பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்படவுள்ள Hyundai Ioniq 9 மற்றும் Hyundai Staria
modified on ஜனவரி 16, 2025 12:04 am by dipan for ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
- 1 View
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் அயோனிக் 9 மற்றும் ஸ்டாரியா ஆகிய கார்கள் வெளியிடப்படுமா இல்லையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் கிரெட்டா எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யப் போவதாக ஹூண்டாய் நிறுவனம் முன்பே உறுதி செய்திருந்தது. இப்போது 2025 ஆட்டோ எக்ஸ்போவில் ஹூண்டாய் அயோனிக் 9 மற்றும் ஹூண்டாய் ஸ்டாரியா எம்பிவி -யின் குளோபல்-ஸ்பெக் மாடல்களையும் காட்சிப்படுத்தப்போவதாக ஹூண்டாய் அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த குளோபல்-ஸ்பெக் மாடல்களின் இந்தியாவில் வெளியிடப்படுமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
முன்பு குறிப்பிட்டது போல் இந்தியாவில் ஜனவரி 17, 2025 அன்று பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ன் போது ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் அறிமுகப்படுத்தப்படும். எனவே தற்போதைய இந்திய வரிசையில் கார் தயாரிப்பாளரின் மிகவும் விலை குறைவான காராக இது இருக்கும்.
கிரெட்டா எலக்ட்ரிக் வடிவமைப்பு கிரெட்டாவின் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) பதிப்பைப் போலவே உள்ளது. இதில் பிளாங்டு-ஆஃப் கிரில், ஆக்டிவ் ஏர் ஃபிளாப்கள், புதிய ஏரோடைனமிக்ஸ் ரீதியாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் மற்றும் புதிய வடிவிலான பம்ப்பர்கள் ஆகிய மாற்றங்கள் உள்ளன.
உள்ளே அதே டேஷ்போர்டு அமைப்புடன், நேவி ப்ளூ மற்றும் கிரே தீமுடன் புதிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் ஸ்டீயரிங் யூனிட்டின் பின்னால் டிரைவ் செலக்டர் ஸ்டாக் கொடுக்கப்படலாம். சென்டர் கன்சோல் தெளிவான வடிவமைப்பை கொண்டுள்ளது.
இது 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் அதே அளவிலான டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜருடன் ஆகியவற்றை ICE-பவர்டு கிரெட்டாவிலிருந்து பெறும். முன் இருக்கைகள் இரண்டும் எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் மற்றும் வென்டிலேட்டட் ஃபங்ஷனை கொண்டுள்ளன.
பாதுகாப்புக்காக கிரெட்டா எலக்ட்ரிக் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகள் உடன் வரும்.
கிரெட்டா எலக்ட்ரிக் உடன் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படும். அதன் விரிவான விவரங்கள் இங்கே:
பேட்டரி பேக் |
42 kWh |
51.4 kWh |
கிளைம்டு ரேஞ்ச் |
390 கி.மீ |
470 கி.மீ |
பவர் |
135 PS |
171 PS |
டார்க் |
TBA |
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரின் விலை ரூ. 17 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது டாடா கர்வ் EV, MG ZS EV, மஹிந்திரா BE 6 மற்றும் வரவிருக்கும் மாருதி இ விட்டாரா போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்க: ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் பல எலக்ட்ரிக் கார்களை காட்சிக்கு வைக்கவுள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனம்
ஹூண்டாய் அயோனிக் 9
வெளிப்புறம்
ஹூண்டாய் அயோனிக் 9, ஹூண்டாயின் ஃபிளாக்ஷிப் EV ஆகும். இது 2024 நவம்பரில் உலகளவில் வெளியிடப்பட்டது. இது ஒரு பெரிய 3-வரிசை எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். EV ஆனது கியா EV9 போன்ற பாக்ஸி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதே E-GMP கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த தளம் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
முன்பக்கத்தில் இது எல்இடி லைட் ஸ்ட்ரிப் உடன் வருகிறது. இது ஏராளமான பிக்சல் போன்ற எலமென்ட்களை கொண்டுள்ளது. இது 19 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் உடலின் நீளம் முழுவதும் ஒரு பிளாக் ஸ்ட்ரிப் உள்ளது. டெயில் லைட்ஸ் பிக்சல் வடிவமைப்பைக் கொண்டுள்ளன மற்றும் டெயில் லைட்டுகள் செங்குத்தாக ஒன்றன் மேல் ஒன்றாக கொடுக்கப்பட்டுள்ளன.
இன்ட்டீரியர், வசதிகள் மற்றும் பாதுகாப்பு
கேபினில் டூயல்-டோன் தீம் மற்றும் கர்வ்டு பேனல் இரண்டு 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் உள்ளன (ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட்க்கு மற்றும் டச் ஸ்கிரீன் -க்கு). இது நேர்த்தியான ஏசி வென்ட்கள் மற்றும் 6 முதல் 7 இருக்கைகளுக்கு இடையே ஒரு ஆப்ஷனை கொண்டுள்ளது. EV-யின் 6 இருக்கைகள் கொண்ட பதிப்பில், முதல் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகள் எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக்கூடியவை. முழுமையாக சாய்க்கக்கூடிய மற்றும் மசாஜ் ஃபங்ஷன்களை கொண்டிருக்கும்.
குளோபல்-ஸ்பெக் மாடல் டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள், 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டிஜிட்டல் ஆன்டெனாவுடன் வருகிறது. இது எந்த ஹூண்டாய் கார்களில் முதல் முறையாக வழங்கப்படுகிறது. பாதுகாப்புக்காக இது பல ஏர்பேக்குகள் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் மற்றும் கொலிஷன் அவாய்டன்ஸ் அசிஸ்ட் போன்ற சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்கள் (ADAS) -ளை கொண்டுள்ளது.
எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
ஹூண்டாய் அயோனிக் 9 லாங் ரேஞ்ச் மற்றும் பெர்ஃபாமன்ஸ் டிரிம்களுடன் பொருத்தப்பட்டுள்ளது, இதில் முந்தையது இரண்டு டிரைவ்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது. விரிவான விவரக்குறிப்புகள் இங்கே:
வேரியன்ட்கள் |
பெர்ஃபாமன்ஸ் |
லாங் ரேஞ்ச் |
|
AWD |
RWD |
AWD |
|
பேட்டரி பேக் |
110.3 kWh |
110.3 kWh |
110.3 kWh |
பவர் |
218 PS வரை (முன்/பின் அச்சு) |
218 PS |
95 PS (முன்-ஆக்ஸில்) / 218 PS (பின்-ஆக்ஸில்) |
டார்க் |
350 Nm |
350 Nm |
255 Nm (முன்-அச்சு) / 350 Nm (பின்-அச்சு) |
WLTP கிளைம்டு ரேஞ்ச் |
TBA |
620 கி.மீ |
TBA |
350 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக அயோனிக் 9 காரை 24 நிமிடங்களில் 10-80 சதவிகிதம் சார்ஜ் செய்ய உதவுகிறது.
மேலும் படிக்க: நீங்கள் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் பார்க்கக்கூடிய டொயோட்டா, லெக்ஸஸ் மற்றும் BYD கார்கள்
ஹூண்டாய் ஸ்டாரியா எம்பிவி
வெளிப்புறம்
ஹூண்டாய் ஸ்டாரியா MPV முன்பக்கம் அயோனிக் 9 போன்றே நிறைய பிக்ஸல்-டிசைன் எலமென்ட்களை கொண்டுள்ளது. இது LED DRL -களாக வேலை செய்யும் மெல்லிய LED ஸ்ட்ரிப் உடன் வருகிறது. அதற்குக் கீழே ஹூண்டாய் லோகோ மற்றும் தேன்கூடு மெஷ் வடிவமைப்புடன் கூடிய கிரில் உள்ளது. கிரில்லுக்கு அருகில் செங்குத்தாக உள்ள LED ஹெட்லைட்கள் பிக்சலேட்டட் வடிவமைப்பைக் கொண்டுள்ளன. ஸ்டாரியா 18-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் கியா கார்னிவல் எம்பிவி போன்ற எலக்ட்ரானிக் ஸ்லைடிங் பின்புற டோர்களுடன் வருகிறது. பின்புறம் நீளமான மற்றும் வெர்டிகலான LED டெயில் லைட்கள் வெர்டிகலான எலமென்ட்கள் மற்றும் டெயில்கேட்டில் ஒரு பெரிய கண்ணாடி கொடுக்கப்பட்டுள்ளது.
இன்ட்டீரியர்ஸ், வசதிகள் மற்றும் பாதுகாப்பு
இது 9 அல்லது 11 இருக்கைகள் மற்றும் ஹூண்டாய் கிரெட்டாவின் நேர்த்தியான ஏசி வென்ட்கள் மற்றும் 10.25-இன்ச் ஃப்ரீஸ்டாண்டிங் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, கிரெட்டாவை போன்ற பயனர் இன்டர்ஃபேஸை கொண்ட டேஷ்போர்டு வடிவமைப்புடன் வருகிறது. இருப்பினும் ஸ்டாரியா ஒரு புதிய 4-ஸ்போக் ஸ்டீயரிங், 8-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் ஆட்டோ ஏசி -க்கான கன்ட்ரோல்களுடன் வருகிறது.
வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், போஸ் ஆடியோ சிஸ்டம் மற்றும் அனைத்து இருக்கைகளுக்கும் USB டைப்-ஏ சார்ஜிங் போர்ட்கள் ஆகிய மற்ற வசதிகளும் கிடைக்கும். பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் அனைத்து இருக்கைகளுக்கும் 3-பாயிண்ட் சீட்பெல்ட்கள் மற்றும் 6 ஏர்பேக்குகளுடன் (ஸ்டாண்டர்டாக) வருகிறது. லேன் கீப் அசிஸ்ட் மற்றும் ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் போன்ற சில ADAS வசதிகளையும் இது பெறுகிறது.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
உலகளவில் ஹூண்டாய் ஸ்டாரியா MPV இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது, அதன் விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
3.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் |
2.2 லிட்டர் டீசல் இன்ஜின் |
பவர் |
272 PS |
177 PS |
டார்க் |
331 Nm |
431 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 8-ஸ்பீடு AT |
6-ஸ்பீடு MT, 8-ஸ்பீடு AT |
ஹூண்டாய் ஸ்டாரியா எம்பிவி இங்கே அறிமுகப்படுத்தப்பட்டால் இந்தியாவில் ஹூண்டாயின் முதல் எம்பிவி -யாக இருக்கும்.
விலை மற்றும் போட்டியாளர்கள்
அயோனிக் 9 மற்றும் ஸ்டாரியா இந்தியாவில் வெளியிடப்படுமா இல்லையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் அவை அறிமுகப்படுத்தப்பட்டால் அயோனிக் 9 ஆனது கியா EV9 -க்கு போட்டியாக இருக்கும். மற்றும் ரூ.1.30 கோடியில் இருந்து விலை தொடங்கலாம். ஸ்டாரியா ஆனது கியா கார்னிவல் -க்கு மாற்றாக இருக்கும் மற்றும் 35 லட்சத்தில் இருந்து விலை தொடங்கலாம்.
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா-வுக்கானவை
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.