சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட Hyundai Staria MPV

ஹூண்டாய் ஸ்டாரியா க்காக ஜனவரி 17, 2025 11:13 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

ஹூண்டாய் ஸ்டாரியா 7, 9 மற்றும் 11 இருக்கை அமைப்புகளில் வருகிறது. 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் ADAS போன்ற வசதிகள் உள்ளன.

  • கனெக்டட் LED DRL பீஸ், பிக்சலேட்டட் ஹெட்லைட்கள் மற்றும் ஸ்லைடிங் டோர்களில் ஆகியவை உள்ளன.

  • மினிமலிஸ்டிக் டாஷ்போர்டு இதில் உள்ளது மற்றும் 11 பேர் வரை தங்கலாம்.

  • 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 64 வண்ண சுற்றுப்புற லைட்ஸ் மற்றும் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இதிலுள்ள ஹைலைட்ஸ் ஆக இருக்கும்.

  • இதன் பாதுகாப்புக்காக மல்டி ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.

  • 3.5 லிட்டர் பெட்ரோல் அல்லது 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது.

  • இந்தியாவின் இது வெளியிடப்படுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

கியா கார்னிவல்-அளவிலான பிரீமியம் MPV -யான ஹூண்டாய் ஸ்டாரியா இப்போது பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் இந்தியாவில் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு வரிசை இருக்கைகள் இந்த காரின் ஹைலைட்ஸ் ஆக உள்ளன. இதில் 11 பேர் வரை பயணிக்கலாம். ஸ்டாரியா எம்பிவி எப்படி இருக்கிறது மற்றும் அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

அதிநவீன வடிவமைப்பு

ஹூண்டாய் ஸ்டாரியா ஒரு அதிநவீனமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பம்பர் மீது பெரிய கிரில் மற்றும் பிக்சலேட்டட் பேட்டர்ன் ஹெட்லைட்களுடன் எல்இடி டிஆர்எல் ஸ்டிரிப் முன்பக்கத்தின் அகலத்தை விரிவுபடுத்துகிறது. ஜன்னல் பேனல்கள் கார்னிவல் போலவே மிகப்பெரியவை. இது ஸ்லைடிங் பின்புற டோர்களுடன் வருகிறது. பின்புறத்தில் ஸ்டாரியா வெர்டிகலாக அடுக்கப்பட்ட டெயில் லைட்களை கொண்டுள்ளது.

மினிமலிஸ்டிக் இன்ட்டீரியர்

டேஷ்போர்டில் மினிமலிஸ்டிக் வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் ஹூண்டாய் கிரெட்டாவை போன்ற ஸ்டீயரிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டாரியா அதன் நான்கு வரிசைகளில் 11 பயணிகள் வரை அமர்வதற்கான இருக்கைகளை கொண்டுள்ளது. ஹூண்டாய் ஸ்டாரியாவை 7 மற்றும் 9 இருக்கை அமைப்புகளில் வழங்குகிறது. முன்பக்கமாக இரண்டு 'ரிலாக்சேஷன்' இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்டாரியா 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப், டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் லைட்ஸ் மற்றும் போஸ் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், ரிவர்சிங் கேமரா மற்றும் பல அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -கள் அடங்கியுள்ளன.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்

உலகளவில் ஹூண்டாய் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் ஸ்டாரியாவை வழங்குகிறது. விவரங்கள் இங்கே:

இன்ஜின்

3.5 லிட்டர் பெட்ரோல்

2.2 லிட்டர் டீசல்

பவர்

272 PS

177 PS

டார்க்

331 Nm

431 Nm

டிரான்ஸ்மிஷன்

8-ஸ்பீடு ஏடி

6-ஸ்பீடு MT, 8-ஸ்பீடு AT

எதிர்பார்க்கப்படும் வெளியீடு, விலை மற்றும் போட்டியாளர்கள்

இந்தியாவில் ஸ்டாரியா எம்பிவி அறிமுகம் செய்யப்படுமா என்பதை ஹூண்டாய் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஒருவேளை அறிமுகம் செய்யப்பட்டால் அதன் விலை ரூ. 65 லட்சத்திற்கு மேல் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், கியா கார்னிவலுக்கு மாற்றாக இது இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Hyundai ஸ்டாரியா

H
hemant wadhwani
Jan 17, 2025, 5:58:25 PM

This is not suitable for Indian market

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்
Rs.26.90 - 29.90 லட்சம்*
Rs.63.90 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.10 - 8.97 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.10.60 - 19.70 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை