• English
  • Login / Register

ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் மக்களை கவர்ந்த ஹூண்டாயின் புதிய அறிமுகங்கள்

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் க்காக ஜனவரி 19, 2025 10:02 pm அன்று anonymous ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 53 Views
  • ஒரு கருத்தை எழுதுக

தற்போது நடைபெற்று வரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் ஹூண்டாய் நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரெட்டா எலக்ட்ரிக் காரின் விலையை அறிவித்தது.

ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் மக்களை கவர்ந்த நிறுவனங்களில் ஹூண்டாய் -ம் ஒன்றாக உள்ளது. இந்த நிகழ்வில் ஹூண்டாய் நிறுவனத்தின் காட்சி அரங்கில் எலக்ட்ரிக் கார்களை அதிகமாக பார்க்க முடிந்தது. இதனுடன் ஹூண்டாய் பிரீமியம் MPV ஒன்றையும் காட்சிப்படுத்தியது. கூடுதல் விவரங்கள் கீழே உள்ளன:

ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் அறிமுகம் 

Hyundai Creta Electric at Auto Expo 2025

ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் ஹூண்டாய் நிறுவனத்தின் சிறப்பம்சமான நிகழ்வாக கிரெட்டா எலக்ட்ரிக் அறிமுகமானது பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கிரெட்டா EV -க்கான விலை ரூ. 17.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இது ICE-பவர்டு கிரெட்டாவின் சிறப்பான விஷயங்களை அப்படியே எடுத்து அதை EV வெர்ஷனாக வழங்குகிறது. சிறிய வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகள் இந்த காரில் உள்ளன. கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள எங்கள் கட்டுரையை படிக்கவும்.

ஹூண்டாய் அயோனிக் 9 இந்தியாவில் அறிமுகமானது 

Hyundai Ioniq 9

ஹூண்டாய் மோட்டார் ஷோவில் அயோனிக் 9  மின்சார எஸ்யூவி -யை காட்சிக்கு வைத்தது. இது ஒரு தனித்துவமான வடிவமைப்பு, ஒரு ஹையர் மார்கெட் மற்றும் நடைமுறை உட்புறத்தில் ஏராளமான வசதிகள் மற்றும் கவனத்தை ஈர்க்கும் வசதிகளுடன் வருகிறது. கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள எங்கள் கட்டுரையை படிக்கவும்.

ஹூண்டாய் ஸ்டாரியா அறிமுகம் 

Hyundai Staria

ஹூண்டாய் ஸ்டாலில் மற்றொரு கவன ஈர்ப்பாளராக ஸ்டாரியா இருந்தது. கியா கார்னிவலை போன்ற ஹூண்டாயின் பதிப்பாகக் இதை கருதலாம். இது நிச்சயமாக சாலைகளில் முன்னெப்போதும் பார்க்க முடியாத வடிவமைப்பு, பிரீமியம் உட்புறம், பல இருக்கை ஆப்ஷன்கள் மற்றும் சக்திவாய்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. ஹூண்டாய் ஸ்டாரியா பற்றிய கூடுதல் விவரங்களை கார்தேக்கோவிக் செய்திகள் பக்கத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 

ஹூண்டாய் e3w மற்றும் e4w கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டது 

TVS மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து, e3w எலக்ட்ரிக் ரிக்ஷா மற்றும் e4w என்ற இரண்டு தனித்துவமான கான்செப்ட் இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தியது ஹூண்டாய் நிறுவனம். இரண்டு வாகனங்களும் தனித்துவமான வடிவமைப்புடன் வருகின்றன. இவை மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் கூட பயணிக்கும் வகையில் உள்ளன. 

ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் ஹூண்டாய் இந்தியாவின் முக்கிய அறிமுகங்கள் இவை. உங்கள் கவனத்தை ஈர்த்த கார் அல்லது கான்செப்ட் எது? கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Hyundai கிரெட்டா எலக்ட்ரிக்

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
×
We need your சிட்டி to customize your experience