வெர்டர் மாற்றி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

^FWD = ஃபிரன்ட்-வீல் டிரைவ்; AWD = ஆல்-வீல் டிரைவ்

ஹூண்டாய் டுஸான்: விலை மற்றும் போட்டியாளர்கள்

Hyundai Tucson Bharat NCAP crash test

ஹூண்டாய் டுஸானின் விலை ரூ.29.02 லட்சம் முதல் ரூ.35.94 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், புது தில்லி) உள்ளது. இது ஜீப் காம்பஸ், சிட்ரோன் சி5 ஏர்கிராஸ், மற்றும் ஃபோக்ஸ்வாகன் டிகுவான் போன்ற கார்களுடன் போட்டியிடும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: ஹூண்டாய் டுஸான் ஆட்டோமெட்டிக்

was this article helpful ?

Write your Comment on Hyundai டுக்ஸன்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience